உலகளாவிய அறிமுகத்திற்கு முன்னதாக, 2021 டொயோட்டா இன்னோவா ஃபேஸ்லிஃப்ட் காரின் விபரங்கள் கசிந்தன...

இந்த வார உலகளாவிய அறிமுகத்திற்கு முன்னதாக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் காரை பற்றிய விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

உலகளாவிய அறிமுகத்திற்கு முன்னதாக, 2021 டொயோட்டா இன்னோவா ஃபேஸ்லிஃப்ட் காரின் விபரங்கள் கசிந்தன...

டொயோட்டா இன்னோவா சுமார் 11 வருடங்களாக வழக்கமான அப்டேட்களுடன் விற்பனையில் உள்ளது. இதன் இரண்டாம் தலைமுறை கார் கடந்த 2016ல் இன்னோவா க்ரிஸ்ட்டா என்ற பெயரில் அறிமுகமானது.

உலகளாவிய அறிமுகத்திற்கு முன்னதாக, 2021 டொயோட்டா இன்னோவா ஃபேஸ்லிஃப்ட் காரின் விபரங்கள் கசிந்தன...

இதனை தொடர்ந்து இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் அடுத்த 2021ஆம் ஆண்டில் அறிமுகமாகவுள்ளது. தென் ஆசிய நாடுகளான தாய்லாந்து, வியட்நாம், இந்தோனிஷியாவில் தீவிர சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வரும் இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் முதலாவதாக இந்தோனிஷியாவில் தான் விற்பனைக்கு செல்லவுள்ளது.

உலகளாவிய அறிமுகத்திற்கு முன்னதாக, 2021 டொயோட்டா இன்னோவா ஃபேஸ்லிஃப்ட் காரின் விபரங்கள் கசிந்தன...

இதனால் அந்த நாட்டின் ஷோரூம்களுக்கு 2021 இன்னோவா க்ரிஸ்ட்டாவை அனுப்பி வைக்கும் பணியினை ஏற்கனவே டொயோட்டா நிறுவனம் துவங்கிவிட்டது. இந்தியாவில் டொயோட்டாவின் இந்த 2021 மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகலாம்.

உலகளாவிய அறிமுகத்திற்கு முன்னதாக, 2021 டொயோட்டா இன்னோவா ஃபேஸ்லிஃப்ட் காரின் விபரங்கள் கசிந்தன...

இந்த நிலையில்தான் தற்போது இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் குறித்த விபரங்கள் ரஷ்லேன் செய்திதளம் மூலமாக இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்த ஆவண படங்களில் உள்ளதை போன்றுதான் கிட்டத்தட்ட 2021 இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் கார் நம் நாட்டில் விற்பனைக்கு வரும்.

உலகளாவிய அறிமுகத்திற்கு முன்னதாக, 2021 டொயோட்டா இன்னோவா ஃபேஸ்லிஃப்ட் காரின் விபரங்கள் கசிந்தன...

காரின் வெளிப்புற மற்றும் உட்புற தோற்றங்கள் மாற்றப்பட்டிருந்தாலும், இன்னோவாவின் என்ஜின் சமீபத்தில்தான் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்டதால் என்ஜின் தேர்வுகளில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. வெளிப்புற அப்டேட்களாக காரின் முன்பகுதி முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய அறிமுகத்திற்கு முன்னதாக, 2021 டொயோட்டா இன்னோவா ஃபேஸ்லிஃப்ட் காரின் விபரங்கள் கசிந்தன...

க்ரில் அமைப்பு வழக்கம்போல் அறுகோண வடிவில் இருந்தாலும், இந்த அமைப்பு கூர்மையான முனைகளுடன் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. புதிய முன்பக்க பம்பர் டிசைன், ஃபாக் விளக்குகள் பம்பருக்கும் புதிய எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்களுக்கும் மிகவும் ஏற்ற வடிவில் வழங்கப்பட்டுள்ளன.

உலகளாவிய அறிமுகத்திற்கு முன்னதாக, 2021 டொயோட்டா இன்னோவா ஃபேஸ்லிஃப்ட் காரின் விபரங்கள் கசிந்தன...

வெள்ளை உள்ளிட்ட நிறங்களில் சோதனைகளின் போது அடையாளப்படுத்தப்பட்டிருந்த இன்னோவா ஃபேஸ்லிஃப்ட் காரின் உடல் நிறத்திலேயே க்ரில்லின் மேற்புறமும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் 2021 இன்னோவா புதிய டிசைனில் அலாய் சக்கரங்களை பெற்றுள்ளது.

உலகளாவிய அறிமுகத்திற்கு முன்னதாக, 2021 டொயோட்டா இன்னோவா ஃபேஸ்லிஃப்ட் காரின் விபரங்கள் கசிந்தன...

உட்புறத்தில் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட்டாக ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவுடன் இணைக்கக்கூடிய 9 இன்ச்சில் பெரியளவில் தொடுத்திரை உடன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், திருத்தியமைக்கப்பட்ட இருக்கைகள் மற்றும் கேபின் அப்டேட்களை டொயோட்டா நிறுவனம் வழங்கியுள்ளது.

உலகளாவிய அறிமுகத்திற்கு முன்னதாக, 2021 டொயோட்டா இன்னோவா ஃபேஸ்லிஃப்ட் காரின் விபரங்கள் கசிந்தன...

டாப் வேரியண்ட்களில் பார்க் செய்வதற்கு உதவும் 360 டிகிரி கேமிரா உடன் வயர்லெஸ் சார்ஜிங் வழங்கப்படலாம். ஏற்கனவே கூறியதுபோல், இன்னோவாவின் 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.4 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வுகளில் மாற்றம் இருக்காது. இந்த பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளுடன் ட்ரான்ஸ்மிஷனுக்கு மேனுவல் உடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்படுகின்றன.

உலகளாவிய அறிமுகத்திற்கு முன்னதாக, 2021 டொயோட்டா இன்னோவா ஃபேஸ்லிஃப்ட் காரின் விபரங்கள் கசிந்தன...

2021 இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய எக்ஸ்ஷோரூம் விலை தற்போதைய விலையை காட்டிலும் சற்று ப்ரீமியமாக நிர்ணயிக்கப்படலாம். டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் விலை தற்சமயம் ரூ.15.66 லட்சத்தில் இருந்து ரூ.24.67 லட்சம் வரையில் உள்ளது. புதிய இன்னோவா ஃபேஸ்லிஃப்ட் காருக்கும் மஹிந்திரா மராஸ்ஸோ மற்றும் கியா கார்னிவல் போட்டியினை தொடர்ந்து அளிக்கவுள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 14, 2020, 12:34 [IST]
English summary
Toyota Innova Crysta Facelift Brochure Leaks Ahead Of Debut This Week
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+