Just In
- 4 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 4 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 6 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 7 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நீங்க நினைக்கிறது ரொம்ப தப்பு... டிரைவர் பத்திரமா இருக்கிறார்... பெருமைப்படுங்க இது இந்திய தயாரிப்பு!
அப்பளம்போல் நொறுங்கிய காரில் இருந்து அதன் ஓட்டுநர் பத்திரமாக மீண்டு வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் சிறப்பு தகவலை இப்பதிவில் காணலாம்.

மஹிந்திரா நிறுவனத்தின் பிரபலமான கார் மாடல்களில் எக்ஸ்யூவி 500 காரும் ஒன்று. இந்த காரே அதில் பயணித்தவர்களைப் பெரும் விபத்தில் இருந்து காப்பாற்றியிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. பீஹார் மாநிலத்தின், தர்பாங்கா எனும் பகுதியிலேயே இந்த விபத்து சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.

விபத்தில் அப்பளம் போல் நொறுங்கிக் கிடக்கும் காரைப் பார்க்கையில் பெரும் விபரீதம் நிகழ்ந்திருக்கும் என நினைக்கத் தோன்றுகின்றது. பெரும்பாலானோரின் எண்ணம் இதுவாகவே இருக்கின்றது. ஆனால், நம்முடைய எண்ணத்தை தவிடு பொடியாக்குகின்ற வகையில், இந்த சம்பவத்தில் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆமாங்க, காரில் இருந்த பாதுகாப்பு கவசங்கள் அதன் பயணிகளைப் பத்திரமாக காப்பாற்றியிருக்கின்றது. காரின் பக்கவாட்டு பகுதி முழுமையாக உருக்குலைந்து காட்சியளிக்கின்றநிலையில் அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர் என தகவல் வெளியாகியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்திருக்கின்றது. மேலும், இந்த கார் இவ்வளவு பாதுகாப்பு திறன் வாய்ந்ததா என்ற பிரம்மிப்பையும் எழும்ப செய்திருக்கின்றது.

மஹிந்திரா நிறுவனம் இக்காரில் பயணிகளின் பாதுகாப்பு வசதிக்காக பல்வேறு அம்சங்களை வழங்கியிருக்கின்றது. ஏர் பேக், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி, அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக் என பல சிறப்பு வசதிகள் இக்காரில் இடம்பெற்றிருக்கின்றன. இந்த அம்சங்களே தற்போது காரில் பயணித்தவர்களைப் பெரும் விபத்தில் இருந்து காப்பாற்றியிருக்கின்றது.

இக்கார், ஏசியன் என்சிஏபி அமைப்பு நிகழ்த்திய மோதல் பரிசோதனையில் நான்கு நட்சத்திர ரேட்டிங்கைப் பெற்ற கார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதை நிஜ வாழ்க்கையில் உறுதிப்படுத்தும் வகையில் இக்கார் பெரும் விபத்தில் இருந்து தன்னுள் பயணித்தவர்களை பத்திரமாக பாதுகாத்திருக்கின்றது.

இந்தியர்கள் மத்தியில் நல்ல வரேவற்பைப் பெற்று வரும் மஹிந்திர கார்களில் எக்ஸ்யூவி 500 காரும் ஒன்று. இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இந்த காரையே மஹிந்திரா நிறுவனம் தற்போது நவீன யுகத்திற்கு புதுப்பித்து வருகின்றது. விரைவில் இந்த புதுப்பிக்கப்பட்டு வரும் இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கின்றது.

இம்மாதிரியான சூழ்நிலையில் இந்தியர்களின் மனதைக் கவருகின்ற வகையில் அதன் பாதுகாப்பு தரத்தை மஹிந்திரா எக்ஸ்யூவி500 நிரூபித்திருக்கின்றது. புதிய தலைமுறையாக அப்கிரேட்டாகி வரும் எக்ஸ்யூவி காரில் கூடுதல் சிறப்பு வசதிகளாக 2ம் லெவல் தானியங்கி ஓட்டுநர் தொழில்நுட்பம், டிஜிட்டல் காக்பிட், பிரீமியம் வசதிகள் என எண்ணற்ற அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

இந்திய சாலைகளைப் பொருத்தவரை விபத்து என்பது மிகவும் வழக்கமான நிகழ்வுகளில் ஒன்றாக மாறி வருகின்றது. இதனைத் தவிர்க்க நினைத்தாலும் விதிமீறல் வாதிகளின் கட்டுக்கடங்கா நிலைப்பாட்டின் காரணமாக ஒவ்வொரு நாளும் அதிக எண்ணிக்கையில் விபத்துகள் அரங்கேறிய வண்ணம் இருக்கின்றன. இதனால் மஹிந்திரா நிறுவனத்தின் இதுமாதிரியான பாதுகாப்பான கார்களைப் பயன்படுத்துவது கட்டாயமாக மாறியிருக்கின்றது. இதற்கேற்ப இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் பாதுகாப்பான கார்களைப் பற்றி அறிந்து கொள்ளே இங்கே க்ளிக் செய்யவும்.