காலரை தூக்கி விடுங்க... மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் எவ்ளோ பாதுகாப்பானது தெரியுமா? வாயை பிளக்கும் உலக நாடுகள்!

குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் அசத்தலாக செயல்பட்டு, இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

காலரை தூக்கி விடுங்க... மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் எவ்ளோ பாதுகாப்பானது தெரியுமா? வாயை பிளக்கும் உலக நாடுகள்!

மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) கார் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் டெலிவரி பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. டெலிவரி பணிகள் அதிகாரப்பூர்வ தொடங்கப்பட்டு ஒரு சில நாட்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் மோதல் சோதனை (Crash Test) முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

காலரை தூக்கி விடுங்க... மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் எவ்ளோ பாதுகாப்பானது தெரியுமா? வாயை பிளக்கும் உலக நாடுகள்!

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை, குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பு மோதல் சோதனைக்கு உட்படுத்தியது. இதில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 5 ஸ்டார் ரேட்டிங்கையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 4 ஸ்டார் ரேட்டிங்கையும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 பெற்றுள்ளது.

காலரை தூக்கி விடுங்க... மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் எவ்ளோ பாதுகாப்பானது தெரியுமா? வாயை பிளக்கும் உலக நாடுகள்!

குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற 5வது 'மேட் இன் இந்தியா' கார் என்ற பெருமையும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு கிடைத்துள்ளது. இதற்கு முன்னதாக டாடா நெக்ஸான், டாடா அல்ட்ராஸ், டாடா பன்ச் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆகிய 4 கார்கள் குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

காலரை தூக்கி விடுங்க... மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் எவ்ளோ பாதுகாப்பானது தெரியுமா? வாயை பிளக்கும் உலக நாடுகள்!

பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 17க்கு 16.03 புள்ளிகளையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49க்கு 41.66 புள்ளிகளையும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் ஸ்கோர் செய்துள்ளது. புள்ளிகள் அடிப்படையில் பார்த்தால், இந்தியாவின் பாதுகாப்பான கார்களின் பட்டியலில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் 5வது இடத்தை பிடித்துள்ளது.

காலரை தூக்கி விடுங்க... மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் எவ்ளோ பாதுகாப்பானது தெரியுமா? வாயை பிளக்கும் உலக நாடுகள்!

இந்த பட்டியலில் டாடா பன்ச் கார் முதலிடத்திலும் (17க்கு 16.45, 49க்கு 40.89) , மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் இரண்டாவது இடத்திலும் (17க்கு 16.42, 49க்கு 37.44), டாடா அல்ட்ராஸ் கார் மூன்றாவது இடத்திலும் (17க்கு 16.13, 49க்கு 29.00), டாடா நெக்ஸான் கார் நான்காவது இடத்திலும் (17க்கு 16.06, 49க்கு 25.00) உள்ளன. இந்த 5 கார்களை தவிர வேறு எந்த இந்திய காரும் குளோபல் என்சிஏபி அமைப்பிடம் 5 ஸ்டார் ரேட்டிங்கை வாங்கியதில்லை.

காலரை தூக்கி விடுங்க... மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் எவ்ளோ பாதுகாப்பானது தெரியுமா? வாயை பிளக்கும் உலக நாடுகள்!

ஆனால் மஹிந்திரா நிறுவனத்தின் வேறு சில கார்கள் குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் சிறந்த பாதுகாப்பை வெளிப்படுத்தியுள்ளன. இதன்படி மஹிந்திரா மராஸ்ஸோ கார் குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 4 ஸ்டார்களையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 2 ஸ்டார்களையும் பெற்றுள்ளது.

காலரை தூக்கி விடுங்க... மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் எவ்ளோ பாதுகாப்பானது தெரியுமா? வாயை பிளக்கும் உலக நாடுகள்!

இதுதவிர மஹிந்திரா தார் எஸ்யூவி கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 4 ஸ்டார்களையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 4 ஸ்டார்களையும் பெற்று அசத்தியுள்ளது. இந்த வரிசையில் தற்போது மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரும் குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் சிறப்பான பாதுகாப்பை வெளிக்காட்டியுள்ளது.

காலரை தூக்கி விடுங்க... மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் எவ்ளோ பாதுகாப்பானது தெரியுமா? வாயை பிளக்கும் உலக நாடுகள்!

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு ஏற்கனவே ஏராளமான முன்பதிவுகள் குவிந்துள்ளன. கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் கடைசியாக கிடைத்த தகவலின்படி மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்திருந்தன. தற்போது இதன் பாதுகாப்பு குறித்த அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகியுள்ளது.

காலரை தூக்கி விடுங்க... மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் எவ்ளோ பாதுகாப்பானது தெரியுமா? வாயை பிளக்கும் உலக நாடுகள்!

எனவே வரும் நாட்களில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை வாங்குவதற்கு இன்னும் பலர் ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் முன்பதிவு எண்ணிக்கை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. ஏனெனில் இந்திய வாடிக்கையாளர்கள் தற்போது பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் வழங்க தொடங்கியுள்ளனர்.

காலரை தூக்கி விடுங்க... மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் எவ்ளோ பாதுகாப்பானது தெரியுமா? வாயை பிளக்கும் உலக நாடுகள்!

முன்பெல்லாம் புதிய காரை வாங்கும்போது விலை, மைலேஜ், டிசைன், கலர் ஆகிய அம்சங்களை மட்டுமே பார்த்து கொண்டிருந்த இந்திய வாடிக்கையாளர்கள், தற்போது மோதல் சோதனை முடிவு என்ன? பாதுகாப்பில் எத்தனை ஸ்டார்களை வாங்கியுள்ளது? என்பதையும் கவனிக்க தொடங்கியுள்ளனர். எனவே கார் நிறுவனங்களும் தற்போது பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் வழங்க தொடங்கியுள்ளன.

காலரை தூக்கி விடுங்க... மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் எவ்ளோ பாதுகாப்பானது தெரியுமா? வாயை பிளக்கும் உலக நாடுகள்!

இந்தியாவை பொறுத்தவரை இந்த விஷயத்தில் டாடா மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுகின்றன. எனவேதான் அந்த நிறுவனங்களின் கார்கள் குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் அசத்தி வருகின்றன. இதற்காக இந்த 2 இந்திய நிறுவனங்களுக்கும் நாம் நிச்சயமாக பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும்.

காலரை தூக்கி விடுங்க... மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் எவ்ளோ பாதுகாப்பானது தெரியுமா? வாயை பிளக்கும் உலக நாடுகள்!

ஏனெனில் இந்த 2 நிறுவனங்களும் உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து கொண்டுள்ளன. முன்பெல்லாம் இந்திய கார்கள் பாதுகாப்பு இல்லாதவை என்ற ஏளன பேச்சு இருந்து வந்தது. அதனை தகர்த்து, உலக நாடுகளை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்ததில், டாடா மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களுக்கு முக்கிய பங்குள்ளது.

Most Read Articles

English summary
Mahindra xuv700 gets 5 star safety rating from global ncap
Story first published: Wednesday, November 10, 2021, 18:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X