இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விலையை கணிசமாக உயர்த்தியது டொயோட்டா...

டொயோட்டா நிறுவனம் இன்னோவா க்ரிஸ்ட்டா பிஎஸ்6 மாடலின் எக்ஸ்ஷோரூம் விலையை கணிசமாக உயர்த்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விலையை கணிசமாக உயர்த்தியது டொயோட்டா...

டொயோட்டா நிறுவனத்தின் சிறப்பான விற்பனை எம்பிவி மாடலாக இன்னோவா க்ரிஸ்ட்டா உள்ளது. இதற்கு காரணம் இந்த காரில் உள்ள அதிகப்படியான இட வசதி, சவுகரியமான பயண அனுபவம் ஆகும். இவையே இந்த காருக்கு பெரிய அளவில் வாடிக்கையாளர்கள் பட்டாளத்தை பெற்று தந்துள்ளன.

இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விலையை கணிசமாக உயர்த்தியது டொயோட்டா...

டொயோட்டா நிறுவனம் இந்த எம்பிவி மாடலை பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்ட 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.4 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வுகளுடன் விற்பனை செய்து வருகிறது. இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 164 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விலையை கணிசமாக உயர்த்தியது டொயோட்டா...

அதுவே டீசல் என்ஜின் 148 பிஎச்பி மற்றும் 360 என்எம் டார்க் திறனை காருக்கு அதிகப்பட்சமாக வழங்குகிறது. இவற்றுடன் இன்னோவா க்ரிஸ்ட்டாவின் பிஎஸ்4 மாடல்களின் டாப் வேரியண்ட்களில் அளவில் பெரியதான 2.8 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வும் வழங்கப்பட்டு வந்தது.

இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விலையை கணிசமாக உயர்த்தியது டொயோட்டா...

அதிகப்பட்சமாக 172 பிஎச்பி மற்றும் 360 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜினும் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டு தேர்வுகளில் ஒன்றாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த என்ஜின் தேர்வில் இன்னோவா க்ரிஸ்ட்டா மாடலை தொடர்ந்து பெற முடியாமல் போய்விட்டது.

இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விலையை கணிசமாக உயர்த்தியது டொயோட்டா...

7 மற்றும் 8 இருக்கை தேர்வுகளில் கிடைக்கும் இந்த எம்பிவி மாடலின் ஆரம்ப விலையாக இந்த விலை அதிகரிப்பிற்கு முன்னர் ரூ.15.36 லட்சம் இருந்தது. அதேநேரம் அதிகப்பட்சமாக இந்த கார் ரூ.22.02 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விலையை கணிசமாக உயர்த்தியது டொயோட்டா...
Variant Price
Diesel
2.4 G ₹16,44,000 - ₹16,49,000
2.4 G+ ₹17,09,000 - ₹17,14,000
2.4 GX ₹17,47,000 - ₹17,52,000
2.4 GX AT ₹18,78,000 - ₹18,83,000
2.4 VX ₹20,89,000 - ₹20,94,000
2.4 ZX ₹22,43,000
2.4 ZX AT ₹23,63,000
Petrol
2.7 GX ₹15,66,000 - ₹15,71,000
2.7 GX AT ₹17,02,000 - ₹17,07,000
2.7 VX ₹19,00,000
2.7 ZX AT ₹21,78,000

ஆனால் தற்போதைய விலை அதிகரிப்பின்படி இனி இந்த எம்பிவி மாடல் ரூ.15.66 லட்சத்தில் இருந்து எக்ஸ்ஷோரூமில் விற்பனை செய்யப்படவுள்ளது. இதில் எண்ட்ரீ-லெவல் ட்ரிம்கள் ரூ.25,000- ரூ.30,000 வரையில் உயர்வை பெற்றுள்ளன.

இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விலையை கணிசமாக உயர்த்தியது டொயோட்டா...

அதிகப்பட்சமாக இன்னொவா க்ரிஸ்ட்டா மாடலின் டீசல் வேரியண்ட்டின் ரூ.61,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற வேரியண்ட்கள் கிட்டத்தட்ட ரூ.44,000 அளவில் விலை அதிகரிப்பை ஏற்றுள்ளன. இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டாலும் இன்னோவா கிரிஸ்ட்டாவின் விற்பனைக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்பது உறுதி.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 3, 2020, 20:15 [IST]
English summary
Toyota Innova BS6 prices hiked by Rs. 25,000 - 61,000.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+