ஹூண்டாயின் செயல்திறன்மிக்க ஐ20 என் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!! அறிமுகம் எப்போது?
அறிமுகத்திற்கு முன்னதாக ஹூண்டாய் ஐ20 என் லைன் கார் மீண்டும் இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹூண்டாய் முதல் என் வரிசை காராக இந்த 2021ஆம் வருட இறுதியில் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படும் ஐ20 என் கார் ஹூண்டாய் என் கார்களுக்கே உண்டான ஸ்டைலிஷான தோற்றத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

இதற்கிடையில் இந்த கார் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் தற்போது மீண்டும் பொது சாலையில் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள ஐ20 என் காரின் ஸ்பை படம் ஆட்டோகார் இந்தியா செய்திதளம் மூலமாக நமக்கு கிடைத்துள்ளன.

வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் வழக்கமான ஐ20 ஹேட்ச்பேக் காருடன் ஒப்பிடுகையில் ஐ20 என் கார் சற்று வித்தியாசமாக கூடுதல் ஸ்டைலாக அதன் செயல்படுதிறனிற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.

இந்த வகையில் சற்று வித்தியாசமான வடிவில் முன் மற்றும் பின்பக்கத்தை பெற்றுவரவுள்ள இந்த செயல்திறன் மிக்க ஹூண்டாய் காரில் கூடுதலாக பக்கவாட்டில் க்ரே நிறத்தில் தாழ்வான பேனல்கள், கட்ட கட்டமான டிசைனில் என் லைன் முத்திரை உடன் கருப்பு நிற க்ரில் அமைப்பு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

பின்பக்கத்தில் ஐ20 என் கார் டிஃப்யூஸர் ஸ்டைலில் பம்பர், முக்கோண வடிவிலான ஃபாக்-விளக்கு மற்றும் க்ரோம்-ஆல் ஃபினிஷ் செய்யப்பட்ட இரட்டை-முனை எக்ஸாஸ்ட் சிஸ்டம் முதலியவற்றை பெறுகிறது.

வெளிநாட்டு சந்தைகளில் நான்கு விதமான நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்படும் ஐ20 என் காரில் 17 இன்ச்சில் இரட்டை நிறங்களில் அலாய் சக்கரங்கள் பொருத்தப்படவுள்ளன. உட்புறத்தில் ஐ20 என் பெரும்பான்மையாக வழக்கமான ஐ20 காரை தான் ஒத்திருக்கும்.

என்றாலும், என் முத்திரை உடன் பக்கெட் இருக்கைகள், பெஸ்போக் ஸ்டேரிங் சக்கரம், மெட்டல் பெடல்கள் மற்றும் என்-பிராண்டட் லெதர் கியர் க்னாப் உள்ளிட்டவற்றுடன் கேபினில் ஆங்காங்கே சிவப்பு நிற தொடுதல்களை எதிர்பார்க்கலாம்.

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இந்தியாவில் விற்பனைக்கு வரும் ஐ20 என் காரில் அதிகப்பட்சமாக 120 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் உறுமும் எக்ஸாஸ்ட் சத்தத்துடன் வழங்கப்படலாம். அதேநேரம் சஸ்பென்ஷன் அமைப்பும் மேம்படுத்தப்பட்டு வழங்கப்படலாம்.


Click it and Unblock the Notifications








