மோதல் ஆய்வில் தரமான சம்பவத்தை நிகழ்த்திய Hyundai Tucson! சீக்கிரம் இந்தியாவிற்கு கொண்டு வாங்க ப்ளீஸ்!

மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கும் கார் ஒன்று மிக பாதுகாப்பு திறன் கொண்ட வாகனம் என்ற பெருமையைச் சூடியிருக்கின்றது. அது என்ன கார்?, பாதுகாப்பு திறனில் எவ்வளவு ரேட்டிங் பெற்றிருக்கின்றது என்பது பற்றிய முக்கிய விபரங்களை இந்த பதிவில் காணலாம், வாங்க.

மோதல் ஆய்வில் ஐந்துக்கு 5 ஸ்டார்களை பெற்ற Hyundai Tucson! இந்த கார்தாங்க இந்தியாவிற்கு வரபோகுது?

ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் நான்காம் தலைமுறை டக்சன் (Tucson) கார் மாடலே மோதல் ஆய்வில் அதிக பாதுகாப்பு திறன் கொண்ட வாகனம் என்ற பட்டத்தைப் பெற்றிருக்கின்றது. பாதுகாப்பு குறித்து செய்யப்பட்ட ஆய்வில் இக்கார் ஐந்திற்கு ஐந்து நட்சத்திர ரேட்டிங்கை பெற்று நிறுவனத்திற்கு பெருமையைச் சேர்த்திருக்கின்றது.

மோதல் ஆய்வில் ஐந்துக்கு 5 ஸ்டார்களை பெற்ற Hyundai Tucson! இந்த கார்தாங்க இந்தியாவிற்கு வரபோகுது?

புதிய வாகனங்களை மோதல் ஆய்விற்கு உட்படுத்தி அதுகுறித்த தகவலை வெளியிட்டு வரும் அமைப்பான யூரோ என்சிஏபி, அண்மையில் ஹூண்டாய் டக்சன் காரை விபத்திற்கு உட்படுத்தி, அக்காரின் பாதுகாப்பு திறன் குறித்த பரிசோதனையை மேற்கொண்டது. இதிலேயே, டக்சன் தான் ஒரு சிறந்த பாதுகாப்பான வாகனம் என்பதை நிரூபனம் செய்திருக்கின்றது.

மோதல் ஆய்வில் ஐந்துக்கு 5 ஸ்டார்களை பெற்ற Hyundai Tucson! இந்த கார்தாங்க இந்தியாவிற்கு வரபோகுது?

ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த நான்காம் தலைமுறை டக்சன் கார் கடந்த ஆண்டே உலகளவில் வெளியீட்டைப் பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதைத்தொடர்ந்து, 2020 நவம்பரில் வட அமெரிக்கா சந்தையில் இக்கார் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டது. தற்போது இக்காரை உலகின் பிற சந்தையிலும் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஹூண்டாய் களமிறங்கியிருக்கின்றது.

மோதல் ஆய்வில் ஐந்துக்கு 5 ஸ்டார்களை பெற்ற Hyundai Tucson! இந்த கார்தாங்க இந்தியாவிற்கு வரபோகுது?

அந்தவகையில், இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு இக்கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுகுறித்த தகவல்கள் ஏற்கனவே வெளியாகிய நிலையில், தற்போது இக்கார் மிக அதிக பாதுகாப்பான வாகனம் என்ற பெருமையைப் பெற்றிருக்கின்றது. இது இந்தியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஓர் தகவலாக அமைந்திருக்கின்றது. இந்த மகிழ்ச்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில் இக்கார் இந்திய சாலைகளில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

மோதல் ஆய்வில் ஐந்துக்கு 5 ஸ்டார்களை பெற்ற Hyundai Tucson! இந்த கார்தாங்க இந்தியாவிற்கு வரபோகுது?

பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 86 புள்ளிகளையும், சிறியவர்களுக்கான பாதுகாப்பில் அதிகபட்சமாக 87 புள்ளிகளையும் பெற்றிருக்கின்றது. இத்துடன், கண்மூடித்தனமாக சாலையில் சுற்றி திரியும் பாதசாரிகளின் பாதுகாப்பில் 66 புள்ளிகளை டக்சன் பெற்றிருக்கின்றது. இதேபோல், காருக்குள் இடம் பெற்றிருக்கும் பாதுகாப்பு அம்சங்களின் அடிப்படையில் 70 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.

