கண்ணிமைக்கும் நேரத்தில் குறுக்கே வந்த கார்... விலையுயர்ந்த காரை நொடிப்பொழுதில் காப்பாற்றிய ஏபிஎஸ்...

ஏபிஎஸ் அம்சத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் ஓர் வீடியோ வெளியாகியுள்ளது. அதுகுறித்த தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

கண்ணிமைக்கும் நேரத்தில் குறுக்கே வந்த கார்... விலையுயர்ந்த காரை நொடிப்பொழுதில் காப்பாற்றிய ஏபிஎஸ்... வீடியோ!

இந்தியாவில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்காக மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு புதிய விதிகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், ஒவ்வொரு நாளும் வாகன விபத்துகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. இதில், பெரும்பாலான விபத்துகள் வாகன ஓட்டுநர்களின் அஜாக்ரதையாலும், கவனக்குறைவாலுமே அரங்கேறுகின்றன.

கண்ணிமைக்கும் நேரத்தில் குறுக்கே வந்த கார்... விலையுயர்ந்த காரை நொடிப்பொழுதில் காப்பாற்றிய ஏபிஎஸ்... வீடியோ!

இம்மாதிரியான சூழ்நிலையை சரிபட கையாளும் விதமாக பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய பாதுகாப்பு விதியாக சேர்க்கப்பட்டதுதான் சிபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் அம்சங்கள். இதனை மத்திய அரசு அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயப்படுத்தியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் குறுக்கே வந்த கார்... விலையுயர்ந்த காரை நொடிப்பொழுதில் காப்பாற்றிய ஏபிஎஸ்... வீடியோ!

இவையிரண்டுமே அதி நவீன பிரேக்கிங் அம்சங்கள் ஆகும். 125 சிசிக்கும் குறைந்த திறனுடைய வாகனங்களில் சிபிஎஸ் அம்சமும், 125 சிசி-யைக் காட்டிலும் கூடுதல் திறனுடைய வாகனங்களில் ஏபிஎஸ் வசதியும் கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது.

கண்ணிமைக்கும் நேரத்தில் குறுக்கே வந்த கார்... விலையுயர்ந்த காரை நொடிப்பொழுதில் காப்பாற்றிய ஏபிஎஸ்... வீடியோ!

இந்த அம்சத்தை ஏன் அரசு முக்கியம் என்று கூறியுள்ளது என்பதற்கான காரணத்தைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். குறிப்பாக ஏபிஎஸ் பிரேக்கிங் அம்சத்தின் பயனையே இதில் பார்க்க உள்ளோம். இதுகுறித்த வீடியோவை தேவ்ஜித் கானிகர் என்ற நபர் அவரது யுடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் குறுக்கே வந்த கார்... விலையுயர்ந்த காரை நொடிப்பொழுதில் காப்பாற்றிய ஏபிஎஸ்... வீடியோ!

அந்த வீடியோவில், காலியாக இருக்கும் சாலையில் கியா செல்டோஸ் காரொன்று நடுநிலையான வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கின்றது. அதே சீரான வேகத்தில் அந்த பாதையில் இருந்த ஓர் பாலத்தையும் அது கடக்கின்றது. இந்த நேரத்தில் பாலத்தின் இறுதியில் இருந்த மற்றுமொரு இணைப்பில் இருந்து சாலையின் வழியாக செவ்ரோலே பீட் கார் ஒன்று திடீரென கண் மூடித்தனமாக நுழைந்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் குறுக்கே வந்த கார்... விலையுயர்ந்த காரை நொடிப்பொழுதில் காப்பாற்றிய ஏபிஎஸ்... வீடியோ!

இதனைச் சற்றும் எதிர்பார்க்காத செல்டோஸ் காரின் ஓட்டுநர், உடனடியாக செயல்பட்டு காரை சாலையோரமாக திருப்பி வேகத்தைக் கட்டுபடுத்தினார். இந்த உடனடி செயல்பாட்டிற்கு காரில் இருந்த ஏபிஎஸ் வசதியே மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. உண்மையைக் கூற வேண்டுமானால், ஏபிஎஸ் அல்லாத பிரேக் இந்த இடத்தில் இருந்திருந்தால் சற்று லேசான ஜர்க் மற்றும் உராய்வையும் ஏற்படுத்தியிருக்கும். ஏன், பெரும் விபத்தைக் கூட ஏற்படுத்தியிருக்கலாம்.

