2019 டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, பார்ச்சூனர் கார்கள் அறிமுகம்! கூடுதல் வசதிகள் சேர்ப்பு...

கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்ட 2019 டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா மற்றும் பார்ச்சூனர் கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2019 டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, பார்ச்சூனர் கார்கள் அறிமுகம்! கூடுதல் வசதிகள் சேர்ப்பு...

அப்டேட் செய்யப்பட்ட 2019 இன்னோவா கிரிஸ்டா (Innova Crysta) மற்றும் பார்ச்சூனர் (Fortuner) கார்களை டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. மெக்கானிக்கல் ரீதியாகவும், விஸ்வல் ரீதியாகவும் இவ்விரு கார்களும் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் அப்படியேதான் உள்ளன. ஆனால் 2019 வெர்ஷனில் ஒரு சில வசதிகள் மட்டும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வசதிகள் அனைத்தும் காரின் உள்ளே வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இரண்டு கார்களும் முன்பை காட்டிலும் அதிக பிரீமியம் உணர்வை வழங்குகின்றன.

2019 டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, பார்ச்சூனர் கார்கள் அறிமுகம்! கூடுதல் வசதிகள் சேர்ப்பு...

2019 டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காரின் விலை 14.93 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இதன் டாப் வேரியண்ட்டின் விலை 22.43 லட்ச ரூபாய். அதே நேரத்தில் இன்னோவா கிரிஸ்டா டூரிங் ஸ்போர்ட் (Innova Crysta Touring Sport) காரும் 2019க்காக அப்டேட் செய்யப்பட்டுள்ளது. ஸ்போர்ட்டியர் லுக்கில் காட்சி தரும் இந்த எம்பிவி காரின் விலை ரூ.18.92 லட்சம் முதல் 23.47 லட்சம் வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் 2019 மாடல் டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை 27.83 லட்ச ரூபாய். இதன் டாப் எண்ட் வேரியண்ட்டினுடைய விலை 33.60 லட்ச ரூபாய். இங்கே குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

2019 டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, பார்ச்சூனர் கார்கள் அறிமுகம்! கூடுதல் வசதிகள் சேர்ப்பு...

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா மற்றும் பார்ச்சூனர் ஆகிய இரண்டு கார்களும் தங்கள் செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகி வரும் மாடல்களில் ஒன்றாக உள்ளன. இதில், டொயோட்டா பார்ச்சூனர் கடந்த 2009ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது வரை டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்ச்சூனர் கார்களை விற்பனை செய்துள்ளது.

2019 டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, பார்ச்சூனர் கார்கள் அறிமுகம்! கூடுதல் வசதிகள் சேர்ப்பு...

அதே நேரத்தில் டொயோட்டா நிறுவனம் 8 லட்சத்திற்கும் அதிகமான இன்னோவா கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இதில், தற்போதைய இன்னோவா கிரிஸ்டா கார்களின் எண்ணிக்கை 2.25 லட்சம் ஆகும். டொயோட்டா இன்னோவா கார் கடந்த 2005ம் ஆண்டும், இன்னோவா கிரிஸ்டா 2016ம் ஆண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

2019 டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, பார்ச்சூனர் கார்கள் அறிமுகம்! கூடுதல் வசதிகள் சேர்ப்பு...

இதனிடையே 2019 வெர்ஷன் இன்னோவா கிரிஸ்டா மற்றும் பார்ச்சூனர் ஆகிய இரண்டு கார்களிலும் துளைகள் இடப்பட்ட லெதர் இருக்கைகள் மற்றும் ஹீட் ரிஜக்ஸன் க்ளாஸ் ஆகியவை ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டுள்ளன. இவை தவிர 2019 டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காரில், தனித்துவமான 'Crysta' முத்திரை மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் யுஎஸ்பி போர்ட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மறுபக்கம் இன்னோவா கிரிஸ்டா டூரிங் ஸ்போர்ட்டும், புதிய ஹீட் ரிஜக்ஸன் க்ளாஸ் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் யுஎஸ்பி போர்ட் ஆகியவற்றை பெற்றுள்ளது.

2019 டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, பார்ச்சூனர் கார்கள் அறிமுகம்! கூடுதல் வசதிகள் சேர்ப்பு...

2019 இன்னோவா கிரிஸ்டா மற்றும் பார்ச்சூனர் கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருப்பது குறித்து, டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனர் ராஜா கூறுகையில், ''நாங்கள் 'Customer First' என்ற தத்துவத்தை உறுதியாக நம்புகிறோம். வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அதற்கேற்ப இன்னும் சிறப்பான கார்களை உருவாக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். அத்துடன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தயாரிப்புகளையும், சேவையையும் வழங்கி கொண்டுள்ளோம்'' என்றார்.

More from DriveSpark

Article Published On: Monday, April 8, 2019, 15:29 [IST]
English summary
2019 Toyota Innova & Fortuner Launched In India — Prices Start At Rs 14.93 lakhs. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+