மறைந்திருக்கும் ஆபத்து தெரியுமா? வாகனங்களில் இனி இது இருக்க கூடாது... மத்திய அரசு சூப்பர் உத்தரவு

ஆபத்தை உணராமல் வாகன உரிமையாளர்கள் பயன்படுத்தி வரும் ஒரு ஆக்ஸஸெரி இனி வாகனங்களில் இருக்க கூடாது என மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மறைந்திருக்கும் ஆபத்து தெரியுமா? வாகனங்களில் இனி இது இருக்க கூடாது... மத்திய அரசு சூப்பர் உத்தரவு

இந்தியாவில் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விரும்புகிறது. இதன் ஒரு பகுதியாக நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவில் போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

மறைந்திருக்கும் ஆபத்து தெரியுமா? வாகனங்களில் இனி இது இருக்க கூடாது... மத்திய அரசு சூப்பர் உத்தரவு

எனவே வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பார்கள் என மத்திய அரசு நம்புகிறது. இதன் மூலம் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறையும் சூழல் உருவாகியுள்ளது. இதுதவிர கார், டூவீலர் போன்ற வாகனங்களில் ஏர் பேக், ஏபிஎஸ் போன்ற பல்வேறு பாதுகாப்பு வசதிகளையும் மத்திய அரசு கட்டாயமாக்கி வருகிறது.

மறைந்திருக்கும் ஆபத்து தெரியுமா? வாகனங்களில் இனி இது இருக்க கூடாது... மத்திய அரசு சூப்பர் உத்தரவு

ஆனால் வாகன உரிமையாளர்கள் பயன்படுத்தும் சில ஆக்ஸஸெரிகள் சாலை விபத்துக்களுக்கு மிக முக்கிய காரணமாக உள்ளன. அத்துடன் சாலை விபத்துக்கள் நடந்தால், அவை உயிரிழப்பையும் ஏற்படுத்துகின்றன. க்ராஷ் கார்டுகள் (Crash Guards) போன்ற ஆக்ஸஸெரிகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம். குறிப்பாக க்ராஷ் கார்டுகளால் பெரும் ஆபத்து உள்ளது.

மறைந்திருக்கும் ஆபத்து தெரியுமா? வாகனங்களில் இனி இது இருக்க கூடாது... மத்திய அரசு சூப்பர் உத்தரவு

இவை புல் பார்கள் (Bull Bars) எனவும் அறியப்படுகின்றன. இந்த வலுவான மெட்டல் பார்கள் பொதுவாக கார் மற்றும் கனரக வாகனங்களில் பொருத்தப்படுகின்றன. மோதல்களின் போது வாகனத்திற்கு சேதாரம் ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில்தான், க்ராஷ் கார்டுகளை பலரும் பொருத்தி வருகின்றனர்.

மறைந்திருக்கும் ஆபத்து தெரியுமா? வாகனங்களில் இனி இது இருக்க கூடாது... மத்திய அரசு சூப்பர் உத்தரவு

ஆனால் வாகனம் சேதமடைந்து விடக்கூடாது என நினைக்கும் வாகன உரிமையாளர்கள், க்ராஷ் கார்டுகளால் தங்கள் உயிருக்கு ஏற்படும் ஆபத்தை மறந்து விடுகின்றனர். ஆம், சாலை விபத்துக்களின்போது ஏர் பேக் விரிவடைவதை இந்த க்ராஷ் கார்டுகள் தடுத்து விடுகின்றன. ஏர் பேக் விரிவடையாவிட்டால் என்ன நடக்கும்? என்பது உங்களுக்கே நன்கு தெரியும்.

