3 ஸ்டார்களை மட்டும்தான் வாங்குச்சா!.. பாவம் இந்த கார்களோட உரிமையாளர்களுக்கு இது தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவாங்க!

ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் இரு பிரபல தயாரிப்புகள் பாதுகாப்பு குறித்து மேற்பட்ட மோதல் ஆய்வில் ஐந்திற்கு மூன்று ஸ்டார்களை மட்டுமே பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

மூனு ஸ்டார்களை மட்டும்தான் வாங்குச்சா!.. பாவம் இந்த கார்களோட உரிமையாளர்களுக்கு இது தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவாங்க!

குளோபல் என்சிஏபி அண்மையில் மூன்று மேட்-இன் இந்தியா கார்களை மோதல் ஆய்விற்கு உட்படுத்தியது. ஹூண்டாய் க்ரெட்டா, ஐ20 மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஆகிய கார் மாடல்களையே அது கிராஷ் டெஸ்ட் செய்தது. இதில், டொயோட்டா அர்பன் க்ரூஸர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் பாதுகாப்பு திறன் பற்றிய விபரத்தை ஏற்கனவே நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் வெளியிட்டிருக்கின்றோம்.

மூனு ஸ்டார்களை மட்டும்தான் வாங்குச்சா!.. பாவம் இந்த கார்களோட உரிமையாளர்களுக்கு இது தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவாங்க!

இதனைத்தொடர்ந்து, ஹூண்டாய் ஐ20 மற்றும் க்ரெட்டா ஆகிய கார்களின் பாதுகாப்பு தரம்குறித்து குளோபல் என்சிஏபி வெளியிட்டிருக்கும் தகவலையும் நம் வாசகர்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக இந்த பதிவில் அதுகுறித்த தகவலையே வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம். டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி காரின் மோதல் ஆய்வுகுறித்த தகவலை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

மூனு ஸ்டார்களை மட்டும்தான் வாங்குச்சா!.. பாவம் இந்த கார்களோட உரிமையாளர்களுக்கு இது தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவாங்க!

க்ரெட்டா மற்றும் ஐ20 ஆகிய கார் மாடல்களின் பேஸ் வேரியண்டையே குளோபல் என்சிஏபி மோதல் ஆய்விற்கு உட்படுத்தியிருக்கின்றது. இவற்றில் சிறப்பம்சங்கள் சற்று குறைவு. இருப்பினும், பேஸ் வேரியண்டிலேயே ஏபிஎஸ் மற்றும் முன் பக்கத்தில் ஏர் பேக் என பல்வேறு பாதுகாப்பு வசதிகளை ஹூண்டாய் வழங்கியிருக்கின்றது.

மூனு ஸ்டார்களை மட்டும்தான் வாங்குச்சா!.. பாவம் இந்த கார்களோட உரிமையாளர்களுக்கு இது தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவாங்க!

இருப்பினும், இரண்டும் கார் மாடல்களும் மோதல் ஆய்வில் சொதப்பியிருப்பது தெரிய வந்திருக்கின்றது. அதாவது, ஐந்திற்கு ஐந்து என்று மேற்கொள்ளப்பட்ட மோதல் ஆய்வில் இரு கார்களும் ஒரே மாதிரியாக வெறும் மூன்று ஸ்டார் ரேட்டிங்கையேப் பெற்றிருக்கின்றன.

மூனு ஸ்டார்களை மட்டும்தான் வாங்குச்சா!.. பாவம் இந்த கார்களோட உரிமையாளர்களுக்கு இது தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவாங்க!

