இவ்வளவு குறைவான விலைக்கு இப்படி ஒரு பிரீமியமான காரா? வியக்க வைக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி700... ரிவியூ!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நடப்பாண்டில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எஸ்யூவி கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி700. இந்த எஸ்யூவியை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் ஆகட்டும், அல்லது வாங்காதவர்கள் ஆகட்டும், அனைவரின் மத்தியிலும் ஒரு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் ஸ்பை படங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு தவறாமல் வழங்கி வந்துள்ளது.

ஆனால் கணிப்புகளின் அடிப்படையில்தான் கடந்த காலங்களில் தகவல்கள் வெளியாயின. அந்த காலம் முடிவடைந்து விட்டது. ஏனெனில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. இந்த புத்தம் புதிய எஸ்யூவியின் ஆரம்ப விலை 11.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது மிக சவாலான விலை நிர்ணயம் என்பதில் நமக்கு சந்தேகமில்லை. இந்த விலை நிர்ணயம் மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவிக்காக காத்திருப்பவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் வேறு கார்களை வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் கூட தற்போது மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியை பரிசீலனை செய்ய தொடங்கியுள்ளனர். ஆனால் மஹிந்திரா எக்ஸ்யூவி700 இவ்வளவு பெரிய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறதா? இந்த விலைக்கு மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியை வாங்குவது சிறப்பானதாக இருக்குமா? மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? என்பது போன்ற சந்தேகங்கள் வாடிக்கையாளர்களின் மனதில் உள்ளன. இந்த கேள்விகளுக்கு எங்களால் பதில் வழங்க முடியும். ஏனெனில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தோம். இந்த காரை பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

இவ்வளவு குறைவான விலைக்கு இப்படி ஒரு பிரீமியமான காரா? வியக்க வைக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி700... ரிவியூ!

மஹிந்திரா எக்ஸ்யூவி வரலாறு

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி காரின் நீளமான வசதிகள் பட்டியல், சக்தி வாய்ந்த இன்ஜின்கள், சிறப்பான செயல்திறன் ஆகியவற்றை தெரிந்து கொள்வதற்கு முன்னதாக, இந்த எஸ்யூவியின் வரலாறை தெரிந்து கொள்வது முக்கியமானது. எக்ஸ்யூவி500 எஸ்யூவியை விட மேம்பட்ட தயாரிப்பாக மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து வெளிவரும் எஸ்யூவிதான் எக்ஸ்யூவி700.

மோனோகாக் சேஸிஸ் அடிப்படையில் வெளிவந்த மஹிந்திராவின் முதல் எஸ்யூவி எக்ஸ்யூவி500. இது பல சர்வதேச சந்தைகளில் மஹிந்திராவின் முகமாக மாறியது. பல்வேறு வசதிகளுடன் வந்த இந்த எஸ்யூவி, பலரின் பாராட்டுக்களையும் பெற்றது. மஹிந்திரா எக்ஸ்யூவி500 கடந்த 2011ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து மஹிந்திரா நிறுவனம் இந்த எஸ்யூவியை பலமுறை அப்டேட் செய்துள்ளது.

இதை தொடர்ந்து மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எக்ஸ்யூவி500 எஸ்யூவியை போலவே, எக்ஸ்யூவி700 எஸ்யூவி காரிலும் பல்வேறு அதிநவீன வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வளவு குறைவான விலைக்கு இப்படி ஒரு பிரீமியமான காரா? வியக்க வைக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி700... ரிவியூ!

டிசைன்

முதலில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் டிசைன் பற்றி பார்த்து விடலாம். முதல் பார்வையிலேயே இது எக்ஸ்யூவி என்பதை ஒருவரால் அடையாளம் கண்டு கொள்ள முடியும். ஆனால் இது 500 கிடையாது என்பதையும் புரிந்து கொள்ளலாம். மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் டிசைனை பொறுத்தவரை, டிசைனர்கள் மிக சிறப்பாக வேலை செய்துள்ளனர்.

