விரைவில் வருகிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா லீடர்ஷிப் எடிசன்!

அதிக சிறப்பம்சங்கள் கொண்ட டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி காரின் லீடர்ஷிப் எடிசன் மாடல் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

விரைவில் வருகிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா லீடர்ஷிப் எடிசன்!

இந்தியாவின் எம்பிவி கார் மார்க்கெட்டில் தன்னிகரற்ற மாடலாக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் உள்ளது. இந்த நிலையில், கியா கார்னிவல், மாருதி எர்டிகா கார்களால் இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்துடன், விற்பனையும் குறைந்துள்ளது.

விரைவில் வருகிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா லீடர்ஷிப் எடிசன்!

இதனால், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில், கூடுதல் மதிப்பை வழங்கும் விதத்திலும் கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட விசேஷ மாடலை டொயோட்டா கொண்டு வர இருக்கிறது. இன்னோவா க்ரிஸ்ட்டா லீடர்ஷிப் எடிசன் என்ற பெயரில் இந்த புதிய மாடல் சந்தைக்கு வருகிறது.

விரைவில் வருகிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா லீடர்ஷிப் எடிசன்!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விஎக்ஸ் வேரியண்ட்டில் கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டு லீடர்ஷிப் எடிசன் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடலானது இரட்டை வண்ணக் கலவையில் வர இருக்கிறது. கருப்பு வண்ணத்திலான கூரையுடன் வெள்ளை மற்றும் சிவப்பு வண்ணங்களில் கிடைக்கும்.

விரைவில் வருகிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா லீடர்ஷிப் எடிசன்!

எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், இரட்டை வண்ணத்திலான அலாய் வீல்கள், ரியர் ஸ்பாய்லர், சைடு ஸ்கர்ட்டுகள், முன்புற பம்பருக்கான கூடுதல் லிப் ஆக்சஸெரீகள் கொடுக்கப்பட்டு இருக்கும். மேலும், லீடர்ஷிப் எடிசன் மாடலுக்குரிய விசேஷ பேட்ஜ் பட்டைகளும் காரின் பின்புறத்தில் இடம்பெற்றிருக்கும்.

விரைவில் வருகிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா லீடர்ஷிப் எடிசன்!

உட்புறத்தில் முழுவதும் கருப்பு வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு மிகவும் பிரிமீயமாக இருக்கும். இந்த காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, புஷ் பட்டன் ஸ்டார்ட், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, ஆட்டோ ஃபோல்டிங் சைடு வியூ மிரர்கள் ஆகியவையும் இடம்பெறுகின்றன.

விரைவில் வருகிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா லீடர்ஷிப் எடிசன்!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா லீடர்ஷிப் எடிசன் மாடலில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு வழங்கப்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 150 எச்பி பவரையும், 343 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக ்கியர்பாக்ஸ் தேர்வுகலில் கிடைக்கும்.

விரைவில் வருகிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா லீடர்ஷிப் எடிசன்!

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா லீடர்ஷிப் எடிசனில் 7 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிஹ் சிஸ்டம், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள், எமர்ஜென்ஸி பிரேக் சிக்னல் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

விரைவில் வருகிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா லீடர்ஷிப் எடிசன்!

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா லீடர்ஷிப் எடிசன் மாடலானது குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்படும். ரூ.50,000 முன்பணத்துடன் முன்பதிவு துவங்கப்பட இருப்பதாக தெரிகிறது அடுத்த ஓரிரு வாரங்களில் இந்த விசேஷ பதிப்பு மாடல் டீலர்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

Source: Rushlane

More from DriveSpark

Article Published On: Wednesday, March 4, 2020, 14:51 [IST]
English summary
Japanese car maker, Toyota is all set to launch ‘Leadership Edition’ of the Innova Crysta in India very soon. It will come with more features and cosmetic upgrades to woo customers.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+