விரைவில் இந்தியா வரும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

விரைவில் இந்தியா வரும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்!

இந்திய எம்பிவி கார் மார்க்கெட்டில் தன்னிகரற்ற மாடலாக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் இருந்து வருகிறது. ஆளுமையான தோற்றம், அதிக இடவசதி, செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வுகள், பிரிமீயம் இன்டீரியர் அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

விரைவில் இந்தியா வரும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்!

இந்த நிலையில், சந்தைப்போட்டியை மனதில் வைத்து டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கிறது. கடந்த வாரம் இந்த புதிய மாடல் இந்தோனேஷியாவில் வைத்து பொது பார்வைக்கு வந்தது. அப்போதே இந்தியர்களின் கவனத்தை ஈர்த்தது.

விரைவில் இந்தியா வரும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்!

இந்த சூழலில், வரும் நவம்பர் 2-வது வாரத்தில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் இந்த புதிய மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக காடிவாடி தள செய்தி தெரிவிக்கிறது.

விரைவில் இந்தியா வரும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்!

சற்றே பெரிதான முன்புற க்ரில் அமைப்பு, முரட்டுத்தனத்தை கூட்டும் வகையிலான புதிய பம்பர் அமைப்பு, புதிய அலாய் வீல்கள் உள்ளிட்ட சிறிய மாறுதல்களுடன் இந்த மாடல் வெளியிடப்பட்டது. உட்புறத்தில் முழுமையான கருப்பு வண்ண இன்டீரியர் தீம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

விரைவில் இந்தியா வரும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்!

இந்த காரில் 9 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. ஆன்ட்ராட்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதியும் உள்ளது.

விரைவில் இந்தியா வரும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்!

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி, கீ லெஸ் என்ட்ரி, ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், லெதரேட் எனப்படும் செயற்கையான தோல் தன்மை கொண்ட சீட் கவர்கள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா உள்ளிட்டவையும் குறிப்பிடத்தக்க அம்சங்களாக இருக்கின்றன.

விரைவில் இந்தியா வரும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்!

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் தற்போது வழங்கப்படும் அதே 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் தக்கவைக்கப்படும். பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 166 பிஎஸ் பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் எஞ்சின் 150 பிஎஸ் பவரையும் 360 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

விரைவில் இந்தியா வரும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்!

கொரோனாவால் துவண்டு கிடந்த வாகனத் துறைக்கு, பண்டிகை காலம் புதிய தெம்பை அளித்து வருகிறது. கடந்த மாதம் முதல் வாகன விற்பனையில் குறிப்பிடத்தக்க எழுச்சி இருந்து வருகிறது. இந்த நிலையில், புதிய மாடல்களை வைத்து வாடிக்கையாளர்களை கவரும் முயற்சிகளில் வாகன நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், டொயோட்டா கார் நிறுவனமும் இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விரைவில் இந்தியாவில் வருவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகவே கருதலாம்.

Most Read Articles

English summary
According to reports, Toyota is gearing up to launch Innova Crysta facelift model in India by second week of November, 2020.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X