காவலர்கள் பயணிக்க பல கோடி மதிப்பில் காரை வாங்கிய அம்பானி... விலையை கேட்டு மெர்சலான மும்பை வாசிகள்!

தன்னுடைய காவலர்கள் பயணிக்க பல கோடி ரூபாய் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் லேண்ட் ரோவர் வோக் காரை புதிதாக அம்பானி வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

காவலர்கள் பயணிக்க பல கோடி மதிப்பில் காரை வாங்கிய அம்பானி... விலையை கேட்டு மெர்சலான மும்பை வாசிகள்!

நாட்டின் மிக முக்கியமான பணக்காரர் என்பதால் முகஷ் அம்பானிக்கு அரசு தரப்பில் அதிக பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. ஓர் மாநிலத்தின் முதல்வருக்கு இணையான பாதுகாப்பு வசதிகள் அவருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் அரசு வழங்கி வருகின்றது.

காவலர்கள் பயணிக்க பல கோடி மதிப்பில் காரை வாங்கிய அம்பானி... விலையை கேட்டு மெர்சலான மும்பை வாசிகள்!

இவர் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். இதுமட்டுமின்றி உலக பணக்காரர்கள் பட்டியலில் 7வது பணக்காரராக இவர் இருப்பதன் காரணத்தினாலும் இந்திய அரசு முகேஷ் அம்பானிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் ஆயுதம் ஏந்திய காவலர்களின் இசட்+ பாதுகாப்பு அவருக்கு வழங்கப்படுகின்றது.

காவலர்கள் பயணிக்க பல கோடி மதிப்பில் காரை வாங்கிய அம்பானி... விலையை கேட்டு மெர்சலான மும்பை வாசிகள்!

இதுதவிர முகேஷ் அம்பானியின் வாகன கான்வாயில் அதி நவீன மற்றும் அதிக பாதுகாப்பு திறன் கொண்ட கார்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் புதிதாக விலையுயர்ந்த கார் ஒன்று கூடுதலாக இணைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த புகைப்படத்தை மிஸ்டர் ஜெயின் எனும் இன்ஸ்டா பயனர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

காவலர்கள் பயணிக்க பல கோடி மதிப்பில் காரை வாங்கிய அம்பானி... விலையை கேட்டு மெர்சலான மும்பை வாசிகள்!

முகேஷ் அம்பானியின் பாதுகாப்பிற்காக புதிதாக இணைக்கப்பட்டிருக்கும் அக்கார் லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் வோக் (Land Rover Range Rover Vogue) மாடல் ஆகும். இக்கார், இந்தியாவில் ரூ. 2 கோடி முதல் ரூ. 3.5 கோடி வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகின்றது.

காவலர்கள் பயணிக்க பல கோடி மதிப்பில் காரை வாங்கிய அம்பானி... விலையை கேட்டு மெர்சலான மும்பை வாசிகள்!

இந்த உச்சபட்ச விலைக் கொண்ட காரைதான் அம்பானி தனது பாதுகாப்பிற்கான வாகனமாக புதிதாக களமிறக்கியுள்ளார். அதாவது தன்னுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தன் காருக்கு முன்பாக கான்வாயில் வலம் வரும் கார்களின் வரிசையில் புதிய லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் வோக் மாடல் காரை அவர் இணைத்துள்ளார்.

காவலர்கள் பயணிக்க பல கோடி மதிப்பில் காரை வாங்கிய அம்பானி... விலையை கேட்டு மெர்சலான மும்பை வாசிகள்!

இந்த கார் மட்டுமின்றி இவருடைய கான்வாயில் பாதுகாப்பிற்காக பல்வேறு அதிக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கார்கள் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில் முகேஷ் அம்பானியின் கான்வாய்க்காக பயன்படுத்தும் கார்களின் பட்டியல்; லேண்ட் ரோவர் டிஸ்கவரி, பிஎம்டபிள்யூ எக்ஸ்5, ஃபோர்டு என்டீயோவர், மஹிந்திரா ஸ்கார்பியோ, டொயோட்டா ஃபார்ச்சூனர், ஹோண்டா சிஆர்-வி இவையே ஆகும்.

காவலர்கள் பயணிக்க பல கோடி மதிப்பில் காரை வாங்கிய அம்பானி... விலையை கேட்டு மெர்சலான மும்பை வாசிகள்!

இந்த கார்களின் வரிசையிலேயே புதிதாக இரண்டும் கோடிக்கும் அதிகமான மதிப்புடைய ரேஞ்ஜ் ரோவர் லேண்ட் ரோவர் வோக் கார் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த காரில் போலீஸ் என்ற எழுத்துக்களும், அதன் மேலே ஃபிளாஷர் மின் விளக்குகளும் இடம்பெற்றிருப்பதை நம்மால் காண முடிகின்றது.

காவலர்கள் பயணிக்க பல கோடி மதிப்பில் காரை வாங்கிய அம்பானி... விலையை கேட்டு மெர்சலான மும்பை வாசிகள்!

எனவே, பல கோடி மதிப்புள்ள அந்த காரை அம்பானியின் பாதுகாப்பு அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்த இருக்கின்றனர். இதைதான் போலீஸ் எழுத்து மற்றும் சைரன்கள் உறுதி செய்கின்றன. புதிதாக களமிறக்கப்பட்டிருக்கும் கார், லேண்ட் ரோவரின் எந்த வெர்ஷன் என்பது உறுதியாக தெரியாத காரணத்தால், அக்காரின் துள்ளியமான விலை மற்றும் எஞ்ஜின் திறன் பற்றிய தகவலை கூற முடியவில்லை.

காவலர்கள் பயணிக்க பல கோடி மதிப்பில் காரை வாங்கிய அம்பானி... விலையை கேட்டு மெர்சலான மும்பை வாசிகள்!

முகேஷ் அம்பானியும், அவரது குடும்பத்தாரும் வாகனங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர். எனவேதான் அவர்களின் மும்பை அண்டிலியா இல்லத்தில் கார்களுக்கு என்றே தனி தளங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. அதில்தான், இதுவரை நாம் கண்டிராத அரிய வகை சொகுசு கார்கள் அணி வகுக்கப்பட்டுள்ளன.

காவலர்கள் பயணிக்க பல கோடி மதிப்பில் காரை வாங்கிய அம்பானி... விலையை கேட்டு மெர்சலான மும்பை வாசிகள்!

மேலும், புதிய ரேஞ்ச் ரோவர் லேண்ட் ரோவர் வோக் காரைப் போலவே மிக சமீபத்தில், முகேஷ் அம்பானி தனது பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் எஸ்600 குவார்ட் காரை களமிறக்கினார். இந்த கார்குறித்த சுவாரஷ்ய தகவல்களை அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

காவலர்கள் பயணிக்க பல கோடி மதிப்பில் காரை வாங்கிய அம்பானி... விலையை கேட்டு மெர்சலான மும்பை வாசிகள்!

பென்ஸ் எஸ்600 குவார்ட் பற்றிய தகவல் அலையே இன்னும் ஓயாத நிலையில் புதிதாக மற்றுமொரு விலையுயர்ந்த கார் தற்போது களமிறக்கப்பட்டிருக்கின்றது. அதேசமயம், இக்கார் ஏற்கனவே (கடந்த சில மாதங்களுக்கு முன்) களமிறக்கப்பட்டுவிட்டதாகவும், இப்போதே முதல் முறையாக வெளியுலகின் கண்களில் அக்கார் தென்பட்டிருப்பதும் ஒரு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
 
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Ambani New Security Guard Range Rover Car. Read In Tamil.
Story first published: Friday, August 28, 2020, 17:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X