பெட்ரோல் இன்னோவா க்ரிஸ்டா பக்கம் மக்களை ஈர்க்க செம்ம ஆஃபர் அறிவிப்பு! இந்த காரோட புக்கிங்கும் பிச்சுக்கபோது!

பெட்ரோல் எஞ்ஜின் கொண்ட இன்னோவா க்ரிஸ்டா பக்கம் மக்களை ஈர்க்க இன்னோவா க்ரிஸ்டா லிமிடெட் எடிசன் (Innova Crysta Limited Edition) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் வருகைகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பெட்ரோல் இன்னோவா க்ரிஸ்டா பக்கம் மக்களை ஈர்க்க செம்மையான ஆஃபர் அறிவிப்பு... அடுத்து இந்த காரோட புக்கிங்கையும் நிறுத்திடுவாங்களோ?

டொயோட்டா (Toyota) நிறுவனத்தின் புகழ்மிக்க கார் மாடல்களில் இன்னோவா க்ரிஸ்டா (Innova Crysta) -வும் ஒன்று. இந்த கார் மாடலின் டீசல் எஞ்ஜின் வேரியண்டிற்கான புக்கிங்கே அண்மையில் நிறுத்தப்பட்டது. டொயோட்டா நிறுவனத்தின் இந்த திடீர் முடிவு நாட்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சொல்லப்போனால் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக இன்னோவா க்ரிஸ்டா இருக்கின்றது.

பெட்ரோல் இன்னோவா க்ரிஸ்டா பக்கம் மக்களை ஈர்க்க செம்மையான ஆஃபர் அறிவிப்பு... அடுத்து இந்த காரோட புக்கிங்கையும் நிறுத்திடுவாங்களோ?

அதிலும், இதன் டீசல் மோட்டார் வெர்ஷனுக்கே இந்தியர்களிடத்தில் வரவேற்பு உச்சத்தில் இருக்கின்றது. இத்தகைய காருக்கான புக்கிங் பணிகள் நிறுத்தப்பட்டதை அனைவருக்கும் ஷாக்கிங்கை ஏற்படுத்தியது. நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு மக்களிடத்தில் நிலவும் அதீத வரவேற்புக் காரணம் என கூறப்படுகின்றது. ஆமாங்க, கம்பெனியின் உற்பத்தி திறனை மிஞ்சுமளவிற்கு டீசல் இன்னோவா க்ரிஸ்டாவிற்கு புக்கிங் கிடைத்திருக்கின்றது.

பெட்ரோல் இன்னோவா க்ரிஸ்டா பக்கம் மக்களை ஈர்க்க செம்மையான ஆஃபர் அறிவிப்பு... அடுத்து இந்த காரோட புக்கிங்கையும் நிறுத்திடுவாங்களோ?

இதன் விளைவாகவே நிறுவனம் புக்கிங்கை நிறுத்தியிருக்கின்றது. இந்த நிலையில், டொயோட்டா நிறுவனம் டீசல் வெர்ஷன் இன்னோவா க்ரிஸ்டாவிற்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை பெட்ரோல் வெர்ஷனுக்கு திருப்பி விடும் விதமாக புதிய சிறப்பு பதிப்பை இந்த கார் மாடலில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இன்னோவா க்ரிஸ்டா லிமிடெட் எடிசன் (Toyota Innova Crysta Limited Edition) எனும் பெயரில் அது அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.

பெட்ரோல் இன்னோவா க்ரிஸ்டா பக்கம் மக்களை ஈர்க்க செம்மையான ஆஃபர் அறிவிப்பு... அடுத்து இந்த காரோட புக்கிங்கையும் நிறுத்திடுவாங்களோ?

இது பெட்ரோல் மோட்டார் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும். இன்னவோ க்ரிஸ்டாவின் ஜிஎக்ஸ் வேரியண்டிலேயே இன்னோவா க்ரிஸ்டா லிமிடெட் எடிசன் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இது உயர்நிலை வேரியண்டுகளில் ஒன்றாகும். பெயருக்கு ஏற்ப இந்த வாகனம் மிகக் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைச் செய்யப்பட இருக்கின்றது.

பெட்ரோல் இன்னோவா க்ரிஸ்டா பக்கம் மக்களை ஈர்க்க செம்மையான ஆஃபர் அறிவிப்பு... அடுத்து இந்த காரோட புக்கிங்கையும் நிறுத்திடுவாங்களோ?

மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு விதமான டிரான்ஸ்மிஷன் தேர்வுகலில் இன்னோவா க்ரிஸ்டா லிமிடெட் எடிசன் விற்பனைக்குக் கிடைக்கும். இதன் மேனுவல் வேரியண்டிற்கு ரூ. 17.45 லட்சம் விலையும், ஆட்டோமேட்டிக் தேர்விற்கு ரூ. 19.02 லட்சம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையிலேயே கூடுதல் அணிகலன்களுடன் இந்த லிமிடெட் எடிசன் க்ரிஸ்டாவை விற்பனைக்கு களமிறக்கியிருக்கின்றது டொயோட்டா நிறுவனம்.

