சந்தையில் பிரபலமான டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவில் சிஎன்ஜி என்ஜின்... மீண்டும் இந்தியாவில் சோதனை...

இந்திய சந்தையில் பிரபலமான டொயோட்டா கார்களில் ஒன்றாக விளங்கும் இன்னோவா க்ரிஸ்ட்டாவின் புதிய சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சாலையில் சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து காடிவாடி செய்தி தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஸ்பை படங்களை விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

சந்தையில் பிரபலமான டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவில் சிஎன்ஜி என்ஜின்... மீண்டும் இந்தியாவில் சோதனை...

ஏற்கனவே கூறியதுபோல் இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் மாடல்கள் தான் இந்தியாவில் பிரபலமான டொயோட்டா கார்களாக உள்ளன. இருப்பினும் கூடுதலாக வாடிக்கையாளர்களை பெறுவதற்காக இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் புதியதாக சிஎன்ஜி என்ஜின் தேர்வை கொண்டுவரும் முயற்சியில் தயாரிப்பு நிறுவனம் இறங்கியுள்ளது.

சந்தையில் பிரபலமான டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவில் சிஎன்ஜி என்ஜின்... மீண்டும் இந்தியாவில் சோதனை...

இதன் ஒரு பகுதியாக தற்போது சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ள சிஎன்ஜி இன்னோவா க்ரிஸ்ட்டா மாடல் இதற்கு முன்பாக கடந்த ஜனவரி மாதத்தின்போதும் சோதனை ஓட்டத்தின்போது கண்டறியப்பட்டிருந்தது. டொயோட்டா நிறுவனம் இந்த மாடலில் சிஎன்ஜி என்ஜின் தேர்வை எண்ட்ரீ-லெவல் ட்ரிம்களுக்கு மட்டும் தான் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தையில் பிரபலமான டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவில் சிஎன்ஜி என்ஜின்... மீண்டும் இந்தியாவில் சோதனை...

அதேநேரம் இன்னோவா க்ரிஸ்ட்டாவின் மிட்-ஸ்பெக் ட்ரிம்-ற்கும் இந்த புதிய என்ஜின் அமைப்பு வழங்கப்படலாம். எரிபொருள் செலவு குறைவு என்பதால் பொது பயன்பாட்டிற்கு தான் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த காரின் புதிய சிஎன்ஜி வேரியண்ட்டில் வழக்கமான 2TR-FE ட்யூல் விவிடி-ஐ 2.7 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் தான் பொருத்தப்படவுள்ளது.

சந்தையில் பிரபலமான டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவில் சிஎன்ஜி என்ஜின்... மீண்டும் இந்தியாவில் சோதனை...

இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 166 பிஎச்பி மற்றும் 245 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. சிஎன்ஜி யூனிட்கள் சேர்த்த பின்னர் இந்த ஆற்றல் அளவுகள் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான பெட்ரோல் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகின்றன.

சந்தையில் பிரபலமான டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவில் சிஎன்ஜி என்ஜின்... மீண்டும் இந்தியாவில் சோதனை...

ஆனால் புதிய சிஎன்ஜி வேரியண்ட்டில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்படும் என தெரிகிறது. டொயோட்டா நிறுவனம் இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் இன்னோவா டூரிங் ஸ்போர்ட் மாடல்களின் விலையை கடந்த ஜூன் மாதத்தில் தான் உயர்த்தி இருந்தது.

சந்தையில் பிரபலமான டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவில் சிஎன்ஜி என்ஜின்... மீண்டும் இந்தியாவில் சோதனை...

இதன்படி இந்த மாடலின் பெட்ரோல் வெர்சன் ரூ.30,000-ல் இருந்து ரூ.44,000 வரையிலும், டீசல் வெர்சன் ரூ.30,000- ரூ.61,000 வரையிலும் விலை அதிகரிப்பை வேரியண்ட்டை பொறுத்து பெற்றிருந்தன. இதனால் இன்னோவா க்ரிஸ்ட்டா மாடலின் விலை எக்ஸ்ஷோரூமில் தற்சமயம் ரூ.15.66 லட்சத்தில் இருந்து ரூ.24.67 லட்சம் வரையில் உள்ளது.

சந்தையில் பிரபலமான டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவில் சிஎன்ஜி என்ஜின்... மீண்டும் இந்தியாவில் சோதனை...

புதிய சிஎன்ஜி வெர்சனின் விலை இவற்றை காட்டிலும் ரூ.80,000-ல் இருந்து ரூ.1 லட்சம் வரையில் அதிகமாக நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த புதிய வெர்சனின் வருகையின் மூலம் மாருதி சுசுகி எர்டிகாவிற்கு பிறகு சிஎன்ஜி என்ஜின் தேர்வை பெறும் இரண்டாவது எம்பிவி காராக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா விளங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Toyota Innova Crysta CNG Variant Spied On Test In India Again
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X