இந்தியா வந்தது முதல் 2021 ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார்!! யாருக்காக வந்திருக்கோ!

2021 ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் இந்தியாவை வந்தடைய துவங்கியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் வெளியாகியுள்ள அதன் முதல் யூனிட்டின் படத்தை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியா வந்தது முதல் 2021 ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார்!! யாருக்காக வந்திருக்கோ!

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்டின் முதல் தலைமுறை வெளியாகி கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதனை தொடர்ந்து சமீபத்தில் உலகளவில் வெளியான இதன் இரண்டாம் தலைமுறையின் முதல் மாதிரி இந்தியாவில் தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா வந்தது முதல் 2021 ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார்!! யாருக்காக வந்திருக்கோ!

ஜெய் மெஹ்ரா என்ற கொல்கத்தாவை சேர்ந்த முகப்புத்தக க்ரூப்பின் மூலம் கிடைத்துள்ள இது தொடர்பான படத்தை வைத்து பார்க்கும்போது 2021 கோஸ்ட் இந்தியாவில் வருங்கால வாடிக்கையாளர்களுக்காக காட்சிப்படுத்தப்படுவதற்காக கொண்டுவரப்பட்டிருக்கலாம்.

இந்தியா வந்தது முதல் 2021 ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார்!! யாருக்காக வந்திருக்கோ!

2021 ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்டின் விலை கிட்டத்தட்ட ரூ.6.95 கோடி என கணிக்கப்பட்டுள்ளது. புதிய தலைமுறைக்காக டிசைன் மாற்றங்களுடன் கோஸ்ட் மாடலின் மொத்த பரிமாண அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. காரின் எடை ஏறக்குறைய 2.5 டன்கள் ஆகும்.

இந்தியா வந்தது முதல் 2021 ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார்!! யாருக்காக வந்திருக்கோ!

மேம்பட்ட இயக்கவியலினால் கோஸ்ட் முன் சக்கரங்களுக்கு பின்னால் பொருத்தப்பட்ட என்ஜின் உடன் 50:50 எடை விநியோகத்தை அடைய முடியும். அதே நேரத்தில் பரிமாணங்கள் அதிகரிப்புடன் பூட் ஸ்பேஸின் கொள்ளளவு 507 லிட்டராக மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா வந்தது முதல் 2021 ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார்!! யாருக்காக வந்திருக்கோ!

புதிய கோஸ்ட், ரோல்ஸ் ராய்ஸ் பாண்டோமின் அலுமினியம் ஸ்பேஸ்ஃப்ரேம் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய ப்ளானர் சஸ்பென்ஷன் செட்அப் உடன் ரோல்ஸ் ராய்ஸின் மேஜிக் கார்பேட் ரைடையும் 2021 கோஸ்ட் பெற்றுள்ளது.

இந்தியா வந்தது முதல் 2021 ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார்!! யாருக்காக வந்திருக்கோ!

இவற்றுடன் நம்பவே முடியாத தொழிற்நுட்ப வசதிகள் நிறைந்த வாகனமாக இது கொண்டுவரப்பட்டுள்ளது. இரண்டாம் தலைமுறை ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மிக முக்கிய அப்கிரேடாக புதிய 6.75 லிட்டர், இரட்டை டர்போ வி12 என்ஜினை ஏற்றுள்ளது.

இந்தியா வந்தது முதல் 2021 ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார்!! யாருக்காக வந்திருக்கோ!

அதிகப்பட்சமாக 5,000 ஆர்பிஎம்-ல் 571 எச்பி மற்றும் 6,000 ஆர்பிஎம்-ல் 850 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட இந்த என்ஜினிற்கு முன்னதாக கோஸ்ட்டில் 6.6 லிட்டர் வி12 என்ஜின் பொருத்தப்பட்டு வந்தது. அதேபோல் பின் சக்கர ட்ரைவிற்கு மாற்றாக அனைத்து சக்கர ட்ரைவ் சிஸ்டம் இந்த 2021 மாடலில் வழங்கப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
2021 Rolls Royce Ghost Arrives In India – First Unit Spied
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X