முன் பகுதியில் ட்யூயல்-டோன் க்ரில் அமைப்பை மஹிந்திரா எக்ஸ்யூவி700 பெற்றுள்ளது. இதன் மைய பகுதியில் எஸ்யூவி கார்களுக்கான மஹிந்திராவின் புதிய லோகோ வழங்கப்பட்டுள்ளது. க்ரில் அமைப்பின் பக்கவாட்டில், எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் பகல் நேர விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதே சமயம் பம்பரின் அடி பகுதியில் பனி விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வளவு குறைவான விலைக்கு இப்படி ஒரு பிரீமியமான காரா? வியக்க வைக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி700... ரிவியூ!

பக்கவாட்டு பகுதியிலும் இந்த எஸ்யூவி முரட்டுத்தனமாக உள்ளது. இது எங்களை பெரிதும் கவர்ந்தது. பக்கவாட்டு பகுதியில் பெரிய வீல் ஆர்ச்களை இந்த எஸ்யூவி பெற்றுள்ளது. இந்த எஸ்யூவியில் ஏ, பி மற்றும் சி பில்லர்கள் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஃப்ளஷ் டோர் ஹேண்டில்களும் இடம்பெற்றுள்ளன. பொதுவாக இந்த வசதி மிகவும் விலை உயர்ந்த கார்களில்தான் காணப்படும். இதை பயன்படுத்துவதற்கு நன்றாக உள்ளது.

இவ்வளவு குறைவான விலைக்கு இப்படி ஒரு பிரீமியமான காரா? வியக்க வைக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி700... ரிவியூ!

அதே சமயம் ட்யூயல்-டோன் அலாய் வீல்களையும் இந்த எஸ்யூவியின் முக்கியமான ஹைலைட்களில் ஒன்றாக கூறலாம். பின் பகுதியை பொறுத்தவரை பெரிய ஸ்பிளிட் எல்இடி டெயில்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. பின் பகுதியின் மேலே சுறா துடுப்பு ஆன்டெனா மற்றும் கூர்மையான முனைகளுடன் ஸ்பாய்லர் ஆகியவற்றை இந்த எஸ்யூவி பெற்றுள்ளது.

இவ்வளவு குறைவான விலைக்கு இப்படி ஒரு பிரீமியமான காரா? வியக்க வைக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி700... ரிவியூ!

அத்துடன் பின் பகுதியின் மைய பகுதியில் புதிய மஹிந்திரா லோகோவும் இடம்பெற்றுள்ளது. இதற்கு கீழே எக்ஸ்யூவி700 மற்றும் ஏஎக்ஸ்7 பேட்ஜ்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆம், அனைத்து வசதிகளும் நிரம்பிய டாப் மாடலான ஏஎக்ஸ்7 வேரியண்ட்டைதான் நாங்கள் ஓட்டினோம். எனவே வசதிகளை பற்றி சொல்வதற்கு எங்களிடம் நிறைய விஷயங்கள் உள்ளன. ஒட்டுமொத்தத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி காரின் டிசைன் அமர்க்களப்படுத்துகிறது.

இவ்வளவு குறைவான விலைக்கு இப்படி ஒரு பிரீமியமான காரா? வியக்க வைக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி700... ரிவியூ!

இன்டீரியர்

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி காரின் உள்ளே செல்வது சிறப்பான அனுபவம். இதற்கு நாங்கள் மேலே கூறிய ஃப்ளஷ் டோர் ஹேண்டில்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும். கதவை திறந்து உள்ளே சென்றவுடன் மெத்தென்று இருக்கும் வெள்ளை நிற லெதர் இன்டீரியர் நம்மை வரவேற்கிறது.

