மீண்டும் முதலிட அரியணையில் ஏறிய மாருதி சுஸுகி சியாஸ்... விற்பனை சரிந்தபோதும் கூட ஆச்சரியம்...

மாருதி சுஸுகி சியாஸ் மீண்டும் முதலிட அரியணையில் ஏறியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மீண்டும் முதலிட அரியணையில் ஏறிய மாருதி சுஸுகி சியாஸ்... விற்பனை சரிந்தபோதும் கூட ஆச்சரியம்...

மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz) சி-செக்மெண்ட் செடான் காரானது, கடந்த சில மாதங்களுக்கு முன் ஃபேஸ்லிஃப்டை பெற்றது. இந்த சூழலில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சி-செக்மெண்ட் செடான் ரக கார்களின் பட்டியலில், மாருதி சுஸுகி சியாஸ் மீண்டும் முதலிட அரியணையை ஏறியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் மொத்தம் 3,672 சியாஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. அதே மாதத்தில் ஹோண்டா நிறுவனத்தால் மொத்தம் 3,432 சிட்டி (Honda City) கார்களையும், ஹூண்டாய் நிறுவனத்தால் மொத்தம் 3,201 வெர்னா (Hyundai Verna) கார்களையும் மட்டுமே விற்பனை செய்ய முடிந்துள்ளது.

மீண்டும் முதலிட அரியணையில் ஏறிய மாருதி சுஸுகி சியாஸ்... விற்பனை சரிந்தபோதும் கூட ஆச்சரியம்...

ஆனால் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் மேற்கண்ட மூன்று கார் மாடல்களுமே மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளன. இதில், ஆச்சரியம் என்னவென்றால், சியாஸ் காருக்கு மாருதி சுஸுகி நிறுவனம் ஃபேஸ்லிஃப்ட்டை வழங்கியுள்ளது. அத்துடன் பல்வேறு கூடுதல் வசதிகளும், அதிக சக்தி வாய்ந்த இன்ஜினும் வழங்கப்படுகிறது. அப்படி இருந்தும் கூட மாருதி சுஸூகி சியாஸ் சரிவை சந்தித்திருப்பது ஆச்சரியமான விஷயம்தான். கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் மாருதி சுஸுகி சியாஸ் கார்களின் விற்பனை 15 சதவீதம் குறைந்துள்ளது.

மீண்டும் முதலிட அரியணையில் ஏறிய மாருதி சுஸுகி சியாஸ்... விற்பனை சரிந்தபோதும் கூட ஆச்சரியம்...

ஆனால் ஹோண்டா சிட்டி மற்றும் ஹூண்டாய் வெர்னா கார்களின் நிலை அதை விட மோசம். ஏனெனில் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது, ஹோண்டா சிட்டி கார்களின் விற்பனை 27 சதவீதமும், ஹூண்டாய் வெர்னா கார்களின் விற்பனை 23 சதவீதமும் சரிவடைந்துள்ளது. என்றாலும் இந்திய மார்க்கெட்டில் தற்போது ஒட்டுமொத்தமாகவே கார்களின் விற்பனை மிகவும் மந்தமாகதான் உள்ளது. அதன் எதிரொலிப்பாகவே இது பார்க்கப்படுகிறது.

மீண்டும் முதலிட அரியணையில் ஏறிய மாருதி சுஸுகி சியாஸ்... விற்பனை சரிந்தபோதும் கூட ஆச்சரியம்...

இதனிடையே மாருதி சுஸுகி சியாஸ் காரின் லைன் அப் முழுவதும், ட்வின் ஏர்பேக்ஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்ஸ், இபிடி உடனான ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்பீட் அலர்ட்ஸ் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன. இதன் ஹை எண்ட் வேரியண்ட்கள் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா வசதியையும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் முதலிட அரியணையில் ஏறிய மாருதி சுஸுகி சியாஸ்... விற்பனை சரிந்தபோதும் கூட ஆச்சரியம்...

மாருதி சுஸுகி சியாஸ் காரின் விலை 8.2 லட்ச ரூபாயில் (எக்ஸ் ஷோரூம்) இருந்து தொடங்குகிறது. இதன்மூலம் இந்தியாவில் கிடைக்கும் சி-செக்மெண்ட் செடான் ரக கார்களில், கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடல்களில் ஒன்றாக மாருதி சுஸுகி சியாஸை குறிப்பிடலாம். போட்டியாளர்களை காட்டிலும் சியாஸ் காரின் விற்பனை அதிகமாக இருப்பதற்கான இந்த சரியான விலை நிர்ணயமும் ஒரு காரணம் என்றால் மிகையல்ல. இதனிடையே 5ம் தலைமுறை ஹோண்டா சிட்டி கார் விரைவில் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து டிரைவ்ஸ்பார்க் தமிழ் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Most Read Articles
English summary
Maruti Suzuki Ciaz Beats Honda City, Hyundai Verna In March 2019. Read in Tamil
Story first published: Friday, April 5, 2019, 16:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X