Just In
- 5 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 7 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 8 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 8 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புதிய ஃபோர்டு ஈகோஸ்போர்ட் இந்தியாவில் அறிமுகம்... முன்பை விட மிக மிக அதிக வசதிகளுடன்... விலை எவ்ளோ தெரியுமா?
முன்பை விட கூடுதல் வசதிகளுடன் 2021 ஈகோஸ்போர்ட் கார் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை மற்றும் தற்போது பெற்றிருக்கும் சிறப்பு வசதிகள் அனைத்தையும் இப்பதிவில் காணலாம்.

போர்டு இந்தியா நிறுவனம் தனது 2021 ஈகோஸ்போர்ட் எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய சிறப்பம்சங்கள் பலவற்றுடன் அது விற்பனைக்கு வந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், முந்தைய மாடலைக் காட்டிலும் சிறப்பு வசதிகள் கொண்ட காராக இது அறிமுகமாகியுள்ளது.

2021 ஃபோர்டு ஈகோஸ்போர்ட் காருக்கு ரூ. 7.99 லட்சம் என்ற விலையை நிர்ணயித்துள்ளது. இது ஆரம்ப நிலை வேரியண்டின் விலையாகும். இது முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில் 35 ஆயிரம் ரூபாய் குறைந்த விலை ஆகும். புதிய ஈகோஸ்போர்ட் காரை ஐந்து விதமான வேரியண்டுகளில் வழங்க ஃபோர்டு திட்டமிட்டுள்ளது.

ஆம்பிசியன்ட், ட்ரெண்ட், டைட்டானியம், டைட்டானியம் ப்ளஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய வேரியண்டுகளிலேயே அது அறிமுகம் செய்துள்ளது. இந்த அனைத்து வேரியண்டுகளிலும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இர தேர்வுகளிலுமே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

2021 ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட் காரின் விலை:
Ecosport | Petrol Price | Diesel Price |
Ambiente MT | ₹7,99,000 | ₹8,69,000 |
Treand MT | ₹8,64,000 | ₹9,14,000 |
Titanium MT | ₹9,79,000 | ₹9,99,000 |
Titatinum+ AT | ₹11,19,000 | - |
Sports MT | ₹10,99,000 | ₹11,49,000 |

இக்காரின் டைட்டானியம் ட்ரிம்மில் எலெக்ட்ரிக் சன்ரூஃப் வசதியை ஃபோர்டு விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. இந்த வசதியை முன்னதாக உயர்நிலை வேரியண்டில் மட்டுமே ஃபோர்டு வழங்கி வந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலைியலேயே சிறிய மாடலில் சன்ரூஃப் வசதியை வழங்கும் விதமாக டைட்டானியம் தேர்வில் அறிமுகம் செய்திருக்கின்றது.

இதுமட்டுமின்றி ஃபோர்டுபாஸ் இணைப்பு வசதியையும் ஈகோஸ்போர்ட் காரில் ஃபோர்டு நிறுவனம் வழங்கியிருக்கின்றது. இந்த தொழில்நுட்பம் காருடன் செல்போனை இணைக்க உதவும். அவ்வாறு, இரண்டையும் இணைக்கும்போது கார் பற்றிய அனைத்து தகவலையும் செல்போனிலேயே நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.

தொடர்ந்து, காரை ஆன் - ஆஃப் செய்வது, லாக் மற்றும் அன்லாக் செய்வது, ஏசியை கன்ட்ரோல் செய்வது என பல்வேறு கருவிகளை நம்மால் கட்டுப்படுத்த முடியும். இதற்காக பிரத்யேக செல்போன் செயலி ஒன்று வழங்கப்படுகின்றது. இதன் மூலமே காரை கன்ட்ரோல் செய்ய முடியும்.

மேலும் கூடுதல் சிறப்பு வசதிகளாக சிங்க்3 தொழில்நுட்ப வசதிக் கொண்ட 8 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப், ஸ்டார்ட்/ஸ்டாப் செய்யக்கூடிய புஷ் பட்டன், ஸ்டியரிங்க வீலில் பன்முக கன்ட்ரோல், மழை பெய்தால் தானாகவே நீரை வழிக்கும் வைப்பர்கள், ஆறு ஏர்பேக், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் என எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இக்கார் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்ஜின் தேர்விலேயே விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதன் பெட்ரோல் எஞ்ஜின் 123 பிஎச்பி மற்றும் 150 என்எம் டார்க்கையும், டீசல் எஞ்ஜின் 100 பிஎச்பி மற்றும் 215 என்எம் டார்க்கையும் வெளியேற்றக்கூடியது.

இவ்விரு எஞ்ஜின்களிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டு வசதியாக வழங்கப்படுகின்றது. அதேசமயம், பெட்ரோல் எஞ்ஜினில் மட்டும் சிறப்பு தேர்வாக 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் தானியங்கி தேர்வு வழங்கப்படுகின்றது.