இந்த எஸ்யூவியின் டேஷ்போர்டு மாடர்ன் ஆக உள்ளது. இதற்கு இன்போடெயின்மெண்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகியவைகளுக்குதான் நாம் நன்றி சொல்ல வேண்டும். லெதர் மற்றும் சாஃப்ட் டச் பிளாஸ்டிக் மூலம் இது நமக்கு பிரீமியமான உணர்வை தருகிறது. எனினும் கண்ணாடி அடுக்குதான் இன்டீரியரில் நமது கவனத்தை அதிகம் ஈர்க்கிறது. இதை விட 4-5 மடங்கு அதிக விலை கொண்ட கார்களில்தான் இத்தகைய வசதிகளை நாம் பார்க்க முடியும். இந்த விலைக்கு இப்படி ஒரு வசதியை வழங்கியதற்காக மஹிந்திரா நிறுவனத்திற்கு நாம் கண்டிப்பாக நன்றி சொல்லியாக வேண்டும்.

இவ்வளவு குறைவான விலைக்கு இப்படி ஒரு பிரீமியமான காரா? வியக்க வைக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி700... ரிவியூ!

இந்த கண்ணாடி அடுக்கானது, இன்போடெயின்மெண்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்டேஷனுக்கு இரண்டு 10.25 இன்ச் திரைகளை உள்ளடக்கியதாக உள்ளது. ஆனால் இதில் இன்போடெயின்மெண்ட் டிஸ்ப்ளே மட்டுமே டச்ஸ்க்ரீன் யூனிட் ஆகும். ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ என பல்வேறு வசதிகளுடன் இன்போடெயின்மெண்ட் யூனிட் வருகிறது. அத்துடன் அமேஸான் அலெக்ஸா வசதியும் இடம்பெற்றுள்ளது. 60க்கும் மேற்பட்ட கனெக்டட் வசதிகளுடன், இன்டர்நெட் கனெக்டிவிட்டிக்காக இ-சிம் கார்டு வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வளவு குறைவான விலைக்கு இப்படி ஒரு பிரீமியமான காரா? வியக்க வைக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி700... ரிவியூ!

இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் உங்கள் செல்போனை இணைப்பது மிகவும் எளிமையானது. ஆனால் ஒரு சில இடங்களில் இந்த சிஸ்டம் மந்தமாக இருப்பதை நாங்கள் பார்த்தோம். ஆனால் கவலைப்பட வேண்டிய அளவிற்கு எல்லாம் இந்த பிரச்னை இல்லை. நாங்கள் ஓட்டியது எல்லாம் தயாரிப்பு நிலைக்கு முந்தைய மாடல்கள் ஆகும். முழு அளவிலான உற்பத்தி தொடங்கப்படும்போது, இந்த சிறிய பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும்.

இவ்வளவு குறைவான விலைக்கு இப்படி ஒரு பிரீமியமான காரா? வியக்க வைக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி700... ரிவியூ!

அதே சமயம் எக்ஸ்யூவி700 எஸ்யூவியில் பாடல்களை கேட்கும் அனுபவம் வேற லெவலில் இருந்தது. இதற்கு சோனி சவுண்ட் சிஸ்டத்திற்குதான் நாம் நன்றி சொல்ல வேண்டும். அதே சமயம் இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கு அப்படியே கீழாக ட்யூயல் ஏசி வெண்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு கீழே க்ளைமேட் கண்ட்ரோலுக்கான கண்ட்ரோல்களும், சென்டர் கன்சோலும் இடம்பெற்றுள்ளன.

இவ்வளவு குறைவான விலைக்கு இப்படி ஒரு பிரீமியமான காரா? வியக்க வைக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி700... ரிவியூ!

ஒரு சில அம்சங்கள் பியானோ பிளாக் நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளதால், சென்டர் கன்சோலும் பிரீமியமாக உள்ளது. கியர் லிவருக்கு முன்னால் உங்கள் செல்போன்களை சார்ஜ் செய்வதற்கான வயர்லெஸ் சார்ஜிங் வசதியும், கியர் லிவருக்கு அடுத்தபடியாக எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் ஹில்-ஹோல்டு பட்டன்களும் இடம்பெற்றுள்ளன.

இவ்வளவு குறைவான விலைக்கு இப்படி ஒரு பிரீமியமான காரா? வியக்க வைக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி700... ரிவியூ!

