தண்டால் எடுக்க வேறு இடமே கிடைக்கலையா... காவல்துறை வெளியிட்ட வீடியோவால் ஷாக்கான இளசுகள்...

காரின் கூரை மீது ஏறி இளைஞர் ஒருவர் தண்டால் எடுப்பதைப் போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

தண்டால் எடுக்க வேறு இடமே கிடைக்கலையா... காவல்துறை வெளியிட்ட வீடியோவால் ஷாக்கான இளசுகள்...

உத்தரபிரதேச மாநில போலீஸார் கடந்த சனிக்கிழமை (மார்ச் 13) அன்று அவர்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஓர் வீடியோவைப் பகிர்ந்திருந்தனர். அந்த வீடியோவில், ஓர் நபர் காரின் கூரை மீது ஏறி தண்டால் எடுப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதுல என்னங்க அதிர்ச்சி என்ற கேள்வி உங்களுக்கு எழும்பலாம்.

தண்டால் எடுக்க வேறு இடமே கிடைக்கலையா... காவல்துறை வெளியிட்ட வீடியோவால் ஷாக்கான இளசுகள்...

இளைஞர் தண்டால் எடுத்தபோது கார் ஓடிக் கொண்டிருந்தது. அதாவது, குறிப்பிட்ட வேகத்தில் ஓடிக் கொண்டிருந்த காரில் இருந்து வெளியே வந்த அந்த இளைஞர், கார் கதவு வாயிலாக கூரை மீது ஏறி தண்டால் எடுத்திருக்கின்றார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் மிக வேகமாக வைரலானதை அடுத்து உபி போலீஸார் கண்களிலும் பட்டிருக்கின்றது.

தண்டால் எடுக்க வேறு இடமே கிடைக்கலையா... காவல்துறை வெளியிட்ட வீடியோவால் ஷாக்கான இளசுகள்...

இதன் பின்னரே மறு-எடிட் செய்யப்பட்ட வீடியோவை உபி காவல்துறை வெளியிட்டிருக்கின்றது. இந்த வீடியோவில் ஸ்டண்டிற்கு பின்னர் இளைஞர் மன்னிப்பு கோறுவதைப் போலவும், விதிமீறலில் ஈடுபட்டதற்காக அபராத செல்லாண் வழங்கப்பட்டது குறித்த தகவலையும் போலீஸார் அதில் இடம்பெற செய்திருக்கின்றனர்.

தண்டால் எடுக்க வேறு இடமே கிடைக்கலையா... காவல்துறை வெளியிட்ட வீடியோவால் ஷாக்கான இளசுகள்...

இந்த சாகசத்தைச் செய்தவதர் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் கிருஷ்ணா முராரி யதாவின் மகன் உஜ்வல் யாதவ் ஆவார். இவர்மீதே போலீஸார் கடும் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். முன்னதாக, உஜ்வல் யாதவின் ஸ்டண்ட் காட்சி மட்டுமே வைரலாகி வந்தநிலையில் தற்போது போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கைக் குறித்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகின்றது.

தண்டால் எடுக்க வேறு இடமே கிடைக்கலையா... காவல்துறை வெளியிட்ட வீடியோவால் ஷாக்கான இளசுகள்...

பொதுவாக, நம்ம ஊர் இளைஞர்கள் மத்தியில் சில விநோதமான சேலஞ்ஜ்கள் வைரலாவது வழக்கம். அந்தவகையில், உஜ்வல் யாதவின் இந்த அபாயகரமான சேலஞ்ஜும் வைரலாகிவிடக் கூடாது என்ற நோக்கிலேயே போலீஸார் இந்த உடனடி நடவடிக்கையில் களமிறங்கியிருக்கின்றனர். குறிப்பாக, விதிமீறலில் ஈடுபடுவர் யாராக இருந்தாலும் காவல்துறை கட்டாயம் கடும் நடவடிக்கை எடுக்கும் என்பதை வெளிப்படுத்தும் இந்த தரமான சம்பவத்தை நிகழ்த்தியிருக்கின்றனர்.

தண்டால் எடுக்க வேறு இடமே கிடைக்கலையா... காவல்துறை வெளியிட்ட வீடியோவால் ஷாக்கான இளசுகள்...

இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஐபிஎஸ் அதிகாரி அஜய்குமார் அவ்வீடியோவில் தோன்றி விதிமீறல் வாதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியிருக்கின்றார். தொடர்ந்து, கார் உரிமையாளர் உஜ்வல் யாதவிற்கு ரூ. 2,500க்கான அபராதம் வழங்கப்பட்டிருப்பதையும் காவலர்கள் வீடியோவின் வாயிலாக உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

இதுபோன்ற இணையத்தில் வைரலாகும் வீடியோவை மையமாகக் கொண்டு போலீஸார் நடவடிக்கை எடுப்பது முதல் முறையல்ல. அண்மையில்கூட ஓர் இளம்பெண் பைக்கில் ஸ்டண்ட் செய்த காரணத்திற்காக போலீஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர். இதுகுறித்து வெளியிடப்பட்ட தகவலை அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். இளைஞர்களின் சாகசம் வேறு யாருக்கும் தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடக் கூடாது என்கிற காரணத்தினால் போலீஸார் இதுபோன்று கடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Most Read Articles
 
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
YoungMan Taking Push-Ups On Top Of Moving Mahindra Scorpio; Here Is Shocking. Read In Tamil.
Story first published: Tuesday, March 16, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X