தலை சுற்ற வைக்கும் சஞ்சு பாபாவின் புதிய சொகுசு கார் விலை... நம்பர் பிளேட் ரகசியம் சொல்வது இதுதான்...

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை புதிதாக வாங்கியுள்ளார். அவரது கார்களின் வழக்கமான பதிவு எண்தான் இந்த காருக்கும் பெறப்பட்டுள்ளது.

தலை சுற்ற வைக்கும் சஞ்சு பாபாவின் புதிய சொகுசு கார் விலை... நம்பர் பிளேட் ரகசியம் சொல்வது இதுதான்...

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சஞ்சய் தத் (Sanjay Dutt). இந்தியா முழுக்க இவருக்கு பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆனால் கடந்த காலங்களில் சஞ்சய் தத்தை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் உலா வந்து கொண்டிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். இதன் காரணமாக பத்திரிக்கை தலைப்பு செய்திகளில் சஞ்சய் தத்தின் பெயர் அடிக்கடி அடிபடும்.

தலை சுற்ற வைக்கும் சஞ்சு பாபாவின் புதிய சொகுசு கார் விலை... நம்பர் பிளேட் ரகசியம் சொல்வது இதுதான்...

தற்போது சஞ்சய் தத்திற்கு 59 வயதாகிறது. இதர பாலிவுட் நட்சத்திரங்களை போல் சஞ்சய் தத்தையும் லக்ஸரி கார்களின் வெறியர் என்று சொல்லலாம். இதனை நிரூபிக்கும் வகையில், புத்தம் புதிய ரேஞ்ச் ரோவர் வோக் கார் ஒன்றை சஞ்சய் தத் (Range Rover Vogue) தற்போது வாங்கியுள்ளார். இந்த புதிய உறுப்பினர் சஞ்சய் தத்தின் வீட்டை கடந்த மார்ச் 27ம் தேதி வந்தடைந்ததாக மிட் டே தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தலை சுற்ற வைக்கும் சஞ்சு பாபாவின் புதிய சொகுசு கார் விலை... நம்பர் பிளேட் ரகசியம் சொல்வது இதுதான்...

சஞ்சய் தத் வாங்கியுள்ள ரேஞ்ச் ரோவர் வோக் காரானது எஸ்யூவி (SUV) ரகத்தை சார்ந்தது. தற்போது இந்த காரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதில் காரின் முன்பகுதி மட்டுமே தெரிகிறது. இதனால் ரேஞ்ச் ரோவர் வோக் எஸ்யூவி காரின் எந்த வேரியண்ட்டை சஞ்சய் தத் வாங்கியுள்ளார்? என்பதை துல்லியமாக கணிக்க முடியவில்லை.

தலை சுற்ற வைக்கும் சஞ்சு பாபாவின் புதிய சொகுசு கார் விலை... நம்பர் பிளேட் ரகசியம் சொல்வது இதுதான்...

என்றாலும் இது ரேஞ்ச் ரோவர் வோக் லாங் வீல் பேஸ் (LWB-Long Wheelbase) டீசல் வேரியண்ட் போல் தெரிகிறது. இந்த காரின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையே 2.33 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் இந்திய மார்க்கெட்டில் தற்போது கிடைக்கும் விலை உயர்ந்த எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாக ரேஞ்ச் ரோவர் வோக் திகழ்கிறது.

தலை சுற்ற வைக்கும் சஞ்சு பாபாவின் புதிய சொகுசு கார் விலை... நம்பர் பிளேட் ரகசியம் சொல்வது இதுதான்...

