டொயோட்டா யாரிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் படங்கள் வெளியீடு... நாளை உலகளவில் அறிமுகம்...

டொயோட்டா நிறுவனம் சர்வதேச சந்தையில் வியோஸ் செடான் மாடலின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை வெளியிட ஆயத்தமாகி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் யாரிஸ் என்ற பெயரில் விற்பனையாகி கொண்டிருக்கும் இதன் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனின் டீசர் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

டொயோட்டா யாரிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் படங்கள் வெளியீடு... நாளை உலகளவில் அறிமுகம்...

உலகில் முதல் நாடாக பிலிப்பைன்ஸில் வியோஸின் அப்டேட் வெர்சன் வருகிற ஜூலை 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. 2013 முதன்முதலாக ஆசிய நாடுகளில் அறிமுகமான இந்த செடான் ரக கார் அதன் பின் ஏற்கும் இரண்டாவது மிக பெரிய ஃபேஸ்லிஃப்ட் மாற்றம் இதுவாகும்.

டொயோட்டா யாரிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் படங்கள் வெளியீடு... நாளை உலகளவில் அறிமுகம்...

இந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இதன் டீசர் படங்களின் மூலம் யாரிஸ் ஃபேஸ்லிஃப்ட் கார், புதிய பம்பர், புதிய எல்இடி ஹெட்லேம்ப்கள், டிசைன் மாற்றப்பட்ட மேற்புற க்ரில் உடன் மொத்த முன்புறமும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா யாரிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் படங்கள் வெளியீடு... நாளை உலகளவில் அறிமுகம்...

ட்ரெப்சாய்டல் மைய ஏர்-டேம் உடன் உள்ள இதன் ரீ-ஸ்டைல் பம்பரின் மேற்புற முனை, ஹெட்லேம்ப் உடன் இணைந்தாற்போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் காரின் முன்பகுதி லெக்ஸஸ் கார்களை ஞாபகப்படுத்துகிறது. ஏர் டேம்ப்பிற்கும், அதன் இரு புறங்களிலும் C-வடிவிலான ஹௌசிங் உடன் உள்ள ஃபாக் விளக்குகளுக்கும் இடையே சிறிய இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா யாரிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் படங்கள் வெளியீடு... நாளை உலகளவில் அறிமுகம்...

புதிய அலாய் சக்கரங்களுடன் காரின் பின்பகுதியும் சற்று அப்டேட்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. உட்புறத்தில் உள்ளமைவும் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமும் சிறிது திருத்தியமைக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றப்படி என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை.

டொயோட்டா யாரிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் படங்கள் வெளியீடு... நாளை உலகளவில் அறிமுகம்...

இதனால் விற்பனையில் உள்ள வியோஸ் செடான் கார் கொண்டிருக்கும் 1.3 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின்கள் அப்படியே தேர்வுகளாக இந்த ஃபேஸ்லிஃப்ட் காருக்கும் வழங்கப்படவுள்ளன. இந்தியாவில் தற்போதைய தலைமுறை யாரிஸ் கடந்த 2018ல் அறிமுகமானது.

டொயோட்டா யாரிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் படங்கள் வெளியீடு... நாளை உலகளவில் அறிமுகம்...

இந்திய சந்தையில் பெரிய அளவில் விற்பனையில் சோபிக்காத இந்த செடான் கார், விற்பனை நிறுத்தப்பட்ட டொயோட்டா எடியோஸ் செடான் காருக்கு மாற்றாக பொது சேவை பயன்பாடுகளுக்கும் விரைவில் வழங்கப்படவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

டொயோட்டா யாரிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் படங்கள் வெளியீடு... நாளை உலகளவில் அறிமுகம்...

யாரிஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் இந்திய வருகை குறித்து தற்போதைக்கு எந்த தகவலும் இல்லை. டொயோட்டாவின் இந்திய செடான் லைன்-அப்பில் விரைவில் மாருதி சுசுகி சியாஸ் ரீபேட்ஜ்டு வெர்சன் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Yaris facelift teased ahead of international debut
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X