பெட்ரோல் இன்னோவா க்ரிஸ்டா பக்கம் மக்களை ஈர்க்க செம்மையான ஆஃபர் அறிவிப்பு... அடுத்து இந்த காரோட புக்கிங்கையும் நிறுத்திடுவாங்களோ?

கூடுதல் அக்ஸசெரீஸ்களுக்கு கூடுதல் கட்டணம் கிடையாது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த வாகனத்தின் வருகை பெட்ரோல் வெர்ஷனின் பக்கம் மக்கள் ஈர்ப்பை பெறுவது மட்டுமே அல்ல, வரும் பண்டிகைக் காலத்தை சிறப்பிப்பதும் இதன் வருகையின் நோக்கமாக உள்ளது. ஆம், வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வாகன உற்பத்தியாளர்கள் புதுமுக மற்றும் சிறப்பு பதிப்பு வாகனங்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றன.

பெட்ரோல் இன்னோவா க்ரிஸ்டா பக்கம் மக்களை ஈர்க்க செம்மையான ஆஃபர் அறிவிப்பு... அடுத்து இந்த காரோட புக்கிங்கையும் நிறுத்திடுவாங்களோ?

அந்தவகையில், அண்மையில் இந்த வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் அதன் நெக்ஸான், நெக்ஸான் இவி, ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய நான்கு கார் மாடல்களில் ஜெட் எடிசன் எனும் சிறப்பு பதிப்பை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதேபோல், ரெனால்ட் நிறுவனம் அதன் க்விட், கைகர் மற்றும் ட்ரைபர் ஆகிய கார் மாடல்களில் லிமிடெட் சிறப்பு பதிப்புகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

பெட்ரோல் இன்னோவா க்ரிஸ்டா பக்கம் மக்களை ஈர்க்க செம்மையான ஆஃபர் அறிவிப்பு... அடுத்து இந்த காரோட புக்கிங்கையும் நிறுத்திடுவாங்களோ?

இந்த நிலையிலேயே டொயோட்டா நிறுவனம் அதன் இன்னோவா க்ரிஸ்டா கார் மாடலில் லிமிடெட் எடிசன் எனும் சிறப்பு பதிப்பை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதில், முன்னதாக கூடுதல் கட்டணத்துடன் வழங்கப்பட்டு வந்த எக்ஸ்ட்ரா அணிகலன்கள் மற்றும் சிறப்பு கருவிகள் கூடுதல் கட்டணமின்றி வழங்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஹெட்ஸ்-அப் திரை உள்ளிட்ட அம்சங்கள் இந்த சிறப்பு பதிப்பில் வழங்கப்பட்டுள்ளன.

பெட்ரோல் இன்னோவா க்ரிஸ்டா பக்கம் மக்களை ஈர்க்க செம்மையான ஆஃபர் அறிவிப்பு... அடுத்து இந்த காரோட புக்கிங்கையும் நிறுத்திடுவாங்களோ?

இந்த அக்ஸசெரீஸ்களை தனியாக வாங்கினால் ரூ. 55 ஆயிரம் வரை செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், லிமிடெட் எடிசன் வாயிலாக கூடுதல் கட்டணமின்றி டொயோட்டா நிறுவனம் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த ஆஃபரை ஸ்டாக் உள்ளவரையில் அல்லது வரும் அக்டோபர் வரையில் வழங்க இருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையால் தற்போது டீசல் வெர்ஷனுக்கு புக்கிங்கை நிறுத்துமளவிற்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு பெட்ரோல் வெர்ஷனுக்கும் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பெட்ரோல் இன்னோவா க்ரிஸ்டா பக்கம் மக்களை ஈர்க்க செம்மையான ஆஃபர் அறிவிப்பு... அடுத்து இந்த காரோட புக்கிங்கையும் நிறுத்திடுவாங்களோ?

ஏற்கனவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா பெட்ரோல் காருக்கு 30 முதல் 45 நாட்கள் வரையில் காத்திருப்பு காலம் நிலவுவது குறிப்பிடத்தகுந்தது. டொயோட்டா நிறுவனம் வெகுவிரைவில் இன்னோவா க்ரிஸ்டா காரின் விற்பனையை அதிகரிக்கச் செய்யும் வகையில் இன்னோவா ஹைகிராஸ் எனும் மாடலை உலகளவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த புதிய வாகனத்தின் வருகை வரும் நவம்பர் மாதம் அரங்கேற இருக்கின்றது. இதிலும் மூன்று வரிசை இருக்கை அமைப்பே கொடுக்கப்பட்டிருக்கும். அதேவேலையில், பெட்ரோல்-ஹைபிரிட் தொழில்நுட்பம் புதிதாக இந்த வெர்ஷனில் சேர்க்கப்பட்டிருக்கும். இதுவே ஹைகிராஸில் இடம் பெறும் மிக முக்கியமான அம்சம் ஆகும்.

குறிப்பு: முதல் இரு படங்களை மற்ற அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

More from DriveSpark

Article Published On: Friday, September 2, 2022, 13:05 [IST]
English summary
Toyota introduced innova crysta limited edition in india at rs 17 45 lakh
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+