டுவிட்டர் பயனர் எழுப்பிய கேள்வி... உடனே பதிலளித்த Skoda நிறுவன இயக்குனர்... இந்தியாவிற்கு அந்த வாகனம் உறுதி!

இந்தியாவிற்கு அந்த வாகனத்தை கொண்டு வருவோம் என Skoda நிறுவன இயக்குனர் உறுதிப்படுத்தியுள்ளார். அது என்ன வாகனம் என்பது பற்றி தகவலைக் கீழே காணலாம், வாங்க.

டுவிட்டர் பயனர் எழுப்பிய கேள்வி... உடனே பதிலளித்த Skoda நிறுவன இயக்குனர்... இந்தியாவிற்கு அந்த வாகனம் உறுதி!

இந்தியாவில் மின் வாகனங்களுக்கான சந்தை நாளுக்கு நாள் விரிவடைந்த வண்ணம் இருக்கின்றது. மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் பணிகள் தீவிரமாக்கப்பட்டு வருவதாலும், பெட்ரோல்-டீசல் விலை விண்ணை முட்டுமளவிற்கு உயர்ந்து வருவதாலும் மக்கள் தங்களின் கவனத்தை மின் வாகனங்களின் பக்கம் திருப்பி வருகின்றனர்.

டுவிட்டர் பயனர் எழுப்பிய கேள்வி... உடனே பதிலளித்த Skoda நிறுவன இயக்குனர்... இந்தியாவிற்கு அந்த வாகனம் உறுதி!

இந்த நிலையில், முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களும் தங்களின் கவர்ச்சிகர மின் வாகன தயாரிப்புகளின் வாயிலாகவும் மக்களை எலெக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் ஈர்த்து வருகின்றனர். அந்தவகையில், மிக விரைவில் Skoda Auto India நிறுவனம் இந்திய சந்தையை தனது புதுமுக எலெக்ட்ரிக் காரின் வாயிலாக அலங்கரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டுவிட்டர் பயனர் எழுப்பிய கேள்வி... உடனே பதிலளித்த Skoda நிறுவன இயக்குனர்... இந்தியாவிற்கு அந்த வாகனம் உறுதி!

இதுகுறித்த தகவலை நிறுவனத்தின் இயக்குநர் ஷேக் ஹோல்லிஸ் (Zac Hollis) உறுதிப்படுத்தியுள்ளார். டுவிட்டர் பயனர் ஒருவர் Skoda நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காரின் இந்திய வருகை குறித்து எழுப்பிய கேள்விக்கு பதலளித்ததன் வாயிலாக இந்த தகவல் உறுதியாகியுள்ளது.

டுவிட்டர் பயனர் எழுப்பிய கேள்வி... உடனே பதிலளித்த Skoda நிறுவன இயக்குனர்... இந்தியாவிற்கு அந்த வாகனம் உறுதி!

ஷேக் ஹோல்லிஸ் இதுகுறித்த கூறியதாவது, "நாங்கள் இந்தியாவிற்கான மின்சார வாகனத்தைக் கொண்டு வருவோம். ஆனால், எப்போது என்பதை துள்ளியமாக தெரியப்படுத்த இயலாது. இன்னும் 5 வருடங்களில் மின்சார வாகனம் கொண்டு வரப்படும்" என தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பயனர் எழுப்பிய கேள்வி... உடனே பதிலளித்த Skoda நிறுவன இயக்குனர்... இந்தியாவிற்கு அந்த வாகனம் உறுதி!

இதனால், Skoda எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பது உறுதியாகியுள்ளது. இந்திய சந்தையில் TATA Motors, Hyundai, MG மற்றும் Audi போன்ற முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஏற்கனவே தங்களின் மின்சார கார்களை விற்பனைக்குக் களமிறக்கிவிட்டன.

டுவிட்டர் பயனர் எழுப்பிய கேள்வி... உடனே பதிலளித்த Skoda நிறுவன இயக்குனர்... இந்தியாவிற்கு அந்த வாகனம் உறுதி!

