டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா பேஸ் வேரியண்ட்டுகளில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள்!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விலை குறைவான வேரியண்ட்டுகளில் சில முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா பேஸ் வேரியண்ட்டுகளில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள்!

இந்தியாவின் எம்பிவி கார் மார்க்கெட்டில் தன்னிகரற்ற கார் மாடலாக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா சிறந்த தேர்வாக உள்ளது. இடவசதி, சொகுசான பயண அனுபவம், வசதிகள், விலை என அனைத்திலும் மிகச் சிறன்த தேர்வாக இருந்து வருகிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா பேஸ் வேரியண்ட்டுகளில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள்!

இந்த நிலையில், இந்த காரின் மதிப்பை உயர்த்தும் விதத்தில், இந்த காரின் விலை குறைவான வேரியண்ட்டுகளில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா பேஸ் வேரியண்ட்டுகளில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள்!

இந்த காரின் இசட்எக்ஸ் என்ற விலை உயர்ந்த வேரியண்ட்டில் அதிக பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்படுகின்றன. அதில், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கன்ட்ரோல் ஆகிய பாதுகாப்பு வசதிகள், பிற அனைத்து வேரியண்ட்டுகளிலும் நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக சேர்க்கப்பட்டுள்ளன.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா பேஸ் வேரியண்ட்டுகளில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள்!

வளைவுகள் மற்றும் திடீரென ஸ்டீயரிங் வீலை திருப்பும்போது கார் கட்டுப்பாட்டை இழக்கும் வாய்ப்பை இந்த வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம் தவிர்க்கும். அதேபோன்று, கார் மலைச்சாலைகளில் பயணிக்கும்போது காரை நிறுத்தி எடுக்கும்போது பின்னோக்கி நகர்வதை ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் தவிர்க்கும்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா பேஸ் வேரியண்ட்டுகளில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள்!

இந்த பாதுகாப்பு வசதிகள் மூலமாக அனைத்து வேரியண்ட்டுகளும் இப்போது மிகவும் அதிக பாதுகாப்பு வசதிகளை பெற்ற மாடலாக மாறி இருக்கிறது. இதுதவிர்த்து, டியூவல் ஏர்பேக்குகள், பிரேக் அசிஸ்ட், எலெக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன் வசதியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள், லோடு லிமிட்டர்கள் மற்றும் ப்ரீ டென்ஷனர் கொண்ட சீட் பெல்ட்டுகள் உள்ளன.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா பேஸ் வேரியண்ட்டுகளில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள்!

இந்த காரின் விலை உயர்ந்த வேரியண்ட்டுகளில் 7 ஏர்பேக்குகள், அனைத்து இருக்கைகளுக்கும் 3 பாயிண்ட் சீட் பெல்ட்டுகள், எமர்ஜென்சி பிரேக் சிக்னல், கிளாஸ் பிரெக் சென்சார் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படுகின்றன.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா பேஸ் வேரியண்ட்டுகளில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள்!

இன்னோவா க்ரிஸ்ட்டா கார் G.O.A என்ற மிக வலுவான கட்டுமானத்துடன் கூடிய பாடியுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக டொயோட்டா தெரிவிக்கிறது. மிக வலுவான கட்டமைப்பை பெற்றிப்பதுடன், விபத்து நேர்ந்தால், மோதல் தாக்கத்தை உள்வாங்கும் சிறப்பம்சத்தையும் இந்த கார் பெற்றிருக்கிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா பேஸ் வேரியண்ட்டுகளில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள்!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் பிஎஸ்6 தரத்தில் கிடைக்கின்றன. பெட்ரோல் எஞ்சின் 164 பிஎஸ் பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் மாடல் அதிகபட்சமாக 148 பிஎஸ் பவரையும், 343 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா பேஸ் வேரியண்ட்டுகளில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள்!

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் வசதிகளுக்கும் பஞ்சமில்லை. நீண்ட தூர பயணங்களுக்கு தேவையான அனைத்து தகுதிகளையும் பெற்ற சிறந்த கார் மாடலாக கூறலாம். இந்த கார் ரூ.15.32 லட்சம் முதல் ரூ.23.0 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 30, 2020, 17:28 [IST]
English summary
Toyota has silently updated Innova Crysta base variants with additional safety features in Indian market.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+