இன்னோவா காரா இது!! அதிக மைலேஜ், தானாக பிரேக் பிடிக்கும் அம்சங்களுடன் தயார் பண்ணியிருக்காங்க!

டொயோட்டா இன்னோவா கார் ஹைபிரிட், தானாக பிரேக் பிடித்தல் மற்றும் சன்ரூஃப் போன்ற எக்கசக்க சிறப்பு வசதிகளுடன் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இன்னோவா காரா இது!! அதிக மைலேஜ், தானாக பிரேக் பிடிக்கும் அம்சங்களுடன் தயார் பண்ணியிருக்காங்க!

டொயோட்டா நிறுவனம் அதன் நான்காம் தலைமுறை இன்னோவா க்ரிஸ்டா காரை வெகு விரைவில் இந்தியா சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. மிக அதிக தொழில்நுட்ப வசதிகள் மற்றும் இட வசதிக் கொண்ட காராக இந்த வாகனம் இந்திய சந்தையை அலங்கரிக்க இருக்கின்றது. நான்காம் தலைமுறை இன்னோவா, 'இன்னோவா ஹைகிராஸ்' எனும் பெயரில் எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்னோவா காரா இது!! அதிக மைலேஜ், தானாக பிரேக் பிடிக்கும் அம்சங்களுடன் தயார் பண்ணியிருக்காங்க!

வரும் நவம்பர் மாதத்திற்குள் இக்காரின் இந்திய வருகை அமையலாம் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. இதைத்தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த கார் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இதற்கு முன்னதாக வரும் 2023 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் 'ஆட்டோ எக்ஸ்போவில்' இன்னோவா ஹைகிராஸ் அதிகாரப்பூர்வமாக பொதுபார்வைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது.

இன்னோவா காரா இது!! அதிக மைலேஜ், தானாக பிரேக் பிடிக்கும் அம்சங்களுடன் தயார் பண்ணியிருக்காங்க!

ஏற்கனவே டொயோட்டா நிறுவனம் இன்னோவா ஹைகிராஸ் காருக்கான வர்த்தக பதிவை செய்துவிட்டது. இந்த கார் டொயோட்டா இன்னோவா ஜெனிக்ஸ் எம்பிவி என்கிற பெயரில் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. சமீபத்தில் டொயோட்டா நிறுவனம் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இப்-பெயரிலேயே வெளியீடு செய்துள்ளது. இந்தமாதிரியான சூழ்நிலையிலேயே புதிய இன்னோவா ஹைகிராஸில் இடம்பெற இருக்கும் சில முக்கிய சிறப்பு தொழில்நுட்ப வசதிகள் பற்றிய விபரம் வெளியாகியுள்ளது.

இன்னோவா காரா இது!! அதிக மைலேஜ், தானாக பிரேக் பிடிக்கும் அம்சங்களுடன் தயார் பண்ணியிருக்காங்க!

ஹைபிரிட் தொழில்நுட்பம்:

சிறப்பு தொழில்நுட்ப வசதியாக டொயோட்டா நிறுவனம் இன்னோவா ஹைகிராஸ் காரில் ஹைபிரிட் அம்சத்தை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகையால், பெட்ரோல் மற்றும் மின் மோட்டார் ஆகிய இரண்டிலும் இயங்கும் வசதிக் கொண்ட காராக இன்னோவா ஹைகிராஸ் இந்தியாவில் களம் இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த இரு மோட்டார்களும் இணைந்து இன்னோவா ஹைகிராஸ் காரை அதிக மைலேஜ் தரும் காராக மாற்ற இருக்கின்றது.

இன்னோவா காரா இது!! அதிக மைலேஜ், தானாக பிரேக் பிடிக்கும் அம்சங்களுடன் தயார் பண்ணியிருக்காங்க!

தற்போது விற்பனையில் இருக்கும் இன்னோவா க்ரிஸ்டா ரியர் வீல் செட்-அப் உடன் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இன்னோவா ஹைகிராஸ் முன் பக்க வீல் இயக்கம் செட்-அப் உடன் விற்பனைக்கு வர உள்ளது. இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகளுடன் இன்னோவா ஹைகிராஸ் விற்பனைக்கு வர இருக்கின்றது.

