கூடுதலாக மேலும் ஒரு லக்சூரி காரை வாங்கிய விராட்... இதன் விலை தெரிந்தால் நிச்சயம் மயக்கமே ஏற்படும்!
விராட் கோஹ்லியின் கேரேஜில் மேலும்ஒரு லக்சூரி கார் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டை போலவே, கார்கள் மீதும் அலாதியான விருப்பம் கொண்டவராக இருக்கிறார். இதன்காரணமாக, இவர் கவர்ச்சிகரமான மற்றும் ஆடம்பரமான கார்களை வாங்கி குவித்துள்ளார்.

அவ்வாறு, அவரது கேரேஜில் பிஎம்டபிள்யூ உட்பட பல்வேறு சொகுசு மற்றும் லக்சூரி கார்களின் அணி வகுப்பினை பார்க்க முடியும். மேலும், சச்சின் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக இருந்து வருகிறார்.

சச்சினைப் போன்றே தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோஹ்லியும், கார்கள் மீது அதிகம் ஆர்வம் கொண்டராக இருக்கிறார். அந்த வகையில், விராட்டின் கேரேஜியிலும் லக்சூரி மற்றும் சொகுசு கார்கள் அதிகமாக காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விராட் கோஹ்லியை, ஆடி இந்தியா, அதன் பிராண்ட் அம்பாசிடராக நியமித்துள்ளது. இதன்காரணமாக, அவரது கேரேஜில் அதிகமாக ஆடி நிறுவனத்தின் சொகுசு கார்கள் உள்ளன. அவ்வாறு, அவரது கேரேஜில் பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி, லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக், ஆடி எஸ்5, ஆடி ஆர்எஸ்5, ஆடி ஆர்8 ஆகிய கார்கள் இருக்கின்றன.
முன்பாக விராட் கோஹ்லியின் கேரேஜில் எத்தனைக் கார்கள் இருக்கின்றன செய்தியைக் கூட நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், விராட் கோஹ்லியின் கேரேஜில் புதிய வரவாக மேலும் ஒரு சூப்பர் லக்சூரி கார் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில், பென்ட்லீ நிறுவனத்தின் லக்சூரி மாடலான கான்டினென்டல் ப்ளையிங் ஸ்பர் எஸ்யூவி ரக சொகுசு காரைத் தான் அவர் புதிதாக வாங்கியுள்ளார். இந்த கார் நான்கு கதவு லக்சூரி சலூன் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த கார் இந்தியாவில் வி8 மற்றும் டபிள்யூ12 ஆகிய இருவேறு எஞ்ஜின் ஆப்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதில், வி8 வேரியண்டானது புதுடில்லியில் எக்ஸ்-ஷோரூம் விலையில் ரூ. 3.41 கோடி என்றும், டபிள்யூ12 எஞ்ஜின் வேரியண்டின் விலை ரூ. 3.93 கோடியாகவும் விற்பனையாகி வருகிறது. விராட் வாங்கியிருக்கும் டாப் வேரியண்ட் பென்ட்லீ காரின் விலை ரூ. 4 கோடிக்கும் அதிகம் என கூறப்படுகிறது.

இந்த புதிய மாடல் பென்ட்லீ கான்டினென்டல் ப்ளையிங் ஸ்பர் எஸ்யூவி ரக காரைத் தவிர்த்து, அவரிடம் வெள்ளை நிற பென்ட்லீ கான்டினென்டல் காரும் உள்ளது. அந்த காரை அவர் செகண்ட் ஹேண்டாக வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்தான், தற்போது கருப்பு நிர புதிய ரக கான்டினென்டல் ப்ளையிங் ஸ்பர் எஸ்யூவி ரக காரை அவர் வாங்கியுள்ளார். இதுகுறித்த வீடியோவை எக்ஸ்ட்ரா டைம் மற்றும் வைரல் பாயனி என்ற இரு யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது.

பென்ட்லீயின் 4.0 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்ஜின் அதிகபட்சமாக 500பிஎச்பி பவரை, 6,000 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். மேலும், 660 என்எம் டார்க்கை 1,700 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். இதில், ட்வின் டர்போசார்ஜட் எஞ்ஜின், 8 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, 6.0 லிட்டர் திறன் கொண்ட டபுள்யூ12 எஞ்சின் வேரியண்ட், 626 பிஎச்பி பவர் மற்றும் 900 டார்க் திறனை வெளிப்படுத்தும். மேலும், மணிக்கு 333 கிமீ வேகத்தில் பறக்கும். இந்த காரில், பென்ட்லீ நிறுவனம் 8-ஸ்பீடு கியர்பாக்ஸை பொருத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