அதே சமயம் இந்த காரின் ஸ்டியரிங் வீல் பிடித்து ஓட்டுவதற்கு நன்றாக உள்ளது. இதில், புதிய மஹிந்திரா லோகோ இடம்பெற்றிருப்பதுடன், பல்வேறு கண்ட்ரோல்களுக்கான பட்டன்கள் பியானோ பிளாக் நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இது மூன்று ஸ்போக்குகளை கொண்ட ஸ்டியரிங் வீல் ஆகும். இந்த ஸ்போக்குகள் சில்வர் அவுட்லைனை பெற்றுள்ளன. ஒட்டுமொத்தத்தில் ஸ்டியரிங் வீல் பிரீமியமாக உள்ளது. அதே சமயம் ஓட்டுனருக்கான இருக்கை மட்டுமே முழுமையாக மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்யும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வளவு குறைவான விலைக்கு இப்படி ஒரு பிரீமியமான காரா? வியக்க வைக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி700... ரிவியூ!

பின் பகுதியில் பிரீமியம் இன்னும் அதிகரிக்கிறது. பின் பகுதியிலும் சொகுசான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. தேவைக்கு அதிகமாகவே இந்த இருக்கைகள் சௌகரியமாக உள்ளன என்று சொல்லலாம். லெக்ரூம், ஹெட்ரூம் என அனைத்தும் சிறப்பாக உள்ளன. குறை சொல்வதற்கு ஒன்றுமே இல்லை.

இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசைகளுக்கும் ஏசி வெண்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ஏர் ப்யூரிஃபையர் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது வரிசையில் கப்ஹோல்டர்கள் உடன் மடித்து வைக்க கூடிய ஆர்ம்ரெஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தொலைதூர பயணங்களின்போது இரண்டாவது வரிசை இருக்கை பயணிகள் சௌகரியமான உணர்வை பெறுவார்கள் என்பதை நாம் உறுதியாக கூற முடியும்.

இதற்கு அடுத்தபடியாக இருப்பது மூன்றாவது வரிசை. இந்த செக்மெண்ட்டில் உள்ள மற்ற எஸ்யூவிக்களுடன் ஒப்பிடுகையில், மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் மூன்றாவது வரிசையில் இடவசதி நன்றாக உள்ளது. ஆனால் மூன்றாவது வரிசை சிறியவர்களுக்குதான் மிகவும் ஏற்றதாக இருக்கும் என்பது எங்களின் கருத்து. தொலைதூர பயணங்களின்போது பெரியவர்கள் இங்கே அமர்வதற்கு சிரமப்படலாம். ஒட்டுமொத்தத்தில் இந்த காரின் இன்டீரியர் விசாலமாக இருப்பதுடன், பயணிகளுக்கு பிரீமியமான அனுபவத்தை வழங்கும்.

இவ்வளவு குறைவான விலைக்கு இப்படி ஒரு பிரீமியமான காரா? வியக்க வைக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி700... ரிவியூ!

சௌகரியம், நடைமுறை பயன்பாடு & பூட் ஸ்பேஸ்

எக்ஸ்யூவி500 எஸ்யூவியை விட இந்த விஷயத்தில் எக்ஸ்யூவி700 மிகவும் சிறப்பாக உள்ளது. ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், மூன்று வரிசைகளுக்கும் ஏசி வெண்ட்கள், விசாலமான இன்டீரியர் மற்றும் பனரோமிக் சன்ரூஃப் ஆகியவை மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் பயணிகளுக்கு சௌகரியமான பயணத்தை வழங்க உதவி செய்கின்றன.

நடைமுறை பயன்பாட்டிற்கு உகந்த வாகனங்களை தயாரிப்பதில் மஹிந்திரா நிறுவனம் தலைசிறந்து விளங்குகிறது. எக்ஸ்யூவி700 இதற்கு விதிவிலக்கு அல்ல. கார் முழுவதும் ஆங்காங்கே சிறிய ஸ்டோரேஜ் ஸ்பேஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வளவு குறைவான விலைக்கு இப்படி ஒரு பிரீமியமான காரா? வியக்க வைக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி700... ரிவியூ!

