சர்ப்ரைஸ் செய்த டொயோட்டா... இன்னோவா மின்சார கார் வெளியீடு... இததாங்க ரொம்ப நாளா எதிர்பார்த்திட்டு இருக்கோம்!

டொயோட்டா (Toyota) நிறுவனம் அதன் புகழ்மிக்க கார் மாடல்களில் ஒன்றான இன்னோவாவை எலெக்ட்ரிக் (Innova electric concept) காராக உருவாக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சர்ப்ரைஸ் செய்த டொயோட்டா... இன்னோவா மின்சார கார் வெளியீடு... இததாங்க ரொம்ப நாளா எதிர்பார்த்திட்டு இருக்கோம்!

டொயோட்டா (Toyota) நிறுவனத்தின் பிரபலமான கார் மாடல்களில் ஒன்றே இன்னோவா (Innova). இந்த கார் தற்போது இந்திய சந்தையில் இன்னோவா க்ரிஸ்டா (Innova Crysta) எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இக்காருக்கு அரசியல்வாதிகள் மற்றும் அதிக இட வசதியை விரும்புவோர் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்று வருகின்றது.

சர்ப்ரைஸ் செய்த டொயோட்டா... இன்னோவா மின்சார கார் வெளியீடு... இததாங்க ரொம்ப நாளா எதிர்பார்த்திட்டு இருக்கோம்!

மேலும், இக்கார் தற்போது வரை உள்ளெரிப்பு எஞ்ஜின் வசதியுடன் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இந்த நிலையில், இன்னோவா க்ரிஸ்டா காரை, டொயோட்டா நிறுவனம், மிக விரைவில் எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் விற்பனைக்கு வழங்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இன்னோவாவின் மின்சார வெர்ஷனை நிறுவனம் தற்போது காட்சிப்படுத்தியிருக்கின்றது.

சர்ப்ரைஸ் செய்த டொயோட்டா... இன்னோவா மின்சார கார் வெளியீடு... இததாங்க ரொம்ப நாளா எதிர்பார்த்திட்டு இருக்கோம்!

கான்செப்ட் மாடலாக மட்டுமே நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது. தற்போது, இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் சர்வதேச மோட்டார் வாகன கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த கண்காட்சியிலேயே டொயோட்டா நிறுவனம் இன்னோவா எலெக்ட்ரிக் (Innova EV) கான்செப்ட் மாடலை வெளியீடு செய்திருக்கின்றது.

ஆனால், இந்த கார் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல்களையும் நிறுவனம் வெளியிடவில்லை. இன்னும் ஒரு சில மணி நேரங்களில் அந்த தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. திடீரென, எலெக்ட்ரிக் வெர்ஷன் இன்னோவா காரை டொயோட்டா நிறுவனம் வெளியீடு செய்திருப்பது மின் வாகன பிரியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

சர்ப்ரைஸ் செய்த டொயோட்டா... இன்னோவா மின்சார கார் வெளியீடு... இததாங்க ரொம்ப நாளா எதிர்பார்த்திட்டு இருக்கோம்!

இந்தியாவில் தற்போதும் எம்பிவி ரக வாகனங்களுக்கு சற்று மவுசு அதிகம்தான். அது பெரியளவில் இல்லை என்றாலும், அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் குடும்பத்தினர் மத்தியில் தற்போதும் இந்த ரக வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றது. ஆகையால், இன்னோவா இவி உலக வெளியீட்டிற்கு பின்னர் இந்தியாவிலும் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சர்ப்ரைஸ் செய்த டொயோட்டா... இன்னோவா மின்சார கார் வெளியீடு... இததாங்க ரொம்ப நாளா எதிர்பார்த்திட்டு இருக்கோம்!

ஏற்கனவே சீனாவைச் சேர்ந்த பிஒய்டி எனும் நிறுவனம் இ6 எனும் எலெக்ட்ரிக் எம்பிவி ரக காரை நம் நாட்டில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இந்த எலெக்ட்ரிக் கார் வர்த்தக நிறுவனங்களுக்கு மட்டுமே தற்போது வரை விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகின்றது. ஒரு வேலை இன்னோவா இவி இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமானால் நிச்சயம் இ6-க்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும். தற்போதைய நிலவரப்படி பிஒய்டி இ-6 மின்சார கார் இந்தியாவில் ரூ. 30 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இதைவிட சற்று அதிக விலையில் இன்னோவா இவி எதிர்பார்க்கப்படுகின்றது.

சர்ப்ரைஸ் செய்த டொயோட்டா... இன்னோவா மின்சார கார் வெளியீடு... இததாங்க ரொம்ப நாளா எதிர்பார்த்திட்டு இருக்கோம்!

இந்தியாவில் டாடா, ஹூண்டாய், எம்ஜி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு வழங்க தொடங்கிவிட்டன. ஆனால், மாருதி சுஸுகி, மற்றும் ஹோண்டா போன்ற பிரபல நிறுவனங்கள் இன்னும் அதன் எலெக்ட்ரிக் வாகனங்களின் வருகை குறித்த தகவலைக்கூட வெளியிடாமல் இருக்கின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே டொயோட்டா நிறுவனம் அதன் மின் வாகனம் இன்னோவா க்ரிஸ்டா எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்திருக்கின்றது.

சர்ப்ரைஸ் செய்த டொயோட்டா... இன்னோவா மின்சார கார் வெளியீடு... இததாங்க ரொம்ப நாளா எதிர்பார்த்திட்டு இருக்கோம்!

ஆனால், இந்த கார் குறித்த முக்கிய தகவல்கள் எதையும் அது வெளியிடவில்லை. அதேநேரத்தில், தற்போது வெளியாகியிருக்கும் வீடியோ மற்றும் படங்கள், வழக்கமான இன்னோவா க்ரிஸ்டாவின் பாடி பேனல்களிலேயே மின்சார வெர்ஷன் இன்னோவா உருவாக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது.

சர்ப்ரைஸ் செய்த டொயோட்டா... இன்னோவா மின்சார கார் வெளியீடு... இததாங்க ரொம்ப நாளா எதிர்பார்த்திட்டு இருக்கோம்!

அதேநேரத்தில் சில மாற்றங்கள் இது ஓர் மின்சார கார் என்பதை வெளிக்காட்டும் வகையில் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சார்ஜிங் போர்ட், வித்தியாசமான க்ரில் மற்றும் பம்பர் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆகையால், இதன் முகப்பு பகுதி புதுமையானதாக காட்சியளிக்கின்றது. இதுமட்டுமின்றி, அலாய் வீல்கள் மற்றும் எலெக்ட்ரிக் எனும் பேட்ஜும் புதிதாக இக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 31, 2022, 11:16 [IST]
English summary
Toyota revealed innova ev concept in indonesia international motor show
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+