இதில், Tata நிறுவனத்தின் Nexon EV-யே நாட்டின் மிக மலிவு விலை எலெக்ட்ரிக் காராகும். இந்த காரைத் தொடர்ந்து இன்னும் சில குறைந்த விலை மின்சார கார் மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வர நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. தொடர்ந்து, அதற்கான பணியிலும் ஈடுபட்டு வருகின்றது.

டுவிட்டர் பயனர் எழுப்பிய கேள்வி... உடனே பதிலளித்த Skoda நிறுவன இயக்குனர்... இந்தியாவிற்கு அந்த வாகனம் உறுதி!

இந்த மாதிரியான சூழ்நிலையில் தாங்களும் இந்த களத்தில் களமிறங்க இருப்பதாக Skoda தெரிவித்திருக்கின்றது. ஆனால், நிறுவனம் துள்ளியமான காலம் பற்றி அறிவிக்காதது குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதே நிலையில்தான் இன்னும் சில முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவில் இருப்பதை காண முடிகின்றது.

டுவிட்டர் பயனர் எழுப்பிய கேள்வி... உடனே பதிலளித்த Skoda நிறுவன இயக்குனர்... இந்தியாவிற்கு அந்த வாகனம் உறுதி!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு இருப்பதைப் போல அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்புகள் அதிகளவில் உருவாக்கப்படவில்லை. இப்போதே இப்பணியில் அரசுகள் களமிறங்கியிருக்கின்றன. அரசுகளுடன் சேர்ந்து சில தனியார் நிறுவனங்களும் மின் வாகனங்களுக்கான அடிப்படை வசதிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

டுவிட்டர் பயனர் எழுப்பிய கேள்வி... உடனே பதிலளித்த Skoda நிறுவன இயக்குனர்... இந்தியாவிற்கு அந்த வாகனம் உறுதி!

இந்த நிலை சற்று தீவிரமாக நடைபெற்று வந்தாலும் இன்னும் முழுமையாக அவை பயன்பாட்டிற்கு வராதே நிலையே தென்படுகின்றது. எனவேதான் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள்கூட தங்களின் மின் வாகனங்களை இந்தியாவில் களமிறக்க தயக்கம் காட்டுகின்றன.

டுவிட்டர் பயனர் எழுப்பிய கேள்வி... உடனே பதிலளித்த Skoda நிறுவன இயக்குனர்... இந்தியாவிற்கு அந்த வாகனம் உறுதி!

இதனடிப்படையிலேயே, மிக அதிக நீண்ட இடைவெளியில் (ஐந்தாண்டுகளுக்குள்) மின் வாகனத்தை இந்தியா கொண்டு வர இருப்பதாக Skoda நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார். Skoda நிறுவனம் மிக சமீபத்திலேயே அதன் புகழ்வாய்ந்த Eniyaq-iV எனும் காரை உலகளவில் அறிமுகம் செய்தது.

டுவிட்டர் பயனர் எழுப்பிய கேள்வி... உடனே பதிலளித்த Skoda நிறுவன இயக்குனர்... இந்தியாவிற்கு அந்த வாகனம் உறுதி!

இது உலகின் மிக சிறந்த எஸ்யூவி கார்களில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. நிறுவனம் எலெக்ட்ரிக் காரை நாட்டிற்கு கொண்டு வருமானால், அது, Eniyaq-iV எலெக்ட்ரிக் காராககூட இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் நிறுவனம் வெளியிடவில்லை.

டுவிட்டர் பயனர் எழுப்பிய கேள்வி... உடனே பதிலளித்த Skoda நிறுவன இயக்குனர்... இந்தியாவிற்கு அந்த வாகனம் உறுதி!

Skoda நிறுவனம் மிக சமீபத்தில் Kushaq எனும் புதிய கார் மாடலை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இது ஓர் பிரீமியம்தர எஸ்யூவி ரக காராகும். இந்த கார் இந்தியாவில் ரூ. 10.49 லட்சம் முதல் ரூ. 17.59 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் குறித்த மேலும் விபரங்களை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Zac hollis confirms skoda ev coming to india
Story first published: Wednesday, August 25, 2021, 14:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X