மூன்று வரிசை இருக்கைகளும் உயர்ந்து இருக்கும் நிலையிலேயே சிறப்பான பூட் ஸ்பேஸை எக்ஸ்யூவி700 பெற்றுள்ளது. அதே சமயம் இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகள் ஸ்பிளிட் மற்றும் மடித்து வைத்து கொள்ள கூடிய வசதியை பெற்றுள்ளன. இந்த இருக்கைகளை முழுமையாக மடித்து வைக்கும்போது, பூட் ஸ்பேஸ் இன்னும் அதிகரிக்கிறது. அதே சமயம் இந்த காரின் எரிபொருள் டேங்க் கொள்ளளவு 60 லிட்டர்கள்.

இவ்வளவு குறைவான விலைக்கு இப்படி ஒரு பிரீமியமான காரா? வியக்க வைக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி700... ரிவியூ!

இன்ஜின் செயல்திறன் மற்றும் ஓட்டுதல் அனுபவம்

பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் தேர்வுகள் உடனும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கிடைக்கிறது. இதில், பெட்ரோல் இன்ஜின் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 197.2 பிஎச்பி பவரையும் (200 பிஎஸ்), 380 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் உடன் இந்த இன்ஜின் கிடைக்கும். பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிலோ மீட்டர் என்ற வேகத்தை இந்த இன்ஜின் 5 வினாடிகளில் எட்டி விடும்.

இதுதவிர 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வையும் இந்த எஸ்யூவி பெற்றுள்ளது. நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்த காரில் இந்த இன்ஜின்தான் வழங்கப்பட்டிருந்தது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 184.4 பிஎச்பி பவரை (187 பிஎஸ்) உருவாக்கும். ஆனால் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பொறுத்து டார்க் அவுட்புட் மாறுபடும். இதன்படி மேனுவல் வேரியண்ட் அதிகபட்சமாக 420 என்எம் டார்க் திறனையும், ஆட்டோமேட்டிக் வேரியண்ட் அதிகபட்சமாக 450 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

இவ்வளவு குறைவான விலைக்கு இப்படி ஒரு பிரீமியமான காரா? வியக்க வைக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி700... ரிவியூ!

ஃப்ரண்ட் வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் என இரண்டு வகைகளில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 வருகிறது. நாங்கள் ஓட்டியது ஃப்ரண்ட் வீல் டிரைவ் வேரியண்ட் ஆகும். இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டிருந்தது. இங்கே வித்தியாசமான விஷயம் என்னவென்றால், டீசல் இன்ஜின் வேரியண்ட் டிரைவிங் மோடுகளை பெற்றுள்ளது. ஆனால் பெட்ரோல் மாடலில் டிரைவிங் மோடுகள் வழங்கப்படவில்லை.

ஜிப் (ஈக்கோ), ஜேப் (கம்ஃபோர்ட்), ஜூம் (ஸ்போர்ட்/டைனமிக்) மற்றும் கஸ்டம் (இன்ட்யூஜ்வல்) என மொத்தம் 4 டிரைவிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், ஜிப் மோடில்தான் நாங்கள் காரை ஓட்ட தொடங்கினோம். இந்த மோடில் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் மந்தமாக உள்ளது. எனினும் எரிபொருள் சேமிக்கப்படுகிறது. அதே சமயம் ஜேப் மோடில், த்ராட்டில் ரெஸ்பான்ஸ் சற்றே மேம்படுகிறது. நகர பகுதிகளில் ஓட்டுவதற்கு நாங்கள் இந்த மோடை பரிந்துரை செய்கிறோம்.

இதற்கு பிறகு ஜூம் மோடை நாங்கள் பயன்படுத்தினோம். இந்த மோடில் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் ஷார்ப் ஆக உள்ளது. காரின் அதிகபட்ச செயல்திறனை இந்த மோடில் பயன்படுத்தி கொள்ள முடியும். எங்களுக்கு கிடைத்த எஞ்சிய நேரம் முழுவதும் இந்த மோடில்தான் காரை ஓட்டினோம். இந்த மோடில் ஆரம்பத்தில் பவர் டெலிவரி சீராக உள்ளது. ஆனால் நீங்கள் பெடலை அழுத்த தொடங்கியதும், பவர் டெலிவரியில் திடீரென எழுச்சி ஏற்படுகிறது.

