புதிய ஹூண்டாய் ஐ20 காரின் அறிமுக தேதி வெளியானது... புக்கிங் நாளை துவங்குகிறது!

பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் இந்தியர்களின் நம்பர்-1 தேர்வாக ஹூண்டாய் எலைட் ஐ20 கார் இருந்து வருகிறது. இந்த நிலையில், வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்டு புதிய தலைமுறை மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. வரும் நவம்பர் 5ந் தேதி இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

புதிய ஹூண்டாய் ஐ20 காரின் அறிமுக தேதி வெளியானது... புக்கிங் நாளை துவங்குகிறது!

பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் இந்தியர்களின் நம்பர்-1 தேர்வாக ஹூண்டாய் எலைட் ஐ20 கார் இருந்து வருகிறது. இந்த நிலையில், வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்டு புதிய தலைமுறை மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹூண்டாய் ஐ20 காரின் அறிமுக தேதி வெளியானது... புக்கிங் நாளை துவங்குகிறது!

அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன், முற்றிலும் புதிய டிசைனில் வர இருப்பதால், இந்திய வாடிக்கையாளர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று இந்த காரின் மாதிரி படங்கள் வெளியிடப்பட்டன.

புதிய ஹூண்டாய் ஐ20 காரின் அறிமுக தேதி வெளியானது... புக்கிங் நாளை துவங்குகிறது!

இதைத்தொடர்ந்து, இன்று இரண்டு புதிய படங்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன், இந்த புதிய மாடலுக்கு நாளை முதல் முன்பதிவு துவங்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அத்துடன், வரும் நவம்பர் 5ந் தேதி இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

புதிய ஹூண்டாய் ஐ20 காரின் அறிமுக தேதி வெளியானது... புக்கிங் நாளை துவங்குகிறது!

புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு ரூ.21,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள முடியும். முதலில் முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்த கார் டெலிவிரி கொடுக்கப்பட உள்ளது. ஹூண்டாய் டீலர்கள் அல்லது இணையதளம் மூலமாக இந்த காருக்கான முன்பதிவு ஏற்கப்படும் என்று ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

புதிய ஹூண்டாய் ஐ20 காரின் அறிமுக தேதி வெளியானது... புக்கிங் நாளை துவங்குகிறது!

புதிய ஹூண்டாய் ஐ20 காரின் டிசைன் முற்றிலுமாக மாற்றப்பட்டு இருக்கிறது. மிக வலிமையான க்ரில், பம்பர் அமைப்புடன் முகப்பு வசீகரிக்கிறது. பின்புறத்திலும் டெயில் லைட்டுகள் மிக வித்தியாசமான முறையில் கூர்மையான முனைகளுடன் கூடிய வடிவமைப்பை பெற்றிருக்கிறது. புதிய அலாய் வீல்கள் இந்த காரின் வசீகரத்தை கூட்டுவதாக இருக்கும்.

புதிய ஹூண்டாய் ஐ20 காரின் அறிமுக தேதி வெளியானது... புக்கிங் நாளை துவங்குகிறது!

இந்த காரில் இன்டர்நெட் வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படும். இதன்மூலமாக ஏராளமான வசதிகளை ஸ்மார்ட்வாட்ச் அல்லது ஸ்மார்ட்ஃபோன் செயலி மூலமாக கட்டுப்படுத்தும் வசதியை வாடிக்கையாளர்கள் பெற முடியும். டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், ஏர் பியூரிஃபயர் உள்ளிட்ட ஏராளமான நவீன வசதிகளுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஹூண்டாய் ஐ20 காரின் அறிமுக தேதி வெளியானது... புக்கிங் நாளை துவங்குகிறது!

ஹூண்டாய் வெனியூ காரில் வழங்கப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள்தான் இந்த காரிலும் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த எஞ்சின்களுடன் மேனுவல் கியர்பாக்ஸ், ஐஎம்டி கியர்பாக்ஸ், டிசிடி கியர்பாக்ஸ் மற்றும் சாதாரண வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன.

புதிய ஹூண்டாய் ஐ20 காரின் அறிமுக தேதி வெளியானது... புக்கிங் நாளை துவங்குகிறது!

புதிய ஹூண்டாய் ஐ20 கார் போலார் ஒயிட், தைபூன் சில்வர், டைட்டன் க்ரே, ஃபியரி ரெட், ஸ்டாரி நைட் மற்றும் மெட்டாலிக் காப்பர் ஆகிய ஒற்றை வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். கருப்பு வண்ண கூரையுடன் போலார் ஒயிட் மற்றும் ஃபியரி ரெட் என இரண்டு இரட்டை வண்ணத் தேர்வுகளும் வழங்கப்பட உள்ளன.

புதிய ஹூண்டாய் ஐ20 காரின் அறிமுக தேதி வெளியானது... புக்கிங் நாளை துவங்குகிறது!

புதிய ஹூண்டாய் ஐ20 கார் ரூ.6.50 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஹூண்டாய் ஐ20 கார் மேக்னா, ஸ்போர்ட்ஸ் அஸ்ட்டா, அஸ்ட்டா ஆப்ஷனல் ஆகிய வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். மாருதி பலேனோ, டெயோட்டா க்ளான்ஸா, டாடா அல்ட்ராஸ், ஹோண்டா ஜாஸ் கார்களுடன் போட்டி போடும்.

Most Read Articles

English summary
Hyundai is all set to launch new gen Elite i20 car in India by November 5, ahead of diwali festival.
Story first published: Tuesday, October 27, 2020, 17:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X