மறைந்திருக்கும் ஆபத்து தெரியுமா? வாகனங்களில் இனி இது இருக்க கூடாது... மத்திய அரசு சூப்பர் உத்தரவு

க்ராஷ் கார்டுகளில் மறைந்திருக்கும் இந்த ஆபத்து குறித்து பலருக்கும் தெரிவதில்லை. சேதத்தில் இருந்து வாகனத்தை காப்பாற்றும் நோக்கில், தொடர்ந்து க்ராஷ் கார்டுகளை பலர் பயன்படுத்தி கொண்டே உள்ளனர். அவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், உடனடியாக உங்கள் வாகனத்தில் இருந்து க்ராஷ் கார்டுகளை அகற்றி விடுங்கள்.

மறைந்திருக்கும் ஆபத்து தெரியுமா? வாகனங்களில் இனி இது இருக்க கூடாது... மத்திய அரசு சூப்பர் உத்தரவு

ஆம், க்ராஷ் கார்டுகளை பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக அதிகாரிகள் தற்போது தீவிர நடவடிக்கையை எடுக்க தொடங்கியுள்ளனர். மோட்டார் வாகன சட்டம் 1988ன் செக்ஸன் 52ன் படி இந்த ஆக்ஸஸரியை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வாகன உரிமையாளர்கள் பலர் இந்த தடையை பொருட்படுத்தாமல் க்ராஷ் கார்டுகளை பயன்படுத்திய வண்ணமே உள்ளனர்.

மறைந்திருக்கும் ஆபத்து தெரியுமா? வாகனங்களில் இனி இது இருக்க கூடாது... மத்திய அரசு சூப்பர் உத்தரவு

எனவே இதன் விபரீதத்தை உணர்ந்து கொண்ட மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் க்ராஷ் கார்டுகளை பயன்படுத்த தடை விதித்தும், அத்தகைய வாகனங்கள் மீது கடும் நடவடிக்கையை எடுக்கவும் உத்தரவிட்டது. இதன் பேரில் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் தற்போது நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர்.

மறைந்திருக்கும் ஆபத்து தெரியுமா? வாகனங்களில் இனி இது இருக்க கூடாது... மத்திய அரசு சூப்பர் உத்தரவு

இதன்படி வாகன தணிக்கை நடத்தப்பட்டு க்ராஷ் கார்டுகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. புதிய வாகனங்களில் க்ராஷ் கார்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தால், அந்த வாகனங்களை பதிவு செய்ய ஆர்டிஓ அதிகாரிகள் மறுக்கின்றனர். அதே சமயம் பழைய வாகனங்கள் என்றால், 2,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

மறைந்திருக்கும் ஆபத்து தெரியுமா? வாகனங்களில் இனி இது இருக்க கூடாது... மத்திய அரசு சூப்பர் உத்தரவு

குறிப்பாக ஐதராபாத் நகரில் தற்போது இந்த நடவடிக்கை மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. க்ராஷ் கார்டுகள் காரணமாக வாகனங்களின் பரிமாணங்களை டிரைவர்கள் தவறாக கணக்கிட்டு விடும் அபாயமும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே க்ராஷ் கார்டுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மறைந்திருக்கும் ஆபத்து தெரியுமா? வாகனங்களில் இனி இது இருக்க கூடாது... மத்திய அரசு சூப்பர் உத்தரவு

விதிமுறைகளை மீறி க்ராஷ் கார்டுகளை பயன்படுத்தும் வாகனங்கள் கடந்த பல ஆண்டுகளாக கண்டு கொள்ளப்படாமல் இருந்து வந்தது. தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. க்ராஷ் கார்டுகளின் அபாயம் தொடர்பான விழிப்புணர்வு வாகன உரிமையாளர்களிடம் அவ்வளவாக இல்லை. எனவே அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மறைந்திருக்கும் ஆபத்து தெரியுமா? வாகனங்களில் இனி இது இருக்க கூடாது... மத்திய அரசு சூப்பர் உத்தரவு

ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதில் மத்திய அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியின் தீவிர முயற்சியால் நிறைவேற்றப்பட்ட திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் 63 விதிகள் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
RTO Officials Begins Crackdown Against Vehicles With Crash Guards. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X