கூடுதல் வசதிகளுடன் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி அறிமுகம்!

கூடுதல் வசதிகளுடன் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடலில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள், விலை விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கூடுதல் வசதிகளுடன் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி அறிமுகம்!

இந்தியாவில் சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார் சந்தையில் கடும் போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு மாடலும் குறிப்பிடத்தக்க தனித்துவமான அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன. இந்த நிலையில், இந்த சந்தையில் வந்த முதல் மாடலான ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி தொடர்ந்து தன்னை சிறந்த மாடலாக முன்னிறுத்தி வருகிறது.

கூடுதல் வசதிகளுடன் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி அறிமுகம்!

அந்த வகையில், சந்தைப் போட்டியை சமாளிக்கும் வகையில் கூடுதல் சிறப்பம்சங்களுடன், விலை குறைக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய மாடல் ரூ.7.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. முந்தைய மாடலைவிட ரூ.35,000 குறைவான விலையில் களமிறக்கப்பட்டு இருக்கிறது.

2021ம் ஆண்டு மாடலாக வந்திருக்கும் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் ஆம்பியன்ட், ட்ரென்ட், டைட்டானியம், டைட்டானியம் ப்ளஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும். அனைத்து வேரியண்ட்டுகளுமே பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும்.

கூடுதல் வசதிகளுடன் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி அறிமுகம்!

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் டைட்டானியம் வேரியண்ட்டிலும் சன்ரூஃப் வழங்கப்படுகிறது. ஏற்கனவே டைட்டானியம் ப்ளஸ் வேரியண்ட்டில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

கூடுதல் வசதிகளுடன் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி அறிமுகம்!

அதேபோன்று, புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் ஃபோர்டு பாஸ் என்ற கனெக்டெட் கார் தொழில்நுட்ப வசதியும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது, இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் நேரடி இணைய வசதியுடன் வந்துள்ளது.

கூடுதல் வசதிகளுடன் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி அறிமுகம்!

இதன்மூலமாக, வாடிக்கையாளர்கள் தங்களது ஸ்மார்ட்ஃபோனில் உள்ள ஃபோர்டு பாஸ் செயலி மூலமாக, ரிமோட் முறையில் வெளியில் இருந்தே எஞ்சினை ஆன் செய்வது, ஆஃப் செய்வதற்கான வாய்ப்புகளை பெற முடியும். ஏசி சிஸ்டத்தையும் ரிமோட் முறையில் கட்டுப்படுத்த முடியும்.

கூடுதல் வசதிகளுடன் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி அறிமுகம்!

மற்றபடி, முந்தைய மாடலில் இருந்த பல வசதிகள் அப்படியே தக்க வைக்கப்பட்டுள்ளன. இந்த மாடலில் 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம், சிங்க்-3 தொழில்நுட்ப வசதி, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள் உள்ளன.

கூடுதல் வசதிகளுடன் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி அறிமுகம்!

தவிரவும், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், புஷ் பட்டன் ஸ்டார்ட், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற பல வசதிகள் உள்ளன.

கூடுதல் வசதிகளுடன் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி அறிமுகம்!

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் தக்க வைக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 123 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் எஞ்சின் 100 பிஎச்பி பவரையும், 215 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

கூடுதல் வசதிகளுடன் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி அறிமுகம்!

இரண்டு எஞ்சின் தேர்வுகளிலுமே 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் எஞ்சினில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்படுகிறது.

கூடுதல் வசதிகளுடன் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி அறிமுகம்!

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் ரூ.7.99 லட்சம் முதல் ரூ.10.99 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் மாடல் ரூ.8.69 லட்சம் முதல் ரூ.11.49 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது. டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் நிஸான் மேக்னைட் எஸ்யூவிகளுக்கு போட்டியாக இருந்து வருகிறது.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford India has launched the 2021 Ecosport SUV in the Indian market. The new Ford Ecosport is, however, just a model year update offered with subtle changes and a few new feature additions.
Story first published: Monday, January 4, 2021, 14:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X