ஈக்கோஸ்போர்ட், டபிள்யூஆர்-வியை வீழ்த்தி கெத்து காட்டும் எக்ஸ்யூவி300... வெனியூ வந்தபிறகு???
கடந்த மார்ச் மாத விற்பனையில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் ஹோண்டா டபிள்யூஆர்-வி கார்களை மஹிந்திரா எக்ஸ்யூவி300 வீழ்த்தியுள்ளது.

2019ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் மொத்தம் 4,742 எக்ஸ்யூவி300 (Mahindra XUV300) கார்களை விற்பனை செய்துள்ளது. இதன்மூலம் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் (Ford EcoSport) மற்றும் ஹோண்டா டபிள்யூஆர்-வி (Honda WR-V) ஆகிய இரண்டு கார்களையும் வீழ்த்தி அசத்தியுள்ளது மஹிந்திரா எக்ஸ்யூவி300. கடந்த மார்ச் மாதத்தில், ஃபோர்டு நிறுவனத்தால் மொத்தம் 4,241 ஈக்கோஸ்போர்ட் கார்களை மட்டுமே விற்பனை செய்ய முடிந்துள்ளது. அதே சமயம் ஹோண்டா நிறுவனம் வெறும் 2,552 யூனிட் டபிள்யூஆர்-வி கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் ஹோண்டா டபிள்யூஆர்-வி கார்களை வீழ்த்தியுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரானது, இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டிற்கு புது வரவு ஆகும். மஹிந்திரா நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதிதான், எக்ஸ்யூவி300 காரை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஆனால் அதற்கு முன்னதாக ஜனவரி மாதமே எக்ஸ்யூவி300 காருக்கான புக்கிங்குகளை மஹிந்திரா நிறுவனம் தொடங்கி விட்டது.

மஹிந்திரா நிறுவனம் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, எக்ஸ்யூவி300 கார் 13,000 புக்கிங்குகளை குவித்திருந்தது. முன்னதாக கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மஹிந்திரா நிறுவனம் 4,484 எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவி கார்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் கடந்த பிப்ரவரி மாதத்தை காட்டிலும் மார்ச் மாதத்தில் எக்ஸ்யூவி300 கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது என்பதும் கவனித்தக்கது.

கார் உற்பத்தி நிறுவனங்களை பொறுத்தவரை இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட் மிகவும் லாபகரமானதாக பார்க்கப்படுகிறது. எனவே புது வரவுகளின் காரணமாக காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் நாளுக்கு நாள் போட்டி அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த சூழலில் ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) கார், வெகு விரைவில் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் காலடி எடுத்து வைக்கவுள்ளது. தற்போது வெனியூ காரின் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து டிரைவ்ஸ்பார்க் தமிழ் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஹூண்டாய் வெனியூ பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே ஹூண்டாய் வெனியூ விற்பனைக்கு அறிமுகம் ஆனபின் மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் விற்பனை எப்படி இருக்கப்போகிறது? என்பது புரியாத புதிராக உள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரில், 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் இரண்டு இன்ஜின்களிலும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் மட்டுமே உள்ளது. எனவே எக்ஸ்யூவி300 காரில் ஏஎம்டி ஆப்ஷனை வழங்க மஹிந்திரா நிறுவனம் தயாராகி வருகிறது. இதன் ஏஎம்டி வேரியண்ட் வரும் மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.


Click it and Unblock the Notifications