ஆனால், இதில் எதையுமே ஏற்படுத்தாமல் மிக சீரான நிலையில் காரைக் கட்டுப்படுத்த ஏபிஎஸ் உதவியுள்ளது. இந்த காரணத்தினாலயே முக்கிய பாதுகாப்பு அம்சமாக இதனை (சிபிஎஸ், ஏபிஎஸ்) வாகனங்களில் சேர்க்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆகையால், தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்படும் வாகனங்களில் இந்த அம்சம் கூடுதல் பாதுகாப்பு அம்சமாக சேர்க்கப்பட்டு வருகின்றது.

கண்ணிமைக்கும் நேரத்தில் குறுக்கே வந்த கார்... விலையுயர்ந்த காரை நொடிப்பொழுதில் காப்பாற்றிய ஏபிஎஸ்... வீடியோ!

இந்த சம்பவத்தில் கியா செல்டோஸ் காரின் உரிமையாளரும் கவனமாக செயல்படாமல் இருந்திருந்தால் நிலைமை மிக மோசமானதாக மாறியிருக்கும். அதேசமயம், ஏபிஎஸ் வசதி இல்லாத நிலை இருந்திருந்தாலும் பல்வேறு இழப்புகள் ஏற்பட்டிருக்கும். எனவே, இவர்கள் ஏபிஎஸ் வசதிக்குதான் நன்றி கூற வேண்டும். மிகப் பெரிய இழப்புகளை அது தவிர்த்திருக்கின்றது.

கண்ணிமைக்கும் நேரத்தில் குறுக்கே வந்த கார்... விலையுயர்ந்த காரை நொடிப்பொழுதில் காப்பாற்றிய ஏபிஎஸ்... வீடியோ!

தவறு யார் மீது?

வீடியோவைப் பார்த்த அனைவருமே பச்சை நிறம் கொண்ட செவ்ரோலே பீட் காரைதான் குறிப்பிடுவர். ஏனெனில் அந்த கார்தான் சாலையில் நுழைவதற்கு முன்னர் வலது, இடது பார்க்காமல் வந்த வேகத்திலேயே திரும்பியது. இதைச் சுதாகரித்துக் கொண்ட கியா செல்டோஸ் கார் டிரைவர் சமயோஜிதமாக செயல்பட்டு பெரும் விபத்தை தவிர்த்தார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் குறுக்கே வந்த கார்... விலையுயர்ந்த காரை நொடிப்பொழுதில் காப்பாற்றிய ஏபிஎஸ்... வீடியோ!

இதனால்தான் சாலையில் செல்லும்போது கட்டுப்படுத்தக் கூடிய வேகத்தில், அதிக கவனத்துடன் செல்ல வேண்டும் என கூறப்படுகின்றது.

சிபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் அம்சங்கள் வழுப்பான சாலைகளில்கூட சீரான நிறுத்தத்தை (பிரேக்) ஏற்படுத்த உதவும். இந்த அம்சம்குறித்து கூடுதலாக அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

கண்ணிமைக்கும் நேரத்தில் குறுக்கே வந்த கார்... விலையுயர்ந்த காரை நொடிப்பொழுதில் காப்பாற்றிய ஏபிஎஸ்... வீடியோ!

ஏபிஎஸ் அம்சத்தைப் புதிய வாகனங்கள் அனைத்திலும் நம்மால் பெற முடியும். இதைக் கொண்டிருக்கும் வாகனங்கள் கூடுதல் விலையைக் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அம்மாதிரியான அதிக பாதுகாப்பு வசதிகளுடன் விற்பனையாகும் கார்தான் கியா நிறுவனத்தின் செல்டோஸ். ஆனால், நம்ப முடியாத குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

கண்ணிமைக்கும் நேரத்தில் குறுக்கே வந்த கார்... விலையுயர்ந்த காரை நொடிப்பொழுதில் காப்பாற்றிய ஏபிஎஸ்... வீடியோ!

இந்தியாவில் கியா நிறுவனம் களமிறக்கிய முதல் கார் இதுவே ஆகும். குறைந்த விலையில் பல்வேறு அம்சங்களை இது கொண்டிருப்பதால் அறிமுகம் செய்யப்பட்டு மிக குறைந்த நாட்களிலேயே தலை சிறந்த விற்பனையைப் பெறும் மாடலாக இது உருமாறியுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
ABS Saves Kia Seltos - Video. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X