பாதுகாப்பான காருங்க... எத்தனை உயிர்களை காப்பாத்தியிருக்கு தெரியுமா? பிரியாவிடை பெறுகிறது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார் இந்தியாவில் இருந்து பிரியாவிடை பெறுகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பாதுகாப்பான காருங்க... எத்தனை உயிர்களை காப்பாத்தியிருக்கு தெரியுமா? பிரியாவிடை பெறுகிறது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் கார் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்திருக்கும் அதிர்ச்சிகரமான செய்தியை நீங்கள் படித்திருப்பீர்கள். அத்துடன் ஈக்கோஸ்போர்ட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் திட்டத்தையும் ஃபோர்டு நிறுவனம் கைவிட்டுள்ளது. இந்த காம்பேக்ட் எஸ்யூவி ரக காரின் ஃபேஸ்லிஃப்ட் பண்டிகை காலத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

பாதுகாப்பான காருங்க... எத்தனை உயிர்களை காப்பாத்தியிருக்கு தெரியுமா? பிரியாவிடை பெறுகிறது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார் இந்திய சந்தையில் கடந்த 2013ம் ஆண்டு ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்தியாவில் உற்பத்தியை நிறுத்துவது என ஃபோர்டு நிறுவனம் எடுத்திருக்கும் முடிவால், ஈக்கோஸ்போர்ட் காரின் விற்பனையும் நிறுத்தப்படுகிறது. டீலர்களிடம் ஸ்டாக் உள்ள வரை மட்டுமே ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார் கிடைக்கும்.

பாதுகாப்பான காருங்க... எத்தனை உயிர்களை காப்பாத்தியிருக்கு தெரியுமா? பிரியாவிடை பெறுகிறது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

முன்னதாக ஃபோர்டு நிறுவனம் ஈக்கோஸ்போர்ட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சாலைகளில் சோதனை செய்து வந்தது. எனவே இந்த புதிய மாடலை வாடிக்கையாளர்கள் பலர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் இந்தியாவில் முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் ஒன்றாகும்.

பாதுகாப்பான காருங்க... எத்தனை உயிர்களை காப்பாத்தியிருக்கு தெரியுமா? பிரியாவிடை பெறுகிறது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார். இதன் மூலம் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட கார்களுக்கு அரசு வழங்கும் வரி சலுகைகளை ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரால் பெற முடிந்தது. இந்தியாவில் இன்று அதிக கார்கள் விற்பனையாகும் செக்மெண்ட்களில் ஒன்றாக சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட் திகழ்கிறது.

பாதுகாப்பான காருங்க... எத்தனை உயிர்களை காப்பாத்தியிருக்கு தெரியுமா? பிரியாவிடை பெறுகிறது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

இந்த செக்மெண்ட்டை சேர்ந்த கார்களுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு காணப்படுகிறது. எனவே ஒவ்வொரு நிறுவனமும் வரிசையாக இந்த செக்மெண்ட்டில் நுழைந்து வருகின்றன. இதன் காரணமாக இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் தொடர்ச்சியாக பல்வேறு புதிய புதிய கார்கள் அறிமுகமாகி கொண்டே உள்ளன.

பாதுகாப்பான காருங்க... எத்தனை உயிர்களை காப்பாத்தியிருக்கு தெரியுமா? பிரியாவிடை பெறுகிறது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஹூண்டாய் வெனியூ, மஹிந்திரா எக்ஸ்யூவி300, கியா சொனெட் உள்ளிட்ட கார்களை தற்போது இந்த செக்மெண்ட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. புதுவரவுகளான நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் ஆகிய கார்களின் விற்பனையும் குறைவான விலை காரணமாக மிகவும் சிறப்பாக உள்ளது.

பாதுகாப்பான காருங்க... எத்தனை உயிர்களை காப்பாத்தியிருக்கு தெரியுமா? பிரியாவிடை பெறுகிறது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

ஆனால் இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்ட கார்களில் ஒன்றாக கருதப்படும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் இந்திய வாடிக்கையாளர்களிடம் இருந்து பிரியாவிடை பெறவுள்ளது. போட்டி குறையும் என்பதால், மற்ற நிறுவனங்களுக்கு வேண்டுமானால் இது மகிழ்ச்சியை தரலாம். ஆனால் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ரசிகர்களுக்கு இது நிச்சயமாக கவலையை ஏற்படுத்தும் விஷயமாகவே இருக்கும்.

பாதுகாப்பான காருங்க... எத்தனை உயிர்களை காப்பாத்தியிருக்கு தெரியுமா? பிரியாவிடை பெறுகிறது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

இந்தியாவில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. ஏனெனில் இது இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் பாதுகாப்பான கார்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார், சாலை விபத்துக்களில் இருந்து பலமுறை டிரைவர்களின் உயிரை காப்பாற்றியுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பான காருங்க... எத்தனை உயிர்களை காப்பாத்தியிருக்கு தெரியுமா? பிரியாவிடை பெறுகிறது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த கார்தான் தற்போது இந்திய சந்தையில் விற்பனையில் இருந்து விலக்கப்படவுள்ளது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மட்டுமல்லாது, ஃபோர்டு நிறுவனத்தின் மற்ற கார்களும் இந்திய சந்தையில் விற்பனையில் இருந்து விலக்கப்படவுள்ளன. எனினும் விலை உயர்ந்த கார்களை ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும்.

பாதுகாப்பான காருங்க... எத்தனை உயிர்களை காப்பாத்தியிருக்கு தெரியுமா? பிரியாவிடை பெறுகிறது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

இதற்கு சிபியூ வழியை ஃபோர்டு தேர்வு செய்துள்ளது. கார் முழுவதும் கட்டமைக்கப்பட்ட நிலையில், இந்தியாவிற்கு நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டு வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்யப்படும். இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டாலாவது வரிகள் ஓரளவிற்கு குறைவாக இருக்கும். ஆனால் சிபியூ வழியில், வாடிக்கையாளருக்கு விற்பனை செய்யப்படும் வகையில், கார் முழுமையாக தயாராகி வரும்.

பாதுகாப்பான காருங்க... எத்தனை உயிர்களை காப்பாத்தியிருக்கு தெரியுமா? பிரியாவிடை பெறுகிறது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

எனவே அதிக வரிகள் காரணமாக அந்த கார்களின் விலை இன்னும் அதிகமாக இருக்கும். ஃபோர்டு நிறுவனம் கடுமையான நஷ்டம் காரணமாகவே, இந்தியாவில் உற்பத்தியை நிறுத்துவது என்ற கடினமான முடிவை எடுத்துள்ளது. சில ஆண்டுகளுக்கு பிறகு இந்த முடிவை ஃபோர்டு நிறுவனம் மறுபரிசீலனை செய்யுமா? என்பது உறுதியாக தெரியவில்லை.

Most Read Articles

English summary
Ford ecosport facelift india launch plan cancelled check details here
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X