இந்த கார் இருந்தா எமனுக்கே டாட்டா காட்டலாம்! விபத்தை நினைத்து கவலையேபடாதீங்க! அதிக பாதுகாப்பானது!

புதிய பரிசோதனையின் அடிப்படையில் டொயோட்டா யாரிஸ் கார் அதிக பாதுகாப்பு நிறைந்த கார் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்த கார் இருந்த எமனுக்கே டாடா காட்டலாம்... விபத்தை நினைத்து கவலையேபடாதீங்க..! அதிக பாதுகாப்பானது..!

டொயோட்டா நிறுவனத்தின் மிகவும் பிரபலமான கார்களில் யாரிஸ் மாடலும் ஒன்று. இக்காரையே 'ஐரோப்பிய புதிய கார் மதிப்பீட்டு திட்டம்' (EURO NCAP) எனும் அமைப்பு மோதல் வினைக்கு உட்படுத்தி அதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த தகவலின்படி, டொயோட்டா யாரிஸ் 5 நட்சத்திர பாதுகாப்பு தரம் கொண்ட கார் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த கார் இருந்த எமனுக்கே டாடா காட்டலாம்... விபத்தை நினைத்து கவலையேபடாதீங்க..! அதிக பாதுகாப்பானது..!

யாரிஸ் ஓர் ஐந்து கதவுகள் அமைப்புடைய ஹேட்ச்பேக் காராகும். இது வெளிநாடுகளில் பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் வெர்ஷன்களில் கிடைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையிலேயே தனது புதிய பாதுகாப்பு கொள்கைகளின் அடிப்படையில் ஐரோப்பா என்சிஏபி அமைப்பு மோதல் வினைக்கு உட்படுத்தியது. புதிய விதிகளுடன் ஆய்விற்கு உட்படுத்தப்படும் முதல் கார் இதுவே ஆகும்.

இந்த கார் இருந்த எமனுக்கே டாடா காட்டலாம்... விபத்தை நினைத்து கவலையேபடாதீங்க..! அதிக பாதுகாப்பானது..!

எனவே கடுமையான கெடுபிடிகள் இந்த பரிசோதனையின் கடைபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தனது பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் உறுதியான கட்டுமானங்களினால் யாரிஸ் ஹேட்ச்பேக் 5 நட்சத்திர மதிப்பெண்ணைப் பெற்று பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கார் இருந்த எமனுக்கே டாடா காட்டலாம்... விபத்தை நினைத்து கவலையேபடாதீங்க..! அதிக பாதுகாப்பானது..!

உலகளவில் வாகன பாதுகாப்பு தரங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. எனவேதான், அண்மையில் தனது மோதல் வினைக்கான படிநிலைகளையும் ஐரோப்பா என்சிஏபி அமைப்பு அப்கிரேட் செய்தது. இதன்படி, புதிய 2020 யூரோ என்சிஏபி சோதனையில் அனைத்து ஃப்ரண்டல் ஆஃப்செட் சோதனைகளும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த கார் இருந்த எமனுக்கே டாடா காட்டலாம்... விபத்தை நினைத்து கவலையேபடாதீங்க..! அதிக பாதுகாப்பானது..!

இது 1997ல் இருந்து கையாளப்பட்டு வந்த சில யுக்திகளை மாற்றியமைத்துள்ளது. அந்தவகையில், முதல் முறையாக தொலைதூர தாக்கத்தில் என்ன மாதிரியான பாதிப்புகள் காருக்கும், அதற்குள் இருப்பவர்களுக்கும் ஏற்படும் என்ற புதிய ஆய்வு சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த கார் இருந்த எமனுக்கே டாடா காட்டலாம்... விபத்தை நினைத்து கவலையேபடாதீங்க..! அதிக பாதுகாப்பானது..!

