தந்தைக்கு பிறந்த நாள்! இரு சூப்பர் கார்களால் ஆச்சரியப்படுத்திய சாதாரண இளைஞர்... எப்படி தெரியுமா?

தந்தையின் பிறந்தாளை ஒட்டி ஒரே நேரத்தில் இரு சூப்பர் கார்களை இளைஞர் ஒருவர் (அவரது மகன்) களமிறக்கியிருக்கின்றார். இதற்காக அவர் என்ன செய்தார் என தெரிந்தால் நிச்சயம் ஆச்சரியமடைவீர்கள்.

தந்தைக்கு பிறந்த நாள்! ஒரே நேரத்தில் இரு சூப்பர் கார்களை களமிறக்கிய மகன்... இதற்காக அவர் என்ன செய்தார் தெரியுமா?

இளைஞர்கள் பலரின் கனவு வாகனமாக ஃபெர்ராரி மற்றும் லம்போர்கினி ஆகிய நிறுவனங்களின் சூப்பர் கார்கள் இருந்து வருகின்றன. அந்த கார்கள் வாங்க முடியாத மிக அதிக விலையைக் கொண்டிருப்பதால், அவற்றின் புகைப்படங்கள் மட்டுமே பலரின் அறையை அலங்கரித்து வருகின்றன.

தந்தைக்கு பிறந்த நாள்! ஒரே நேரத்தில் இரு சூப்பர் கார்களை களமிறக்கிய மகன்... இதற்காக அவர் என்ன செய்தார் தெரியுமா?

இருப்பினும், ஒரு முறையாவது அந்த காரை தங்களது வாழ்நாளில் இயக்கிவிட வேண்டும் என்ற ஆவலில் கோடிக்கணக்கானோர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த கோடிக்கணக்கானோர்களில் ஒருவராக இருந்து வந்த இந்தியர் ஒருவருக்கு, லம்போர்கினி மற்றும் ஃபெர்ராரி ஆகிய சூப்பர் கார்களை இயக்கும் பாக்கியம் கிடைத்துள்ளது.

தந்தைக்கு பிறந்த நாள்! ஒரே நேரத்தில் இரு சூப்பர் கார்களை களமிறக்கிய மகன்... இதற்காக அவர் என்ன செய்தார் தெரியுமா?

ஆம், இளைஞர் ஒருவர் தந்தையின் பிறந்த நாளன்று அவரை ஆச்சரியப்படுத்தும் விதமாக சூப்பர் கார்களை இயக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் இந்தியாவில் அல்லாமல் நியூசிலாந்து நடைபெற்றிருக்கின்றது.

தந்தைக்கு பிறந்த நாள்! ஒரே நேரத்தில் இரு சூப்பர் கார்களை களமிறக்கிய மகன்... இதற்காக அவர் என்ன செய்தார் தெரியுமா?

இதுகுறித்த வீடியோவை கிஷாநெல் என்னும் யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது. நம்மில் பலருக்கு இந்த யுடியூப் சேனல் பரீட்சையமானதாக இருக்கும். ஏனெனில், தற்போது பிறந்த நாளன்று தந்தையை ஆச்சரியப்படுத்தி வீடியோ வெளியிட்டிருக்கும் இந்த இளைஞர், இதுமாதிரியான வீடியோக்களை வெளியிடுவது முதல் முறையல்ல. இதற்கு முன்பாக இதுபோன்று பல வீடியோக்களை அவர் வெளியிட்டுள்ளார்.

தந்தைக்கு பிறந்த நாள்! ஒரே நேரத்தில் இரு சூப்பர் கார்களை களமிறக்கிய மகன்... இதற்காக அவர் என்ன செய்தார் தெரியுமா?

அவர், அவரது தாய் மற்றும் தந்தையை ஆச்சரியப்படுத்தும் விதமாக அதிக விலைக் கொண்ட லக்சூரி கார்களை வாடகை எடுத்து ஒரு நாள் உல்லாச பயணம் செய்து மகிழ்வித்து வருகின்றார்.

சில நேரங்களில் இந்தியாவில் உள்ள தனது உறவினர்களுக்கும் இதுபோன்ற ஆச்சரியத்தை அவர் வழங்குவது உண்டு. எனவே, இவர் யுடியூப் செலிபிரிட்டியாகவே வலம் வந்துக் கொண்டிருக்கின்றார்.

தந்தைக்கு பிறந்த நாள்! ஒரே நேரத்தில் இரு சூப்பர் கார்களை களமிறக்கிய மகன்... இதற்காக அவர் என்ன செய்தார் தெரியுமா?