இவ்வளவு குறைவான விலைக்கு இப்படி ஒரு பிரீமியமான காரா? வியக்க வைக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி700... ரிவியூ!

இந்த எஸ்யூவி மிக விரைவாக செயல்படுகிறது. இதை எங்களால் நன்றாக உணர முடிந்தது. மூன்று இலக்க வேகத்தை இந்த எஸ்யூவி மிக விரைவாகவே எட்டி விடுகிறது. அதிவேகத்திலும் கையாளுமை நன்றாக இருக்கிறது. சஸ்பென்ஸன் மேம்படுத்தப்பட்டுள்ளதால், வளைவுகளிலும் இந்த எஸ்யூவி சிறப்பான உணர்வை தருகிறது. அத்துடன் இந்த செக்மெண்ட்டில் உள்ள மற்ற எஸ்யூவி கார்களுடன் ஒப்பிடுகையில், பாடி ரோல் குறைவாக இருக்கிறது. இதற்காக எக்ஸ்யூவி700 எஸ்யூவியை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

சென்னையின் புறநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மஹிந்திராவின் புதிய டெஸ்ட் டிராக்கில்தான் நாங்கள் இந்த காரை சோதனை செய்தோம். இங்கு வெவ்வேறு வகையான சாலைகள் உள்ளன. இதில், குண்டும், குழியுமான சாலைகளும் ஒன்று. இங்கும் நாங்கள் காரை ஓட்டி பார்த்தோம். சீரற்ற இந்த சாலைகளையும் எக்ஸ்யூவி700 எளிதாக எதிர்கொண்டது.

ஆரம்பத்தில் ஸ்டியரிங் வீல் இன்னும் நன்றாக இருக்க வேண்டும் என நினைத்தோம். ஆனால் டெஸ்ட் டிரைவ் முடிந்தபோது, அந்த எண்ணத்தை மாற்றி கொண்டோம். அந்த அளவிற்கு மோசமாக ஸ்டியரிங் வீல் இல்லை. குறைவான வேகங்களில் ஸ்டியரிங் வீல் இலகுவாக இருந்தாலும், அதிக வேகத்தில் பயணம் செய்யும்போது ஸ்டியரிங் சிஸ்டம் இறுக்கம் பெறுகிறது. இதுதான் ஓட்டுனர் மற்றும் பயணிகளுக்கு பாதுகாப்பானது.

இவ்வளவு குறைவான விலைக்கு இப்படி ஒரு பிரீமியமான காரா? வியக்க வைக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி700... ரிவியூ!

இங்கே கிளட்ச் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். பொதுவாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் கிளட்ச் நன்றாக இல்லாவிட்டால் சோர்வடைந்து விடுவோம். ஆனால் எக்ஸ்யூவி700 காரில் அந்த பிரச்னை இல்லை. கிளட்ச் நன்றாக இருக்கிறது. உங்களை சோர்வடைய செய்யாது. அதேபோல் கியர்களை மாற்றுவதும் வேகமாக நடைபெறுகிறது. எனவே ஸ்போர்ட்டியான ஓட்டுதல் அனுபவம் கிடைக்கும்.

ADAS (Advanced Driver Assistance Systems) வசதியை பெற்றுள்ள முதல் இந்திய கார் என்றால், அது எக்ஸ்யூவி700தான். இந்த அனுபவத்தையும் நாங்கள் பெற்றோம். அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங், டிரைவர் தூங்கினால் எச்சரிக்கும் வசதி, அட்டானமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

இதில், அட்டானமஸ் பிரேக்கிங் ஆரம்பத்தில் பயமுறுத்துவதை போல் இருந்தாலும், போக போக பழகி விடுகிறது. முன்னால் ஏதேனும் தடைகள் இருப்பதை இந்த கார் கண்டறிந்தால், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில், ''மோதலுக்கான வாய்ப்பு உள்ளது'' என்ற மெசேஜை தோன்ற செய்யும். இந்த எச்சரிக்கைக்கு பிறகும், உங்களுக்கு முன்னால் இருப்பதற்கு மிக நெருக்கமாக நீங்கள் சென்றால், ஸ்டியரிங் வீல் அதிர தொடங்கும். அத்துடன் பிரேக்கும் அப்ளை செய்யப்பட்டு விடும். இது மிக சிறப்பான பாதுகாப்பு வசதி என்பதில் துளியும் சந்தேகமில்லை.