பாலிவுட் திரையுலகின் மூத்த நடிகரான சஞ்சய் தத்தினுடைய பெரும்பாலான கார்களின் நம்பர் பிளேட்கள் '4545' என்ற எண்ணையே தாங்கியிருக்கும். நியூமரலாஜிப்படி 9 என வரும் வகையில், இந்த நம்பர்களை மிக நீண்ட காலமாக பயன்படுத்தி வருகிறார் சஞ்சய் தத். இந்த வரிசையில் சஞ்சய் தத் புதிதாக வாங்கியுள்ள ரேஞ்ச் ரோவர் வோக் எஸ்யூவி காருக்கும் '4545' என்ற பதிவு எண் பெறப்பட்டுள்ளது.

தலை சுற்ற வைக்கும் சஞ்சு பாபாவின் புதிய சொகுசு கார் விலை... நம்பர் பிளேட் ரகசியம் சொல்வது இதுதான்...

இது தற்போதைய தலைமுறை மாடல் ஆகும். இதன் முன்பகுதியில் பிரகாசமான எல்இடி டிஆர்எல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் கார் மிகவும் 'ஷார்ப்' ஆக காட்சியளிக்கிறது. ரேஞ்ச் ரோவர் வோக் டீசல் காரில், 4.4 லிட்டர், எஸ்டிவி8, 8-சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 3,500 ஆர்பிஎம்மில் 335 பிஎச்பி பவரையும், 1,740 ஆர்பிஎம்மில் 740 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்கும்.

தலை சுற்ற வைக்கும் சஞ்சு பாபாவின் புதிய சொகுசு கார் விலை... நம்பர் பிளேட் ரகசியம் சொல்வது இதுதான்...

இதன் இன்ஜின் சக்தியானது 8 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் வழியாக காரின் நான்கு சக்கரங்களுக்கும் அனுப்பப்படுகிறது. ரேஞ்ச் ரோவர் வோக் எஸ்யூவி காரானது, நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கு மிகவும் உகந்தது. இதில் வழங்கப்படும் கூடுதல் 'லெக் ஸ்பேஸ்' (Leg Space), பயணத்தை மிகவும் சௌகரியமானதாக மாற்றுகிறது. இந்த கார் ஆஃப் ரோடுகளிலும் சிறப்பாக செயலாற்றும்.

தலை சுற்ற வைக்கும் சஞ்சு பாபாவின் புதிய சொகுசு கார் விலை... நம்பர் பிளேட் ரகசியம் சொல்வது இதுதான்...

சஞ்சய் தத் புதிதாக வாங்கியுள்ள ரேஞ்ச் ரோவர் வோக் எஸ்யூவி கார் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இதன் இன்டீரியர் சிகப்பு நிறத்தை பெற்றுள்ளது. சஞ்சய் தத்தின் விருப்பத்திற்கு ஏற்ப இன்டீரியர் கஸ்டமைஸ் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த வெள்ளை-சிகப்பு நிற கலவையில் கார் மிகவும் கவர்ச்சியாக காட்சியளிக்கிறது.

தலை சுற்ற வைக்கும் சஞ்சு பாபாவின் புதிய சொகுசு கார் விலை... நம்பர் பிளேட் ரகசியம் சொல்வது இதுதான்...

பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் ரேஞ்ச் ரோவர் கார்கள் மீது காதல் கொண்டவர்கள். அமிதாப் பச்சன், ஷாருக்கான், ரன்பீர் கபூர், கரீனா கபூர், அஜய் தேவ்கன், மலாய்கா அரோரா உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் ரேஞ்ச் ரோவர் கார்களை பயன்படுத்தி வருகின்றனர். முன்னதாக காத்ரீனா கைப் கூட, ரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ டீசல் எல்டபிள்யூபி (Range Rover Vogue SE Diesel LWB) காரை சமீபத்தில் வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து டிரைவ்ஸ்பார்க் தமிழ் செய்தி வெளியிட்டிருந்தது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Image Courtesy: Yogen Shah

More from DriveSpark

Article Published On: Sunday, March 31, 2019, 13:15 [IST]
English summary
Sanjay Dutt Buys Range Rover Vogue Worth Rs.2.33 Crore. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+