எல்லாருக்குமே பிடிக்குது... டொயோட்டா இன்னோவா கார் மீது இந்தியர்கள் ஏன் பைத்தியமாக உள்ளனர் தெரியுமா?
டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை இந்தியர்கள் ஏன் பெரிதும் விரும்புகின்றனர்? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta). அறிமுகமே தேவையில்லை என்னும் அளவிற்கு இந்திய வாடிக்கையாளர்கள் மனங்களை கொள்ளை கொண்ட காராக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா திகழ்கிறது. இது எம்பிவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

சந்தையில் வலுவான போட்டியை சந்தித்தாலும் கூட டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா தனது இடத்தை தொடர்ந்து சிறப்பான முறையில் தக்க வைத்து கொண்டுள்ளது. இந்திய சந்தையில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஏன் இவ்வளவு பிரபலமாக உள்ளது? அதன் ரீசேல் வேல்யூ மிகவும் அதிகமாக இருப்பதற்கு என்ன காரணம்? என்ற கேள்விகளுக்கான பதில்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சௌகரியம்
சௌகரியம் என்ற பிரிவில் அதிக மதிப்பெண்களை ஸ்கோர் செய்யும் வகையில் இன்னோவா க்ரிஸ்ட்டா காரை டொயோட்டா நிறுவனம் வடிவமைத்துள்ளது. அனைத்து வரிசைகளிலும் போதுமான அளவிற்கு லெக்ரூம் மற்றும் ஹெட்ரூம் கிடைப்பதால், உங்கள் பயணம் மிகவும் சௌகரியமாக இருக்கும். மூன்றாவது வரிசையும் கூட விசாலமாக இருப்பது இந்த காரின் முக்கியமான சிறப்பம்சம்.

இந்த வரிசையில் 2 அல்லது 3 பெரியவர்கள் அமர முடியும். டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில், 7 சீட்டர் வேரியண்ட்களின் நடு வரிசையில் கேப்டன் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த காரின் ஓட்டுனர் இருக்கையை மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும்.

அதேபோல் தேவை ஏற்படும்பட்சத்தில், கடைசி வரிசை இருக்கையை மடக்கி வைத்து கொள்வதன் மூலம் லக்கேஜ்களை வைத்து கொள்வதற்கான இடவசதியையும் அதிகரித்து கொள்ள முடியும். டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருப்பதற்கு சௌகரியம் மிக முக்கியமான காரணங்களில் ஒன்று.

எளிமையான பராமரிப்பு மற்றும் சர்வீஸ்
டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் ஸ்பேர் பார்ட்ஸ்கள் குறைவான விலையிலேயே கிடைக்கின்றன. எனவே இந்த காரை பராமரிப்பது மிகவும் எளிமையானது. அத்துடன் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் கட்டுமான தரம் வியப்பான ஒரு விஷயம். எனவே காரில் கோளாறு ஏற்படுவதும், ஸ்பேர் பார்ட்ஸ்களை மாற்றுவதும் அரிதான ஒரு விஷயம்தான்.

பொதுவாக டொயோட்டா கார்களில் அவ்வளவு எளிதாக எந்த பிரச்னையும் ஏற்படாது. அதற்கு டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரும் விதிவிலக்கு அல்ல. அதே நேரத்தில் டொயோட்டா நிறுவனத்தின் சர்வீஸ் சென்டர் நெட்வொர்க் இந்தியா முழுவதும் பரந்து விரிந்து காணப்படுகிறது. இங்கு வாடிக்கையாளர்களுக்கு திருப்தி ஏற்படும் வகையில் கார்கள் சர்வீஸ் செய்து தரப்படுகின்றன.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் மிகவும் பிரபலமாக இருப்பதற்கும், அதன் ரீசேல் வேல்யூ மிகவும் அதிகமாக இருப்பதற்கு இதுவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். அத்துடன் இன்னோவா க்ரிஸ்ட்டா காரை நன்றாக டிசைன் செய்வதற்கும் டொயோட்டா நிறுவனம் தீவிரமான உழைப்பை கொடுத்துள்ளது. இதுவும் இந்த காரை வெற்றிகரமான மாடலாக மாற்றியுள்ளது.

பிராண்ட் இமேஜ் மற்றும் பாதுகாப்பு
டொயோட்டா நிறுவனம் மிகவும் நம்பத்தன்மை வாய்ந்தது. வாடிக்கையாளர்கள் மத்தியில் டொயோட்டா நிறுவனத்திற்கு நல்ல பெயர் இருந்து வருவதும், இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் வெற்றிக்கு முக்கியமான காரணம். அத்துடன் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மிகவும் பாதுகாப்பான கார்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் டாப் வேரியண்ட்டில் 7 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. இதுதவிர எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம், ஹில் ஹோல்டு கண்ட்ரோல் மற்றும் ஹில் டெசண்ட் கண்ட்ரோல் ஆகிய பாதுகாப்பு வசதிகளையும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

அத்துடன் சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் கியர் பாக்ஸ்கள் என அனைத்தும் ஒன்று சேர்ந்துதான் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் கொண்டு சென்று சேர்த்துள்ளன. இந்த காருக்கு என்று தற்போது இந்தியாவில் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. திரையுலக பிரபலங்களும், அரசியல்வாதிகளும் கூட டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை பெரிதும் விரும்புகின்றனர்.


Click it and Unblock the Notifications








