முதன்முறையாக ஹூண்டாயின் விற்பனை லிஸ்ட்டில் இணைந்த டக்ஸன்...!
இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகமாகவுள்ள 2021 ஹூண்டாய் டக்ஸன் மாடல் ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனை அட்டவணையில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் அறிமுகமாகவுள்ள இந்த 2021 மாடலின் தயாரிப்பு பணிகளை வருகிற ஆகஸ்ட் மாதத்தில் துவங்க ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இந்த புதிய மாடல் என்எக்ஸ்4 என்ற குறியீட்டு பெயருடன் வெளிவரவுள்ளது. இதன் முழு விரிவாக்கம், அடுத்த நான்காம் தலைமுறை கார் என்பதாகும்.

அதாவது இதன் மூன்று தலைமுறை கார்கள் இதுவரை சர்வதேச சந்தையில் அறிமுகமாகியுள்ளன. 2021 ஹூண்டாய் டக்ஸன் மாடல், 2019 லா ஆட்டோ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஹூண்டாய் விஷன் டி கான்செப்ட்டின் அடிப்படையிலான டிசைனில் தயாரிக்கப்படவுள்ளது.

இரண்டு அடுக்கு ஹெட்லேம்ப்கள், டர்ன் இண்டிகேட்டர்களுடன் அகலமான ரேடியேட்டர் க்ரில், மாணிக்கம் போன்ற வடிவங்கள், சதுர வடிவிலான ஃபெண்டர்கள், Z-வடிவில் கேரக்டர் லைன்கள் மற்றும் அகலமான லைட் ஸ்ட்ரிப் மூலமாக இணைக்கப்பட்ட நேர்த்தியான டெயில்லேம்ப்கள் உள்ளிட்டவை இந்த 2021 மாடலின் வெளிப்புறத்தில் உள்ள முக்கியமான அம்சங்களாகும்.

வெளிப்புறத்திற்கு ஏற்ற வகையில் காரின் உட்புறத்தை ஸ்போர்ட்டியான டிசைனில் ஹூண்டாய் நிறுவனம் வழங்கியுள்ளது. இதனால் இதன் உட்புற கேபினில் ஒட்டுனர் சார்ந்த காக்பிட், வழங்கப்பட்டுள்ள தொழிற்நுட்பங்களை கட்டுப்படுத்துவதற்கு மைய கன்சோலில் சில ஸ்விட்ச்கள் மற்றும் 10.25 இன்ச் கஸ்டமைஸபிள் விர்ட்யுவல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவற்றை எதிர்பார்க்கலாம்.

இவற்றுடன் 2021 ஹூண்டாய் எலண்ட்ரா மாடலில் வழங்கப்பட்டுள்ள 10.25 இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டமும் புதிய டக்ஸன் மாடலில் இருக்கும். அதேபோல் எலண்ட்ரா மாடலின் கே3 ப்ளாட்ஃபாரத்தில் தான் இந்த 2021 மாடலும் தயாரிக்கப்படவுள்ளதால் அதன் என்ஜின் தேர்வுகளை தான் அப்படியே இந்த புதிய மாடலும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஹூண்டாய் எலண்ட்ரா கார் பெட்ரோல், டீசல் மற்றும் ஹைப்ரீட் என்ஜின்களில் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த வகையில் 1.6 லிட்டர் டி-ஜிடிஐ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் இவிஜிடி டீசல் என்ஜின்களுடன் சில ஸ்மார்ட்ஸ்ட்ரீம் பெட்ரோல் மற்றும் டீசல் மோட்டார்களையும் இந்த கார் பெறும் என கூறப்படுகிறது. ஹைப்ரீட் தேர்வில் 2.0 லிட்டர் எம்பிஐ பெட்ரோல் என்ஜின் எலக்ட்ரிக் மோட்டாருடன் வழங்கப்படவுள்ளது.
| Hyundai Venue | 3,397 | 1,863 | 3,137 |
| Hyundai Kona | 15,392 | 8,090 | 17,262 |
| Hyundai Kona (HEV) | 2,606 | 1,840 | 3,201 |
| Hyundai Kona (EV) | 3,321 | 2,066 | 3,662 |
| Hyundai Tucson (TL) | 14,964 | 13,026 | 20,065 |
| Hyundai Tucson (NX4) | - | - | 1 |
| Hyundai Nexo (FE) | 75 | 90 | 90 |
| Hyundai Santa-Fe (DM) | - | - | - |
| Hyundai Santa-Fe (TM) | 3,148 | 1,888 | 3,492 |
| Hyundai Santa-Fe (NC) | - | - | - |
| Hyundai Palisade (LX2) | 5,991 | 4,832 | 7,898 |
| Hyundai GV80 | - | 3 | - |

2021ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படும் அடுத்த தலைமுறை ஹூண்டாய் டக்ஸன் மாடல் இந்தியாவிலேயே தயாரிக்கப்படவுள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்பே சர்வதேச அளவில் அறிமுகமாகிவிட்ட டக்ஸன் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் இன்னமும் இந்திய சந்தைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








