எந்த வேரியண்ட்டில் புதிய Hyundai i20 N Line காரை வாங்குவது? என்6-ஆ (அ) என்8-ஆ? இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்!!

இந்தியாவில் விற்பனை செய்யும் கார்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் i20 ஹேட்ச்பேக் காரின் புதிய N Line வெர்சனை Hyundai நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த செயல்திறன்மிக்க-வெர்சனுக்கான எக்ஸ்-ஷோரூம் விலைகள் எதுவும் தற்போதைக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

எந்த வேரியண்ட்டில் புதிய Hyundai i20 N Line காரை வாங்குவது? என்6-ஆ (அ) என்8-ஆ? இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்!!

வருகிற செப்டம்பர் 2ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. புதிய i20 N Line காருக்கான முன்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. இந்த காரை முன்பதிவு செய்வதற்கு முன், i20 N Line-இன் என்6 & என்8 வேரியண்ட்களை பற்றியும், அவை இரண்டிற்கு இடையே உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை பற்றியும் இந்த செய்தியில் விரிவாக தெரிந்துக்கொள்ளுங்கள்.

எந்த வேரியண்ட்டில் புதிய Hyundai i20 N Line காரை வாங்குவது? என்6-ஆ (அ) என்8-ஆ? இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்!!

முதலில் i20 N Line காரில் வழங்கப்பட்டுள்ள என்ஜின் தேர்வை பற்றி பார்த்துவிடுவோம். i20 காரில் என்ஜின் தேர்வுகளுள் ஒன்றாக வழங்கப்பட்டுவந்த 1 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் தான் புதிய N Line மாடலிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டர்போ-பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 120 பிஎஸ் மற்றும் 172 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

எந்த வேரியண்ட்டில் புதிய Hyundai i20 N Line காரை வாங்குவது? என்6-ஆ (அ) என்8-ஆ? இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்!!

இதனுடன் 6-ஸ்பீடு iMT அல்லது 7-ஸ்பீடு DCT (Dual-clutch automatic) என்ற டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம். இதில் iMT தேர்வில் லிட்டருக்கு 20கிமீ மைலேஜையும், DCT தேர்வில் 20.25கிமீ மைலேஜையும் இந்த புதிய செயல்திறன்மிக்க கார் வழங்குவதாக தற்போது வரையில் நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.

எந்த வேரியண்ட்டில் புதிய Hyundai i20 N Line காரை வாங்குவது? என்6-ஆ (அ) என்8-ஆ? இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்!!

இதில் i20 N Line காரின் என்6 வேரியண்ட்டில் iMT தேர்வு மட்டுமே கிடைக்கும். இதனை காட்டிலும் சற்று விலைமிக்க என்8 வேரியண்ட்டில் தான் இரு டிரான்ஸ்மிஷன் தேர்வுகளும் கிடைக்கும். வெளிப்பக்கத்தில் தன்னிச்சையாக இயங்கக்கூடிய halogen ஹெட்லேம்ப்கள், முன்பக்க ப்ரோஜெக்டர் மூடுபனி விளக்குகள், பின்பக்கத்திலும் எல்இடி விளக்குகள் உள்ளிட்டவற்றை புதிய N Line கார் கொண்டுள்ளது.

எந்த வேரியண்ட்டில் புதிய Hyundai i20 N Line காரை வாங்குவது? என்6-ஆ (அ) என்8-ஆ? இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்!!

இவற்றுடன் கட்டக்கட்டமான பேட்டர்னில் க்ரில், 16 இன்ச்சில் N Line லோகோ உடன் இரட்டை-நிற அலாய் சக்கரங்கள், இரட்டை-எக்ஸாஸ்ட் குழாய், பக்கவாட்டு இறக்கைகளுடன் ஸ்போர்டியான ஸ்பாய்லர், சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னா, டர்ன் இண்டிகேட்டர்களுடன் பின்பக்கத்தை காட்டும் பக்கவாட்டு கண்ணாடிகள் உள்ளிட்டவையும் இந்த செயல்திறன்மிக்க i20 காரின் வெளிப்பக்கத்தில் தோற்றத்தை மெருக்கேற்று வகையில் வழங்கப்பட்டுள்ளன.

எந்த வேரியண்ட்டில் புதிய Hyundai i20 N Line காரை வாங்குவது? என்6-ஆ (அ) என்8-ஆ? இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்!!

இவற்றுடன் கூடுதலாக என்8 வேரியண்ட்டில் எல்இடி DRL உடன் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் கார்னரிங் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. கருப்பு & பழுப்பு நிறங்களில் வடிவமைக்கப்பட்ட உட்புறத்தில், வெளிப்பக்கத்தை போல் ஆங்காங்கே N Line லோகோக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

எந்த வேரியண்ட்டில் புதிய Hyundai i20 N Line காரை வாங்குவது? என்6-ஆ (அ) என்8-ஆ? இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்!!

