ஹூண்டாய் vs டாடா போட்டி பரபரப்பா போயிட்டு இருக்கு!! கிரெட்டா மட்டும் இல்லைனா ஹூண்டாய் அவ்வளவுதான்!

ஹூண்டாய் மோட்டார்ஸ் (Hyundai Motors) நிறுவனம் கடந்த 2023 அக்டோபர் மாதத்தில் மொத்தம் 55,128 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் கார்கள் விற்பனையில் ஹூண்டாய் எந்த அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது என்பதையும், ஒவ்வொரு ஹூண்டாய் காரும் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதையும் பற்றி இனி பார்க்கலாம்.

மாருதி சுஸுகிக்கு அடுத்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யக்கூடிய கார் நிறுவனமாக ஹூண்டாய் விளங்குகிறது. மாதந்தோறும் அரை இலட்சம் கார்களை விற்பனை செய்யும் இந்த நிறுவனத்தின் கடந்த அக்டோபர் மாத விற்பனை எண்ணிக்கை 55 ஆயிரத்தை கடந்து உள்ளது.

hyundai sales report cars wise

கடந்த மாதத்தில் ஹூண்டாய் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை 55,128 ஆகும். ஆனால், கடந்த 2022ஆம் ஆண்டில் இதே அக்டோபர் மாதத்தில் மொத்தம் 48,001 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, ஹூண்டாய் கார்களின் விற்பனை எண்ணிக்கை ஆனது 14.8% அதிகரித்துள்ளது.

அதேபோல், கடந்த 2023 செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையிலும் இந்த எண்ணிக்கை 1.6% அதிகமாகும். ஏனெனில், அந்த மாதத்திலும் சற்று குறைவாக 54,241 கார்களை மட்டுமே ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. மொத்தமாக கடந்த அக்டோபர் மாதத்தில் 100%இல் 14.1% பேர் ஹூண்டாய் கார்களை வாங்கியுள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

hyundai sales report cars wise

ஹூண்டாய்க்கு அடுத்து அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் 3வது இடத்தில் உள்ளது. ஹூண்டாய்க்கும், டாடா நிறுவனத்துக்கும் இடையே கடந்த சில வருடங்களாக 2வது இடத்திற்கான போட்டி நிலவி வந்தாலும், கடந்த மாத விற்பனையில் ஹூண்டாய் கணிசமான விற்பனை எண்ணிக்கைகளுடன் முன்னிலையில் உள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்தில், ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட காராக கிரெட்டா முதலிடத்தை தனதாக்கி உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 13,077 ஹூண்டாய் கிரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெறும் 11,880 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

hyundai sales report cars wise

இதன்படி பார்க்கும்போது, கிரெட்டா கார்களின் விற்பனை 10% அதிகரித்துள்ளது. கிரெட்டாவுக்கு அடுத்து 2வது இடத்தில் வென்யூ 11,581 கார்கள் விற்பனை உடன் உள்ளது. ஹூண்டாயின் சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரான வென்யூ 2022 அக்டோபர் மாதத்தில் தற்போதைய எண்ணிக்கையை காட்டிலும் 21% குறைவாக மொத்தம் 9,585 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தது.

ஹூண்டாய் எக்ஸ்டர் இந்த வரிசையில் 3வது இடத்தை சொந்தமாக்கி உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 8,097 எக்ஸ்டர் மைக்ரோ எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. ஐ20 7,212 யூனிட்கள் விற்பனை உடன் 4வது இடத்திலும், கிராண்ட் ஐ10 6,552 யூனிட்கள் விற்பனை உடன் 5வது இடத்திலும் உள்ளன. இவற்றிற்கு அடுத்து 6வது மற்றும் 7வது இடங்களில் முறையே அவ்ரா (4,096) மற்றும் வெர்னா (2,313) கார்கள் உள்ளன.

hyundai sales report cars wise

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் கார்களுக்கு எப்போதுமே இந்தியாவில் மவுசு உள்ளது. இது மாதத்திற்கு மாதம் வளர்ச்சி கண்டு வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இதனால், எதிர் காலத்தில் கார்கள் விற்பனையில் ஹூண்டாய்க்கும், மாருதி சுஸுகிக்கும் இடையே போட்டி வந்தாலும், ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.

More from DriveSpark

Article Published On: Saturday, November 11, 2023, 9:23 [IST]
English summary
Hyundai sales report cars wise creta at top check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X