இந்த இளைஞர் சொகுசு கார்களை மட்டுமின்றி சில நேரங்களில் ஹெலிகாப்டர் போன்றவற்றையும் வாடகைக்கு எடுத்து பெற்றோர்களை உல்லாச பயணம் அழைத்துச் செல்வதுண்டு. இதனாலயே இவர் யுடியூபில் பதிவிடும் வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு நிலவி வருகிறது. இதன் காரணத்தினாலயே அவ்வப்போது புது புது வீடியோக்களை அவர் வெளியிட்டு வருகின்றார்.

தந்தைக்கு பிறந்த நாள்! ஒரே நேரத்தில் இரு சூப்பர் கார்களை களமிறக்கிய மகன்... இதற்காக அவர் என்ன செய்தார் தெரியுமா?

இதனடிப்படையிலேயே இந்த புதிய வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். இம்முறையும் அவர் வாடகை வாகனங்களையே பயன்படுத்தியிருக்கின்றார். குறிப்பாக, தந்தையின் பிறந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றும் நோக்கில், அவருக்கு மிக மிக அதி-திறன் கொண்ட சூப்பர் கார்களை இயக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

தந்தைக்கு பிறந்த நாள்! ஒரே நேரத்தில் இரு சூப்பர் கார்களை களமிறக்கிய மகன்... இதற்காக அவர் என்ன செய்தார் தெரியுமா?

இந்தியாவைக் காட்டிலும் வெளிநாடுகளில் இதுபோன்ற சூப்பர் கார்களை வாடகைக்கு எடுப்பது மிகவும் சுலபம் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேசமயம், இந்தியாவிலும் இதுமாதிரியான சூப்பர் கார்கள் வாடகைக்கு விடும் நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றை வாடைக்கு எடுக்க வேண்டுமானால் குறைந்தது நம்முடைய ஒரு மாத சம்பளத்தையாவது கட்டணமாகக் கொடுக்க வேண்டியிருக்கும்.

தந்தைக்கு பிறந்த நாள்! ஒரே நேரத்தில் இரு சூப்பர் கார்களை களமிறக்கிய மகன்... இதற்காக அவர் என்ன செய்தார் தெரியுமா?

கிஷான், தந்தையை ஆச்சரியப்படுத்துவதற்காக லம்போர்கினி முர்சியலகோ மற்றும் ஃபெர்ராரி 430 ஆகிய இரு சூப்பர் கார்களை களமிறக்கியிருந்தார். இவற்றை கண்ட உடனேயே தாய் மற்றும் தந்தை இருவர்களின் கண்களிலிருந்தும் நீர் வர ஆரம்பித்துவிட்டன. இந்த காட்சி நெகிழ்ச்சியாக இருந்ததாக இணைய வாசிகள் பலர் கமெண்ட் செய்திருப்பதை நம்மால் காண முடிகின்றது.

தந்தைக்கு பிறந்த நாள்! ஒரே நேரத்தில் இரு சூப்பர் கார்களை களமிறக்கிய மகன்... இதற்காக அவர் என்ன செய்தார் தெரியுமா?

இந்த இரு கார்களில் ஃபெர்ராரி 430 சூப்பர் காரை மட்டுமே இயக்குவதைப் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இதன் பின்னர் லம்போர்கினி முர்சியலகோ இயக்கப்பட்டதா என்பது பற்றிய தகவல் தெரியவில்லை.

தந்தைக்கு பிறந்த நாள்! ஒரே நேரத்தில் இரு சூப்பர் கார்களை களமிறக்கிய மகன்... இதற்காக அவர் என்ன செய்தார் தெரியுமா?

இவ்விரு கார்களும் தற்போது சந்தையில் விற்பனைக்குக் கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இவற்றை அந்தந்த நிறுவனங்கள் நீண்ட நாட்களுக்கு முன்னரே விற்பனையில் இருந்து விலக்கிக் கொண்டன. இருப்பினும், தற்போது விற்பனையில் இருக்கும் சூப்பர் கார்களுக்கு இணையான அதி திறன் கொண்டவையாக அவை இருக்கின்றன.

கிஷான் குடும்பத்தினர், அக்கார்களை இயக்குவதற்காகவே உருவாக்கப்பட்டிருந்த ரேஸிங் தளத்தில் வைத்து இயக்கினர். முன்னதாக, ஒரு சில வழிமுறைகளை வாடகை கார் நிறுவன பணியாளர் வழங்கியதை அடுத்து அவர்கள் அக்காரை இயக்கி உற்சாகமடைந்தார். இது நிச்சயம் கிஷானின் தந்தைக்கு மறக்க முடியாத பிறந்த நாளை மாறியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 3, 2020, 12:29 [IST]
English summary
Son Surprised His Father With Lamborghini & Ferrari SuperCars. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+