எத வேணும்னாலும் களமிறக்குங்க ஆனா இந்த இன்னோவாவை வீழ்த்துவது சந்தேகம்தான்! டொயோட்டாவை தூக்கி நிறுத்தபோகுது!

விரைவில் இந்தியாவில் அறிமுகத்தைக் காண இருக்கும் இன்னோவா ஹைகிராஸ் தற்போது இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் காணலாம்.

டொயோட்டா நிறுவனம் அதன் அதிகம் மைலேஜ் தரக் கூடிய இன்னோவா ஹைகிராஸ் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இன்னும் ஒரு சில தினங்களே உள்ளன. இந்நிலையிலேயே இந்தியா வரவிருக்கும் இன்னோவா ஹைகிராஸ் காரை டொயோட்டா நிறுவனம் இந்தோனேசியா சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

டொயோட்டா இன்னோவா

டொயோட்டா இன்னோவா ஜெனிக்ஸ் எனும் பெயரில் அந்த கார் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டுள்ளது. உலக வருகையை முன்னிட்டே இந்தோனேசியாவில் இந்த பிரிமியம் எம்பிவி இன்று (நவம்பர் 21) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் வரும் நவம்பர் 25 ஆம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்யப்பட இருக்கின்றது. இதன் விலை ஜனவரி மாதம் இந்தியாவில் நடைபெற இருக்கும் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தோனேசியாவில் 419.6 ருபையாவிற்கு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 21.8 லட்சம் ஆகும். தற்போது விற்பனையில் இருக்கும் இன்னோவாவைக் காட்டிலும் ரூ. 3 லட்சம் அதிகம் விலையில் இந்தோனேசியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் இந்தியாவில் விற்பனைக்கு வரும்போதும் தற்போது சந்தையில் விற்பனையில் இருக்கும் இன்னோவாவைக் காட்டிலும் சில லட்சங்கள் அதிக விலையில் இன்னோவா ஹைகிராஸ் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டொயோட்டா இன்னோவா

அதிக பிரீமியம் அம்சங்கள் மற்றும் புதிய ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பம் உள்ளிட்டவை இன்னோவா ஹைகிராஸில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனாலேயே அதன் விலையும் சற்று அதிகமாக இருக்கின்றது. குறிப்பாக, வழக்கமான இன்னோவாவைக் காட்டிலும் பெரிய உருவம் அதற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக பார்ப்பதற்கு எஸ்யூவி தோற்றத்திலும் இன்னோவா ஜெனிக்ஸ் (ஹைகிராஸ்) காட்சியளிக்கிறது.

இத்துடன் முரட்டுத் தனமான தோற்றத்திற்காக புதிய க்ரில், குரோம் அக்செண்டுகள், பிளாக் இன்செர்டுகள், புதிய பம்பர், அகலமான ஏர் இன்லெட், ஃபாக்ஸ், புதிய தோற்றத்திலான எல்இடி டேடைம் லைட், எல்இடி புரஜெக்டர் ரக ஹெட்லைட் உள்ளிட்ட எக்கசக்க அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர, பனோரமிக் சன்ரூஃப், அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் போன்ற நவீன கால வசதிகளும் இக்காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற காரணங்களினாலேயே இன்னோவா ஹைகிராஸ் காருக்கு அதிக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிக விலைக்கு மட்டுமல்ல அதிகப்படியானோரைக் கவரும் இந்த சிறப்பு வசதிகளே காரணமாக இருக்கின்றன. குறிப்பாக, இந்தியர்கள் இந்த காரின் வருகையை பெரிதும் நோக்கிக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

எனவே டொயோட்டா நிறுவனத்தை இந்த கார் விற்பனையில் தூக்கி நிறுத்தும் என நம்பப்படுகின்றது. இந்த காத்திருப்புக்கு இன்னுமொரு காரணமும் இருக்கின்றது. அடாஸ் அம்சமே அது ஆகும். இந்த அம்சத்தின் வாயிலாக தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம், லேன் டிபார்ச்சர் வார்னிங், லேன் கீப் அசிஸ்ட், ரியர் கிராஸ் டிராஃபிக் அலர்ட், பிளைன்ட் ஸ்பாட் மானிட்டரிங் அம்சம் உள்ளிட்டவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும்.

2.0 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பையர்டு பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதிலேயே ஸ்ட்ராங் ஹைபிரிட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதை தனியாக சார்ஜ் செய்ய வேண்டியதில்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆம், இயக்கத்தின்போதே இந்த அம்சம் தானாக சார்ஜ் செய்து கொள்ளும். ஆனால், இதன் வாயிலாக எத்தனை கிமீ பயணிக்க முடியும் என்பது போன்ற முக்கிய தகவல்கள் வெளியிடப்படவில்லை. இதுகுறித்த விரிவான தகவல்கள் வரும் 25ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, November 21, 2022, 16:10 [IST]
English summary
Toyota innova zenix launcehd in indonesia
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X