மோதல் ஆய்வில் ஐந்துக்கு 5 ஸ்டார்களை பெற்ற Hyundai Tucson! இந்த கார்தாங்க இந்தியாவிற்கு வரபோகுது?

தொடர்ந்து, உட்பகுதி, வெளிப்புறம் மற்றும் மோதலினால் ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றில் 38 புள்ளிகளுக்கு 33.1 புள்ளிகள் மதிப்பெண்ணை ஹூண்டாய் டக்சன் பெற்றிருக்கின்றது. இவ்வாறு, அனைத்து தரப்பிலும் இக்கார் அதிக புள்ளிகளைப் பெற்றிருக்கின்ற காரணத்தினாலேயே யூரோ என்சிஏபி இக்காருக்கு ஐந்திற்கு ஐந்து நட்சத்திர பாதுகாப்பு அந்தஸ்தை வழங்கியிருக்கின்றது.

மோதல் ஆய்வில் ஐந்துக்கு 5 ஸ்டார்களை பெற்ற Hyundai Tucson! இந்த கார்தாங்க இந்தியாவிற்கு வரபோகுது?

ஹூண்டாய் டக்சன் காரில் தானியங்கி அவசர கால பிரேக்கிங், ஃபார்வார்டு கொள்ளிசன், லேன் கீப் அசிஸ்ட், டிரைவர் அட்டென்சன் அலர்ட் மற்றும் உள்ளிட்ட பன்முக சிறப்பம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், காருக்குள் அமர்ந்திருக்கும் பயணிகளின் தலைப் பகுதி, மார்பக பகுதி மற்றும் கால் பகுதி ஆகியவற்றிற்கு அதிக பாதுகாப்பை வழங்கும் வகையிலான சிறப்பு வசதிகளும் வழங்கப்பட்டிருக்கின்றன.

தற்போது சந்தையில் மிக அதிக பாதுகாப்பான வாகனங்களின் வருகை அதிகரித்து காணப்படுகின்றது. அண்மையில் விற்பனைக்கான அறிமுகத்தைப் பெற்ற மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் மிக அதிக பாதுகாப்பான வாகனம்ம என்ற பட்டத்தைப் பெற்றிருக்கின்றது. இதுவும், ஹூண்டாய் டக்சனைப் போல ஐந்திற்கு ஐந்து என்ற பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது.

மோதல் ஆய்வில் ஐந்துக்கு 5 ஸ்டார்களை பெற்ற Hyundai Tucson! இந்த கார்தாங்க இந்தியாவிற்கு வரபோகுது?

முன்னதாக விற்பனைக்கு வந்த டாடா பஞ்ச் மைக்ரோ எஸ்யூவியும் இதேபோல் மிக அதிக புள்ளிகளைப் பெற்று ஐந்திற்கு ஐந்து ஸ்டார் பாதுகாப்பான கார் என்ற மகுடத்தைச் சூடியது. இதுபோன்ற பாதுகாப்பான கார்களுக்கு கூடுதல் டஃப் கொடுக்கும் வகையில் ஹூண்டாய் நிறுவனம் டக்சன் காரை உருவாக்கி இருப்பது, யூரோ என்சிஏபி அமைப்பு நடத்திய மோதல் ஆய்வின் வாயிலாக தற்போது தெரிய வந்திருக்கின்றது.

மோதல் ஆய்வில் ஐந்துக்கு 5 ஸ்டார்களை பெற்ற Hyundai Tucson! இந்த கார்தாங்க இந்தியாவிற்கு வரபோகுது?

இப்புதிய கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் பட்சத்தில் அதிக பாதுகாப்பான வாகனம் என்ற பெருமை உடன் விற்பனையில் கெத்துக் காட்டிக் கொண்டிருக்கும் மஹிந்திரா எஸ்யூவி காருக்கு கடும் போட்டியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காரின் பாதுகாப்பு திறன் பற்றி அண்மையில் வெளியாகிய தகவலை காண இங்கே க்ளிக் செய்யவும்.

Most Read Articles

English summary
2022 hyundai tucson scored 5 star safety rating in euro ncap
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X