ஹூண்டாய் க்ரெட்டா:

இந்த காரில் பெரியவர்களுக்கு என்ன மாதிரியான பாதுகாப்பான சூழல் நிலவுகின்றது என்பது பற்றி மேற்கொள்ள ஆய்வில், 17 புள்ளிகளுக்கு வெறும் 8 புள்ளிகளை மட்டுமே பெற்றது. இது பாதிக்கும் குறைவான புள்ளிகள் ஆகும். மேலும், க்ராஷ் டெஸ்டின்போது, க்ரெட்டா காரின் உடற்கூடு காகிதத்தைப் போல் மடிந்து போய்விட்டதாக கூறப்படுகின்றது. மேலும், அது நிலையற்ற தன்மையில் இருந்ததும் தெரிய வந்துள்ளது.

மூனு ஸ்டார்களை மட்டும்தான் வாங்குச்சா!.. பாவம் இந்த கார்களோட உரிமையாளர்களுக்கு இது தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவாங்க!

இதுமட்டுமின்றி, ஃபூட்ரெஸ்ட் பகுதியும் நிலையற்றதாக இருந்திருக்கின்றது. அதேவேலையில், ஓட்டுநரின் தலை பகுதிக்கு போதுமான பாதுகாப்பை அது வழங்கும் வகையில் செயல்பட்டுள்ளது. டிரைவர் மட்டுமின்றி முன்னிருக்கை பயணிக்கும் கணிசமான அளவில் பாதுகாப்பை வழங்கும் சூழல் க்ரெட்டாவில் இருப்பது ஆய்வின் வாயிலாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த காரணத்தினால்தான் பெரியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் இக்கார் மூன்று ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றுள்ளது.

சிறுவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்திலும் இக்கார் மூன்று ஸ்டார்கள் ரேட்டிங்கையேப் பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற எஸ்யூவி கார் மாடலாக க்ரெட்டா இருக்கின்றது. இந்த கார் இவ்வளவு குறைவான ஸ்டார் ரேட்டிங்கை பெற்றிருப்பது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

மூனு ஸ்டார்களை மட்டும்தான் வாங்குச்சா!.. பாவம் இந்த கார்களோட உரிமையாளர்களுக்கு இது தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவாங்க!

ஹூண்டாய் நிறுவனம் அனைத்து பயணிகளுக்குமான மும்முனைகள் கொண்ட சீட் பெல்ட் மற்றும் சிறுவர்களுக்கான ஐசோஃபிக்ஸ் ஆங்கர்களை அனைத்து வேரியண்டுகளிலும் வழங்கவில்லை. உயர்நிலை வேரியண்டுகளில் மட்டுமே இந்த வசதிகளை வழங்குகின்றது. இதுவும் அக்கார் குறைவான ரேட்டிங்கைப் பெறுவதற்கு காரணங்களாக அமைந்திருக்கின்றது.

மூனு ஸ்டார்களை மட்டும்தான் வாங்குச்சா!.. பாவம் இந்த கார்களோட உரிமையாளர்களுக்கு இது தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவாங்க!

ஹூண்டாய் ஐ20

க்ரெட்டாவை போலவே ஐ20 காரும் சற்று குறைவான ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது. இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 17 புள்ளிகளுக்கு 8.84 புள்ளிகளை மட்டுமே பெற்றது. இந்த கார் மாடலின் உடற்கூடு மற்றும் ஃபூட் ரெஸ்ட் பகுதி நிலையற்றதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும், டிரைவரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அது செயல்பட்டிருக்கின்றது. இதேபோல், பயணிகளுக்கும் கணிசமான பாதுகாப்பை அது வழங்கும் என்பது தெரிய வந்துள்ளது. இதேபோல், சிறுவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்திலும் சற்று லேசாக ஐ20 சொதப்பியிருக்கின்றது. இதன் விளைவாக 49 புள்ளிகளுக்கு அதனால் 26.89 புள்ளிகளை மட்டுமே பெற முடிந்தது. இந்த புள்ளிகள் சிறுவர்களுக்கு கணிசமான பாதுகாப்பை ஐ20 வழங்கும் என்பதை வெளிக்காட்டுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 13, 2022, 13:14 [IST]
English summary
Hyundai creta and i20 gets 3 star safety rating in global ncap crash tests
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+