துபாய் பதிவெண்ணில் வலம் வந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்! சுற்றி வளைத்த கேரளா போலீஸ்! அடுத்து என்ன நடந்தது தெரியுமா?

கேரளாவில் துபாய் பதிவெண்ணில் வலம் வந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை மாநில மோட்டார் வாகன துறையைச் சேர்ந்த போலீஸார் சிறை பிடித்த சம்பவம் வைரலாகி வருகின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

கேரளாவில் துபாய் பதிவெண்ணில் வலம் வந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்! சுற்றி வளைத்த போலீஸ்! அடுத்து என்ன நடந்தது தெரியுமா?

கேரள மாநிலம், திருவனந்தபுரத்திலேயே இந்த விநோத சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இங்குதான் துபாய் பதிவெண் கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு மோட்டார் வாகன துறை காவலர்கள் அபராதத் தொகைக்கான செல்லாணை வழங்கி அதிரடி காட்டியிருக்கின்றனர்.

கேரளாவில் துபாய் பதிவெண்ணில் வலம் வந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்! சுற்றி வளைத்த போலீஸ்! அடுத்து என்ன நடந்தது தெரியுமா?

நுழைவு வரியை செலுத்தாத காரணத்தினாலேயே கேரள மோட்டார் வாகனத்துறையினர் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு அபராதம் வழங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு பதிவெண் கொண்ட வாகனங்கள் இந்தியாவில் நுழைய வரி கட்ட வேண்டும் என்பது விதியாகும்.

கேரளாவில் துபாய் பதிவெண்ணில் வலம் வந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்! சுற்றி வளைத்த போலீஸ்! அடுத்து என்ன நடந்தது தெரியுமா?

ஆனால், இதனை செலுத்த துபாய் பதிவெண் கொண்ட அக்கார் தவறியிருக்கின்றது. ஆய்வின்போது இதனைக் கண்டறிந்த போலீஸார் ரூ. 35 ஆயிரத்திற்கான அபராத செல்லாணை வழங்கியிருக்கின்றனர். வெளிநாட்டு பதிவெண் கொண்ட வாகனங்கள் இந்தியாவில் நுழைய எவ்வளவு வரி வசூலிக்கப்படுகின்றது என்பது பற்றிய தகவல் தெளிவாக தெரியவில்லை.

கேரளாவில் துபாய் பதிவெண்ணில் வலம் வந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்! சுற்றி வளைத்த போலீஸ்! அடுத்து என்ன நடந்தது தெரியுமா?

ஆனால், வெளிநாட்டில் பயன்படுத்தப்பட்டு உள்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கும் 100 சதவீதத்திற்கும் அதிகமான வரி வசூலிக்கப்பட்டு வருகின்றது. இதனைத் தவிர்க்கவே ரோல்ஸ் ராய்ஸ் கார் உரிமையாளர் நுழைவு வரியைச் செலுத்தாமல் இருந்திருக்கலாம் என கூறப்படுகின்றது.

கேரளாவில் துபாய் பதிவெண்ணில் வலம் வந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்! சுற்றி வளைத்த போலீஸ்! அடுத்து என்ன நடந்தது தெரியுமா?

பெரும்பாலான வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களின் வெளிநாட்டு பதிவெண் கொண்ட சொகுசு கார்களை கார்னெட் வழியாக இந்தியாவில் இறக்குமதி செய்து பயன்படுத்துகின்றனர். ஆனால், இவ்வழியாகக் கொண்டு வரப்படும் வாகனங்கள் சில நாட்கள் அல்லது சில வாரங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

அதேசமயம், அதிகாரிகளை அணுகி உரிய அனுமதியைப் பெறும் பட்சத்தில் செல்லுபடியாகும் காலத்தை அதிகரிக்கச் செய்ய முடியும். கார்னெட் என்பது வாகனங்களுக்கான பாஸ்போர்ட் ஆகும். இது வேறொரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு பரிமாற்றம் செய்ய உதவுகின்றது.

கேரளாவில் துபாய் பதிவெண்ணில் வலம் வந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்! சுற்றி வளைத்த போலீஸ்! அடுத்து என்ன நடந்தது தெரியுமா?

கேரள போலீஸார் அபராதம் விதித்திருக்கும் காரானது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடலாகும். இந்த காரின் புதிய மாடல் ரூ. 6.95 கோடிக்கும் அதிகமான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த காரின் ஒட்டுமொத்த எடை சுமார் 2.5 டன் ஆகும். டிசைன் மற்றும் சொகுசு வசதிகளில் புதிய பரிணாமம் பெற்று இக்கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

கேரளாவில் துபாய் பதிவெண்ணில் வலம் வந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்! சுற்றி வளைத்த போலீஸ்! அடுத்து என்ன நடந்தது தெரியுமா?

புதிய பரிணாமமாக50:50 எடையை பகிரும் வகையில் இதன் வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம், இதன் பூட் ஸ்பேசையும் அதிகப்படுத்தும் வகையில் 507 லிட்டராக அது உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பேந்தம் கார்களில் பயன்படுத்துவதைப் போல் அலுமினியம் பேஸ் ஃப்ரேம்கள் இக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி இன்னும் பல சிறப்பம்சங்கள் 2021 ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரில் இடம் பெற்றிருக்கின்றன. இதுகுறித்த இன்னும் பல சுவாரஷ்ய தகவல்களை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kerala MVD Fined Dubai Registered Rolls Royce Ghost For Not Paying Duty In India. Read In Tamil.
Story first published: Friday, July 16, 2021, 11:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X