இன்னோவா காரா இது!! அதிக மைலேஜ், தானாக பிரேக் பிடிக்கும் அம்சங்களுடன் தயார் பண்ணியிருக்காங்க!

கூடுதலாக என்னென்ன அம்சங்களுடன் விற்பனைக்கு வர இருக்கின்றது என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. அறிமுகத்தின்போது அல்லது அறிமுகத்திற்கு முன்னர் இதுகுறித்த விபரங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேலையில், என்னமாதிரியான அளவுகளைக் கொண்ட வாகனமாக இன்னோவா ஹைகிராஸ் உருவாக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன.

இன்னோவா காரா இது!! அதிக மைலேஜ், தானாக பிரேக் பிடிக்கும் அம்சங்களுடன் தயார் பண்ணியிருக்காங்க!

4.7 மீட்டர் நீளம், 2,850 மிமீ வீல் பேஸ் மற்றும் தற்போதைய இன்னோவா க்ரிஸ்டாவைக் காட்டிலும் 100 மீட்டர் கூடுதல் நீளத்தில் புதிய இன்னோவா ஹைகிராஸ் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகையால், தற்போது விற்பனையில் இருக்கும் இன்னோவாவைக் காட்டிலும் அதிக இட வசதியைக் கொண்டதாக இன்னோவா ஹைகிராஸ் இருக்கும் என தெரிகின்றது.

இன்னோவா காரா இது!! அதிக மைலேஜ், தானாக பிரேக் பிடிக்கும் அம்சங்களுடன் தயார் பண்ணியிருக்காங்க!

அதேநேரத்தில் இக்காரை எடைக் குறைவான வாகனமாகவும் டொயோட்டா உருவாக்கியிருக்கின்றது. அதிக மைலேஜை தருவதற்காக எடைக்குறைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதற்காகவே தற்போது பயன்பாட்டில் இருப்பதைக்காட்டிலும் மிக எடைக்குறைவான சேஸிஸ் அமைப்பு பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

இன்னோவா காரா இது!! அதிக மைலேஜ், தானாக பிரேக் பிடிக்கும் அம்சங்களுடன் தயார் பண்ணியிருக்காங்க!

இந்த காரின் வருகை எக்காரணம் கொண்டும் இன்னோவா கிரிஸ்டாவிற்கு தடை கல்லாக அமையாது என நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, இன்னோவா க்ரிஸ்டா மற்றும் இன்னோவா ஹைகிராஸ் ஆகிய இரண்டும் தொடர்ச்சியாக விற்பனையில் இருக்கும் என்பதையே இவ்வாறு டொயோட்டா தெரிவித்துள்ளது. அதிக மைலேஜ், அதிக இட வசதியை விரும்பும் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு இந்த காரை விற்பனைக்குக் கொண்டு வர நிறுவனம் தீவிரமாகக் களமிறங்கியிருக்கின்றது.

இன்னோவா காரா இது!! அதிக மைலேஜ், தானாக பிரேக் பிடிக்கும் அம்சங்களுடன் தயார் பண்ணியிருக்காங்க!

இக்காரில் கூடுதல் சிறப்பு வசதிகளாக மெல்லிய இழை போன்ற ஹெட்லேம்ப், வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள், ரெக்லைனிங் கேப்டைன் இருக்கை, ஒயர்லெஸ் சார்ஜிங், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற இருக்கின்றன. இதுதவிர, மிக முக்கியமான சிறப்பம்சங்களாக சன்ரூஃப் மற்றும் அடாஸ் தொழில்நுட்பம் புதிய இன்னோவா ஹைகிராஸ் காரில் எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்னோவா காரா இது!! அதிக மைலேஜ், தானாக பிரேக் பிடிக்கும் அம்சங்களுடன் தயார் பண்ணியிருக்காங்க!

இந்த அடாஸ் அம்சத்தின் வாயிலாக லேன் கீப் அசிஸ்ட், தானாக பிரேக் பிடித்தல், டிரைவர் அசிஸ்ட் போன்ற வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய மிக சூப்பரான அம்சமே டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரில் எதிர்பார்க்கப்படுகின்றது.

Source: autofun

More from DriveSpark

Article Published On: Tuesday, September 6, 2022, 13:54 [IST]
English summary
Toyota innova hycross to get sunroof adas hybrid
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+