டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்...

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்...

மிக நீண்ட காத்திருப்பிற்கு பிறகு, இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் இன்று (நவம்பர் 24) விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதற்கு முன்னதாக இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலை டீலர்ஷிப்களுக்கு அனுப்பும் பணிகளை டொயோட்டா நிறுவனம் ஏற்கனவே தொடங்கி விட்டது.

எனவே இன்று முதலே வாடிக்கையாளர்களுக்கு காரை டெலிவரி செய்யும் பணிகளும் தொடங்கப்படும். புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விலை தற்போது 16.26 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. அதே சமயம் டாப் வேரியண்ட்டின் விலை 24.33 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். கேரளா தவிர நாடு முழுவதும் இந்த விலைகள் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகி வரும் டொயோட்டா நிறுவனத்தின் கார்களில் ஒன்றாக இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி உள்ளது. இந்த காருக்கு இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் நேரடி போட்டியாளர் என எந்த காரும் கிடையாது. எனவே டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி தனி ராஜாங்கம் நடத்தி கொண்டுள்ளது.

புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்பகுதியை பொறுத்தவரை கருப்பு நிறத்தில் புத்தம் புதிய க்ரில் அமைப்பை இந்த கார் பெற்றுள்ளது. அதற்கு கீழே தடிமனான க்ரோம் பட்டை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ஹெட்லேம்ப்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன. தற்போது எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் புதிய பம்பரையும் டொயோட்டா வழங்கியுள்ளது. முந்தைய மாடலில் இருந்தை காட்டிலும் பம்பர் வித்தியாசமாக உள்ளது. மேலும் டர்ன் இன்டிகேட்டர்களும் ரீ-டிசைன் செய்யப்பட்டுள்ளன. ஆனால் பக்கவாட்டில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. ஆனால் புதிய டைமண்ட்-கட் ட்யூயல்-டோன் 16 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

பக்கவாட்டிலும், பின்புறத்திலும் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. சிறு சிறு மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. அவை கவனம் பெறக்கூடிய வகையில் கூட இல்லை. அதேபோல் டேஷ்போர்டிலும் டொயோட்டா நிறுவனம் மாற்றங்களை செய்யவில்லை. எனினும் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் வசதியுடன் பெரிய 9.0 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற ஒரு சில கூடுதல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வை டொயோட்டா நிறுவனம் தொடர்ந்து வழங்குகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 150 பிஎச்பி பவரையும், 343 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடியது. இது மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வுடன் கிடைக்கும் பவர் அவுட்புட் ஆகும். ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனில் டார்க் அவுட்புட் 360 என்எம்-ஆக உயரும்.

அதே சமயம் பெட்ரோல் வேரியண்ட்களில், 2.7 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வு வழங்கப்படும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 166 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்ய கூடியது. பெட்ரோல் இன்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு மட்டுமே கிடைக்கும். இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலை தொடர்ந்து, பார்ச்சூனர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலையும் டொயோட்டா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 24, 2020, 15:02 [IST]
English summary
Toyota Innova Crysta Facelift Launched In India: All The Details You Need To Know. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+