உலக அழகிகளை சுமந்து செல்லும் பாக்கியம் இந்த கார்களுக்குதான்.. அப்படி என்ன சிறப்பம்சம் இந்த கார்களில்
இந்தியாவை சேர்ந்த பலர் உலக அழகி போட்டிகளில் மகுடம் சூடியுள்ளனர். இன்னும் சொல்லப்போனால், மிஸ் வேர்ல்டு பட்டத்தை அதிக முறை வென்ற நாடு இந்தியாதான் (6 முறை. வெனிசூலாவும் 6 முறை வென்றுள்ளது).
இந்தியாவை சேர்ந்த பலர் உலக அழகி போட்டிகளில் மகுடம் சூடியுள்ளனர். இன்னும் சொல்லப்போனால், மிஸ் வேர்ல்டு பட்டத்தை அதிக முறை வென்ற நாடு இந்தியாதான் (6 முறை. வெனிசூலாவும் 6 முறை வென்றுள்ளது). இப்படி உலக அளவில் நடைபெற்ற அழகி போட்டிகளில் மகுடம் சூடிய இந்திய அழகு தேவதைகளை சுமந்து செல்லும் அழகான கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஐஸ்வர்யா ராய் பச்சன்
ஐஸ்வர்யா ராய் பச்சன், கடந்த 1994ம் ஆண்டு மிஸ் வேர்ல்டு பட்டம் வென்றார். இவர் தற்போது பாலிவுட்டில் மூத்த நடிகையாக உள்ளார். ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது தினசரி பயன்பாட்டிற்கு, ஆடி ஏ8 எல் (Audi A8 L), மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் 500 (Mercedes-Benz S500) உள்ளிட்ட கார்களை பயன்படுத்தி வருகிறார்.

இவை இரண்டுமே செடான் வகை கார்கள்தான். இந்த கார்களில் ரியர் சீட் மசாஜர், ஏம்பியண்ட் லைட்டிங் என பல சொகுசு வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதனால் இவை இரண்டும் மிகவும் பிரபலமான கார்களாக விளங்குகின்றன.

ஐஸ்வர்யா ராய் பச்சனிடம் உள்ள ஆடி ஏ8 எல் காரில், 2.8 லிட்டர் வி6 (V6) இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 270 பிஎச்பி பவர் மற்றும் 580 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தி சாலைகளில் சீறிப்பாய வல்லது.

அதே சமயம் ஐஸ்வர்யா ராய் பச்சனிடம் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் 500 காரில், 4.7 லிட்டர் வி8 (V8) இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 453 பிஎச்பி பவரையும், 700 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடிய திறன் வாய்ந்தது. இந்த கார் கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

சுஷ்மிதா சென்
ஐஸ்வர்யா ராய் பச்சன் மிஸ் வேர்ல்டு பட்டம் வென்ற அதே 1994ம் ஆண்டில், சுஷ்மிதா சென் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை கைப்பற்றினார். உலகில் நடைபெறும் மிகவும் உயர்ந்த அழகி போட்டிகளில் இதுவும் ஒன்று. தமிழில் ரட்சகன் உள்பட பல பாலிவுட் படங்களில் சுஷ்மிதா சென் நடித்துள்ளார்.

பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் (BMW 5 Series) உள்பட பல கார்களை சுஷ்மிதா சென் வைத்துள்ளார். எனினும் சுஷ்மிதா சென் தனது லெக்ஸஸ் எல்எக்ஸ் 470 (Lexus LX 470), காரில் அடிக்கடி பயணிப்பார். குறிப்பாக இந்த காரை அவரேதான் ஓட்டி வருவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லெக்ஸஸ் எல்எக்ஸ் 470, எஸ்யூவி வகை கார் ஆகும். இந்த காரில், வி8 (V8) பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 238 பிஎச்பி பவர் மற்றும் 445 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தி சாலைகளில் சீறிப்பாயும்.

பிரியங்கா சோப்ரா
பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக விளங்கும் பிரியங்கா சோப்ரா, கடந்த 2000ம் ஆண்டில், மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றார். ஹாலிவுட்டிலும் பிரியங்கா சோப்ரா பிஸி என்பதால், அவ்வப்போதுதான் இந்தியா வருவார்.

அப்படி இந்தியா வரும்போதெல்லாம், பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் (BMW 5 Series), மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் (Mercedes-Benz S-Class) மற்றும் ஆடி க்யூ 7 (Audi Q7) உள்ளிட்ட கார்களை பிரியங்கா சோப்ரா பயன்படுத்துவது வழக்கம்.

எனினும் பிரியங்கா சோப்ராவிடம் உள்ள மிகவும் விலை உயர்ந்த கார் என்றால், அது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்தான். ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரின் மார்க்கெட் விலை ரூ.5 கோடிக்கும் மேல். ஆனால் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தை பொறுத்தவரை இது மிகவும் மலிவான விலை கார்களில் ஒன்று.

பிரியங்கா சோப்ராவின் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரின் இன்டீரியர் சிவப்பு நிறத்தில் தோற்றமளிக்கிறது. பிரியங்கா சோப்ராவின் விருப்பத்திற்கு ஏற்ப, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரின் இன்டீரியர்கள் சிவப்பு நிறத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

பிரியங்கா சோப்ராவிடம் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரில், 6.6 லிட்டர், வி12 (V12) இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 562 பிஎச்பி பவர் மற்றும் 780 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த வல்லது.

லாரா தத்தா
பிரியங்கா சோப்ரா மிஸ் வேர்ல்டு பட்டம் வென்ற அதே 2000ம் ஆண்டில், லாரா தத்தா மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை கைப்பற்றினார். இவர் தனது தினசரி பயன்பாட்டிற்கு, ஆடி ஏ8 எல் (Audi A8 L) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் (Mercedes-Benz E-Class) உள்ளிட்ட கார்களை பயன்படுத்துகிறார்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