இதுமட்டுமின்றி, விபத்துக்குள்ளாகும் கார் மட்டுமின்றி எதிர்புறத்தில் விபத்தைச் சந்திக்கும் காருக்கும் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்ற மதிப்பீட்டை புதிய கொள்கை அளவீடு செய்ய உதவுகின்றது. இத்தகைய சிறப்பு ஆய்வுகளே புதிதாக 2020 யூரோ என்சிஏபி-யில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த கார் இருந்த எமனுக்கே டாடா காட்டலாம்... விபத்தை நினைத்து கவலையேபடாதீங்க..! அதிக பாதுகாப்பானது..!

யாரிஸ் காரின் பாதுகாப்பு தரம் மற்றும் தகவல்

யாரிஸ் காரின் அனைத்து அம்சங்களுமே தற்போதைய நற்சான்றிற்கு தகுதியானவையாக இருக்கின்றன. அதாவது, யாரிஸ் ஹேட்ச்பேக் காரின் முரட்டுத் தனமான தோற்றம், ஏர் பேக், உறுதியான உடல் உள்ளிட்ட அனைத்தும் 5 ஸ்டார் ரேட் பெறுவதற்கு காரணமாக அமைந்துள்ளன. இது கார், காருக்குள் அமர்ந்திருப்பவர் மற்றும் காருக்குள் வெளியில் இருப்பவர்கள் (பாதசாரிகள்) என அனைவருக்கும் அதிகபட்ச பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் இருப்பதாக புதிய ஆய்வு தகவல் தெரிவித்துள்ளது.

இந்த கார் இருந்த எமனுக்கே டாடா காட்டலாம்... விபத்தை நினைத்து கவலையேபடாதீங்க..! அதிக பாதுகாப்பானது..!

எனவேதான் ஒட்டுமொத்தமாக யாரிஸ் 5 நட்சத்திர ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது. நான்கு வித்தியாசமான படிநிலைகளின் அடிப்படையில் யாரிஸ் ஹேட்ச்பேக் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இவையே அனைவருக்கும் யாரிஸ் ஹேட்ச்பேக் கார் உகந்தது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த கார் இருந்த எமனுக்கே டாடா காட்டலாம்... விபத்தை நினைத்து கவலையேபடாதீங்க..! அதிக பாதுகாப்பானது..!

அதாவது, பெரியவர்களின் பாதுகாப்பை 86 சதவீதமும், சிறியவர்களின் பாதுகாப்பை 81 சதவீதமும், பாதசாரிகள் மற்றும் பிறரின் பாதுகாப்பை 78 சதவீதமும் இக்கார் உறுதிப்படுத்துகின்றது. இதேபோன்று, அவசர காலங்களில் உதவி செய்வதிலும் இக்கார் நன்மதிப்பைப் பெற்றிருக்கின்றது. இதில் 85 சதவீதம் சிறந்த கார் என்ற சான்றை யாரிஸ் ஹேட்ச்பேக் பெற்றிருக்கிறது.

இந்த கார் இருந்த எமனுக்கே டாடா காட்டலாம்... விபத்தை நினைத்து கவலையேபடாதீங்க..! அதிக பாதுகாப்பானது..!

யாரிஸ் ஹேட்ச்பேக் கார் இந்த மதிப்பெண்ணைப் பெற்றதை அடுத்து டொயோட்டா நிறுவனத்திற்கு பாராட்டு மழை குவிந்து வருகின்றது. குறிப்பாக யூரோ என்சிஏபி அமைப்பின் தலைமை அதிகாரியான மிக்கேல் வேன் ரேடிங்டன், டொயோட்டாவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கின்றார்.

இந்த அதீத பாதுகாப்பு தரம் கொண்ட கார் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கவில்லை என்பது வேதனையளிக்கும் விஷயமாக உள்ளது. அதேசமயம், இதன் ஹேட்ச்பேக் மாடலைத் தவிர செடான் ரக மாடல் விற்பனைக்கு கிடைக்கின்றது. இக்கார் குறித்த தகவலை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Yaris Hatchback Gets 5 Star Safety Rating In EURO NCAP. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X