Just In
- 8 min ago
உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் போன பென்ஸ் கார்.. யார் வாங்கினார்கள் தெரியுமா?
- 54 min ago
டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பை விளக்கும் வீடியோ வெளியீடு... இவ்ளோ சிறப்பு வசதிகள் இருக்கா!..
- 2 hrs ago
இந்தியாவில் கார்களுக்கான ஆடியோ அமைப்புகளை வழங்கும் டாப் பிராண்ட்கள்!! இத்தனை இருக்கா...?
- 2 hrs ago
"எலெக்ட்ரிக் எல்லாம் வேஸ்ட்.. நாங்க ஃபிளக்ஸி ஃபியூயல் வாகனம் தயாரிக்க போறோம்" புது ரூட்டை எடுக்கும் ஹோண்டா
Don't Miss!
- Movies
முழுதாக செம்பியாக மாறிய கோவை சரளா... பிரபு சாலமன் இயக்கத்தில் காமெடி குயின்!
- News
20 லட்சம் பேருக்கு கொரோனா இருந்தால் என்ன.. அணு ஆயுத சோதனைக்கு ரெடியாகும் வடகொரியா.. பரபர பின்னணி
- Finance
இலங்கை: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு.. பள்ளி, அலுவலகம் விடுமுறை..!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க தங்கள் மனைவியை மனதளவில் ரொம்ப கொடுமைப்படுத்துவங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Sports
தோனிக்கு இன்று கடைசி போட்டி.. சிஎஸ்கே அணியின் சீசன் முடிகிறது.. வெற்றியுடன் தொடரை முடிப்பாரா தோனி?
- Technology
உங்கள் போனில் இந்த 7 ஆப்ஸ்களை உடனே டெலிட் செய்யவும்.! பேஸ்புக் பாஸ்வேர்டை திருடும் எனத் தகவல்.!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எலெக்சன் தொடங்கபோகுதாம்... அவசர அவசரமாக 5 மஹிந்திரா கார்களை வாங்கிய அரசியல்வாதி! காரணம் என்ன தெரியுமா?
அரசியல்வாதி ஒருவர் ஒட்டுமொத்தமாக ஐந்து மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV700) எஸ்யூவி ரக கார்களை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்திய அரசியல்வாதிகள் காலத்திற்கு ஏற்ப தங்களை போலவே தங்களின் வாகனங்களையும் மாற்றி வருகின்றனர். கடந்த காலங்களில் அம்பாசிடர் கார்களில் அவர்கள் வலம் வந்துக் கொண்டிருந்தனர். இதற்கு அடுத்தபடியாக டாடா சஃபாரிக்கு மாறினர். தற்போது சொகுசு வாகன பயன்பாட்டிற்கு மாற தொடங்கியிருக்கின்றனர். இதன் அடிப்படையில் ஒரு சிலர் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கும், ஒரு தரப்பினர் டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் இன்னோவா கிரிஸ்டா கார்களின் பயன்பாட்டிற்கும் மாறியிருக்கின்றனர்.

இதுதவிர அவரவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப பிற பிரத்யேக சொகுசு வாகனங்களையும் அரசியல்வாதிகள் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழ்நிலையில், அரசியல்வாதிகளின் வாகன உலகில் புதிய மாற்றத்தைக் கொண்டு வரும் விதமாக ஓர் அரசியல் பிரமுகர் மொத்தமாக மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV700) கார் பயன்பாட்டிற்கு மாறியிருக்கின்றார்.

அவர் ஒட்டுமொத்தமாக ஐந்து மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார் மாடல்களை வாங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறத்த வீடியோவை நீங்கள் கீழே பார்க்கலாம். தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கே.ஏ. பவுல் எனும் அரசியல் கட்சி தலைவரே பல்கான எண்ணிக்கையில் மஹிந்திரா கார்களை வாங்கியவர் ஆவார். விரைவில் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது.
அவர் ஒட்டுமொத்தமாக ஐந்து மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார் மாடல்களை வாங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறத்த வீடியோவை நீங்கள் கீழே பார்க்கலாம். தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கே.ஏ. பவுல் எனும் அரசியல் கட்சி தலைவரே பல்கான எண்ணிக்கையில் மஹிந்திரா கார்களை வாங்கியவர் ஆவார். விரைவில் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது.

இதனை எதிர்கொள்ளும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளில் அம்மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், கே.ஏ. பவுல் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காகவே ஐந்து புதிய மஹிந்திரா கார்களை வாங்கியிருக்கின்றார். அவர் வாங்கியிருப்பது அனைத்தும் எக்ஸ்யூவி 700 மாடலின் ஏஎக்ஸ்7 எனும் உயர்நிலை வேரியண்டுகளாகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ரூ. 19.20 லட்சம் ஆகும். இத்தகைய உயரிய விலைக் கொண்ட எக்ஸ்யூவி 700 காரையே அரசியல்வாதி அரசியல் பிரச்சாரத்திற்காக வாங்கியிருக்கின்றார்.