ஆனால் ஒரு சில மணி நேரம் மட்டுமே கார் எங்களுடன் இருந்த காரணத்தால், எங்களால் மைலேஜை முழுமையாக பரிசோதிக்க முடியவில்லை. ஆனால் சாத்தியமுள்ள அனைத்து சோதனைகளையும் செய்த பிறகும், அதிவேகத்தில் பயணம் செய்த பிறகும் எம்ஐடி ஸ்க்ரீன் நிகழ்நேர எரிபொருள் சிக்கனமாக ஒரு லிட்டருக்கு 7.5 முதல் 10 கிலோ மீட்டரை காட்டியது. இந்த காரை நாங்கள் வெகு விரைவில் முறையாக சாலை சோதனைக்கு உட்படுத்துவோம். அப்போது மைலேஜ் பற்றிய சரியான தகவல்களை வழங்குகிறோம். அதே சமயம் இந்த காரின் பிரேக்கிங் சிறப்பாக இருக்கிறது.

இவ்வளவு குறைவான விலைக்கு இப்படி ஒரு பிரீமியமான காரா? வியக்க வைக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி700... ரிவியூ!

முக்கியமான வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள்

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியில் இடம்பெற்றுள்ள வசதிகளின் பட்டியல் மிக நீளமாக இருக்கிறது. எனவே கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இது இருக்கும்.

முக்கியமான வசதிகள்:

 • 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட்
 • சோனியின் பிரீமியம் மியூசிக் சிஸ்டம்
 • அமேஸான் அலெக்ஸா
 • ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே
 • ஆம்பியண்ட் லைட்டிங்
 • ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல்
 • ஏர் ப்யூரிஃபையர்
 • இன்ஸ்ட்ரூமெண்டேஷனுக்கும் 10.25 இன்ச் ஸ்க்ரீன்
 • இன்-பில்ட் நேவிகேஷன், 3டி மேப், லைவ் டிராஃபிக் அப்டேட்கள்
 • இவை ஒரு சில வசதிகள் மட்டும்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இன்னும் பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல் பாதுகாப்பு வசதிகளிலும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 அசத்துகிறது. இந்த காரில் மொத்தம் 7 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

  பாதுகாப்பு வசதிகள்:

  • 7 ஏர்பேக்குகள்
  • இஎஸ்பி
  • அட்டானமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங்
  • டிரைவர் தூங்கினால் எச்சரிக்கும் வசதி
  • எலெக்ட்ரானிக் லாக்கிங் டிஃப்ரன்ஷியல்
  • ஏபிஎஸ் + இபிடி
  • இவ்வளவு குறைவான விலைக்கு இப்படி ஒரு பிரீமியமான காரா? வியக்க வைக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி700... ரிவியூ!

   டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

   இந்த கார் பல்வேறு அம்சங்களில் பிரீமியமாக இருப்பது எங்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்த காரை பற்றி ஒரே வார்த்தையில் வர்ணிக்க வேண்டுமென்றால், 'பிரீமியம்' என கூறலாம். ஏராளமான பிரீமியம் வசதிகளை மிக மலிவான விலையில் மஹிந்திரா நிறுவனம் வழங்கியுள்ளது. இவ்வளவு சொகுசு வசதிகளை மாஸ் மார்க்கெட்டிற்கு வியக்க வைக்கும் விலையில் மஹிந்திரா கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குரியது.

Most Read Articles

English summary
Mahindra xuv700 suv review design features engine performance driving impressions price
Story first published: Wednesday, August 18, 2021, 10:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X