புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 காரின் ஏற்றுமதி தொடங்கியது... தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டவை...

புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 காரின் ஏற்றுமதி தொடங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 காரின் ஏற்றுமதி தொடங்கியது... தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டவை...

புதிய தலைமுறை ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக் காரை ஹூண்டாய் நிறுவனம் கடந்த நவம்பர் 5ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார் விற்பனைக்கு வந்து கிட்டத்தட்ட 2 மாதங்கள் மட்டுமே ஆகிறது.

புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 காரின் ஏற்றுமதி தொடங்கியது... தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டவை...

அதற்குள்ளாக இந்த காருக்கு 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்து விட்டன. இந்த சூழலில் புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 காரை இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளை ஹூண்டாய் நிறுவனம் தற்போது தொடங்கியுள்ளது. தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில்தான் ஹூண்டாய் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைந்துள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்.

புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 காரின் ஏற்றுமதி தொடங்கியது... தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டவை...

புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார் இங்கிருந்துதான் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் கிடைத்துள்ள பெரும் வரவேற்பை தொடர்ந்து 'மேட் இன் இந்தியா' ஹூண்டாய் ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக் இனி வெளிநாடுகளின் சாலைகளையும் கலக்கவுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து தென் ஆப்ரிக்கா, சிலி மற்றும் பெரு உள்ளிட்ட நாடுகளுக்கு முதல் பேட்ஜ் தற்போது ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 காரின் ஏற்றுமதி தொடங்கியது... தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டவை...

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணிகள் கார்களை அதிகளவில் ஏற்றுமதி செய்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக ஹூண்டாய் திகழ்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. உலகின் 5 கண்டங்களில் உள்ள 88 நாடுகளுக்கு 'மேட் இன் இந்தியா' கார்களை ஹூண்டாய் நிறுவனம் ஏற்றுமதி செய்து வருகிறது.

புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 காரின் ஏற்றுமதி தொடங்கியது... தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டவை...

சரி, இனி புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 காருக்கு வருவோம். இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பலேனோ, கடந்த 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வந்த டாடா அல்ட்ராஸ் மற்றும் டொயோட்டா க்ளான்சா உள்ளிட்ட கார்களுக்கு புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 விற்பனையில் கடுமையான சவாலை அளித்து வருகிறது.

புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 காரின் ஏற்றுமதி தொடங்கியது... தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டவை...

புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 காரில் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என மொத்தம் 3 இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் நான்கு-சிலிண்டர் டீசல் மற்றும் 1.0 லிட்டர் மூன்று-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் ஆகிய தேர்வுகளை புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 பெற்றுள்ளது.

புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 காரின் ஏற்றுமதி தொடங்கியது... தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டவை...

பல்வேறு இன்ஜின் தேர்வுகளை போல், புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 காரில் ஏராளமான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதில், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் 10.25 இன்ச் ஹெச்டி டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ப்ளூலிங்க் கனெக்டிவிட்டி ஆகிய வசதிகள் முக்கியமானவை.

புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 காரின் ஏற்றுமதி தொடங்கியது... தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டவை...

இதுதவிர ஏர் ப்யூரிஃபையர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் சன்ரூஃப் உள்ளிட்ட வசதிகளையும் புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக் கார் பெற்றுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, January 4, 2021, 23:58 [IST]
English summary
New-gen Hyundai i20 Export Begins From India - Details. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+