இத்தகைய இதன் கேபினில் 8-இன்ச் தொடுத்திரை அமைப்பு, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர் இல்லா ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு, ஆடியோ & மொபைல் அழைப்பு கண்ட்ரோல் உடன் சாய்வான ஸ்டேரிங் சக்கரம், சன்ரூஃப், க்ரூஸ் கண்ட்ரோல், பின் இருக்கைக்கும் சேர்த்து மேனுவல் ஏசி, 12 வோல்ட் முன்பக்க Power socket உள்ளிட்டவை முக்கிய சிறப்பம்சங்களாக வழங்கப்படுகின்றன.

எந்த வேரியண்ட்டில் புதிய Hyundai i20 N Line காரை வாங்குவது? என்6-ஆ (அ) என்8-ஆ? இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்!!

முன் இருக்கைகளில் தலையணையை தேவைக்கு ஏற்ப சரி செய்து கொள்ள முடியும். அதேநேரம் ஓட்டுனர் இருக்கையை முற்றிலுமாக மடக்கி வைத்து கொள்ளவும் முடியும். மறுப்பக்கம் டாப் என்8 வேரியண்ட்டில், paddle shifters (DCT only) மிக முக்கியமான, பிரத்யேகமான வசதியாக வழங்கப்பட, பின் இருக்கை வரிசையிலும் கை & தலை தலையணை வழங்கப்பட்டுள்ளது.

எந்த வேரியண்ட்டில் புதிய Hyundai i20 N Line காரை வாங்குவது? என்6-ஆ (அ) என்8-ஆ? இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்!!

அதேபோல் முன் இருக்கைகளுக்கு மத்தியில் வழங்கப்படும் கை தலையணையும் என்8 வேரியண்ட்டில் மட்டும் நகர்த்த முடியும். மேலும், குரல் மூலமாக கட்டுப்படுத்தக்கூடிய சன்ரூஃப், உள்ளே நுழைந்ததும் வரவேற்பது போன்றதான விளக்குகள், என்ஜினை ஸ்டார்ட்/ ஸ்டாப் செய்ய பொத்தான், தானியாங்கி ஏசி, பின்பக்கத்திலும் wiper & washer முதலிய வசதிகளும் என்8-இல் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.

எந்த வேரியண்ட்டில் புதிய Hyundai i20 N Line காரை வாங்குவது? என்6-ஆ (அ) என்8-ஆ? இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்!!

தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை N Line மாடலின் இந்த டாப் வேரியண்ட்டில் சற்று பெரியதாக 10.25 இன்ச்சில் பெறலாம். அதேபோல் sub-woofer உடன் 7-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், Bluelink இணைப்பு கார் தொழிற்நுட்பம் மற்றும் Bluelink ஒருங்கிணைக்கப்பட்ட smartwatch app போன்ற சிறப்பு தொழிற்நுட்பங்களையும் டாப் N Line வேரியண்ட்டில் பெற முடியும்.

எந்த வேரியண்ட்டில் புதிய Hyundai i20 N Line காரை வாங்குவது? என்6-ஆ (அ) என்8-ஆ? இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்!!

பயணிகள் & வாகனத்தின் பாதுகாப்பிற்கு, இரட்டை முன்பக்க காற்றுப்பைகள், டயரின் அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிக்கும் அமைப்பு, EBD உடன் ABS, ESC, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் & கேமிரா, சீட் பெல்ட் அணியவில்லை என்றாலோ அல்லது அதி வேகத்தில் சென்றாலோ எச்சரிக்கும் அமைப்புகள் மற்றும் ISOFIX குழந்தைக்கான இருக்கை உள்ளிட்டவை i20 N Line மாடலில் பொருத்தப்பட்டுள்ளன.

எந்த வேரியண்ட்டில் புதிய Hyundai i20 N Line காரை வாங்குவது? என்6-ஆ (அ) என்8-ஆ? இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்!!

இவற்றுடன் என்8 வேரியண்ட்டில் கூடுதலாக பக்கவாட்டு காற்றுப்பைகள், கார் திருடு போவதை எச்சரிக்கும் வசதி மற்றும் உயரத்தை சரி செய்யக்கூடிய முன் சீட்பெல்ட்கள் வழங்கப்படுகின்றன. எனக்கு தெரிந்தவரையில் புதிய Hyundai i20 N Line காரின் இரு வேரியண்ட்களை பற்றி கூறிவிட்டேன். இதில் எது உங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்பதை பார்த்து தேர்வு செய்யுங்கள். இந்த காருக்கான முன்பதிவு ரூ.25,000 என்கிற முன் தொகையுடன் நடைபெற்று வருகிறது.

Most Read Articles

English summary
Hyundai i20 N Line will be available in N6 & N8 trims, Let's see what each has to offer.
Story first published: Thursday, August 26, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X