இது பெட்ரோல் எஞ்ஜின் கொண்ட தேர்வு என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் அமோகமான வரவேற்பைப் பெற்று வரும் கார் மாடல்களில் எக்ஸ்யூவி700ம் ஒன்று. இந்த காருக்கு நல்ல டிமாண்ட் நிலவி வருவதனால் காத்திருப்பு காலமும் சற்று அதிகமாக தென்படுகின்றது. இத்தகைய தரமான காரையே தெலங்கானா அரசியல் பிரமுகர் கே.ஏ. பவுல் அதிக எண்ணிக்கையில் வாங்கியிருக்கின்றார்.

ஒரு காலத்தில் அரசியல்வாதிகள் மஹிந்திரா ஸ்கார்பியோ காரில் வலம் வந்ததைப் போல் கே.ஏ. பவுல் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் வலம் வருவார் என்பது இதன் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. மஹிந்திரா நிறுவனம் இக்காரை அதி-நவீன வசதிகள் கொண்ட காராக இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

நிறுவனத்தின் புதிய சின்ன மாற்றத்திற்கு பின்னர் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட முதல் கார் மாடல் இதுவே ஆகும். ஆகையால், புதிய லோகோவை பெற்ற முதல் மஹிந்திரா தயாரிப்பாக எக்ஸ்யூவி 700 காட்சியளிக்கின்றது. ஆகையால், அனைத்து தரப்பிலும் மிக சிறந்த வாகனமாக எக்ஸ்யூவி 700 காட்சியளிக்கின்றது.

எஞ்ஜின் விஷயத்திலும்கூடதாங்க, மஹிந்திரா நிறுவனம் இக்கார் மாடலில் 2.0 லிட்டர் டர்போசார்ஜட் மோட்டாரை பயன்படுத்தியிருக்கின்றது. இந்த மோட்டார் டைரக்ட் இன்ஜெக்சன் வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதே எஞ்ஜினே ஏற்கனவே விற்பனையில் இருக்கும் தார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய தலைமுறை ஸ்கார்பியோவையும் இதுவே அலங்கரிக்க இருக்கின்றது.

இப்புதிய மோட்டார் அதிகபட்சமாக 200 பிஎஸ் மற்றும் 380 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மோட்டாரை கூடுதலாக சிறப்பிக்கும் பொருட்டு மஹிந்திார நிறுவனம் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் தானியங்கி ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகளை வழங்குகின்றது. இக்காரின் உச்சபட்ச வேகம் மணிக்கு 200 கிமீ ஆகும். பெட்ரோல் மோட்டார் கொண்ட எக்ஸ்யூவி700 காரே இந்த உச்சபட்ச வேகத்தை எட்டும் திறனைக் கொண்டுள்ளது.

மஹிந்திரா நிறுவனம் 2.2 லிட்டர் டீசல் மோட்டார் தேர்விலும் எக்ஸ்யூவி700 காரை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இது இரு விதமான ட்யூன் அப்-களில் விற்பனைக்கு கிடைக்கின்றது. ஒன்று 155 பிஎஸ் மற்றும் 360 என்எம் டார்க் திறன் வெளியேற்றத்துடனும், மற்றொன்று, 185 பிஎஸ் மற்றும் 420 என்எம் டார்க் வெளியேற்றத்துடனும் கிடைத்து வருகின்றது.

டீசல் எஞ்ஜினிலும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் தானியங்கி டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதுதவிர இன்னும் பல சிறப்பு வசதிகளும், தேர்வுகளும் இக்காரில் வழங்கப்படுகின்றது. எனவேதான் சொகுசு வாகன பிரியர்களையும் இக்கார் மிக பெரியளவில் கவர்ந்து வருகின்றது.

அந்தவகையில், மிக சமீபத்தில் பாலிவுட் நடிகர் ரன்விர் ஷோரி எக்ஸ்யூவி700 காரை வாங்கினார். இன்னும் பல திரை நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இக்காரை பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். இந்தியாவில் எக்ஸ்யூவி700 ரூ. 13.18 தொடங்கி ரூ. 24.58 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.
மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை நாங்கள் ரிவியூ செய்தோம். அப்போது கார்குறித்து பல்வேறு சுவாரஷ்ய தகவல்கள் எங்களுக்கு கிடைத்தது. அதுகுறித்த விரிவான பதிவை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
-
வழியில வேறு எங்கேயுமே சார்ஜ் போடல... 200 கிமீட்டரை அசால்டாக கடந்த ஓலா எலெக்ட்ரிக் உரிமையாளர்!
-
பரிதாபத்திற்குள்ளான பஜாஜ் பல்சர்.. இப்படி ஒரு நிலைமை வரும்ன்னு யாருமே நினைச்சு பார்த்திருக்க மாட்டாங்க...
-
97,000 ரூபாவுக்கே 150கிமீ பயணிக்கும் இ-ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வந்தது ஒடிசி... ஓலாவுக்கு ஆப்பு ரெடி!