புள்ளையையே 10 மாசத்துல பெத்திடலாம்.. இந்த காருக்கு 18 மாசம் காத்திருக்கணுமா? இருக்காங்க! அப்படி என்ன கார் அது?

லம்போர்கினி உருஸ் காருக்கு நிலவும் காத்திருப்பு காலம் மற்றும் நிறுவனத்தின் எதிர்கால திட்டம் என பல்வேறு முக்கிய தகவல்களை அண்மையில் அந்நிறுவனத்தின் இந்தியாவிற்கான தலைவர் ஷரத் அகர்வால் அண்மையில் பகிர்ந்துக் கொண்டார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சூப்பர் கார் தயாரிப்பிற்கு பெயர்போன நிறுவனமாக லம்போர்கினி (Lamborghini) இருக்கின்றது. இந்த நிறுவனம் பன்முக கார் மாடல்களை உலக சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்தியாவிலும் சில சூப்பர் கார் மாடல்களை அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் தரமான கார் மாடலாக உருஸ் இருக்கின்றது.

லம்போர்கினி

இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இந்த காருக்கு இந்தியாவில் மிக மிக அமோகமான வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் மட்டுமில்லைங்க உலக நாடுகளிலும் லம்போர்கினி உருஸ் எஸ்யூவிக்கு நல்ல சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. கோடீஸ்வரர்களின் மனம் கவர்ந்த வாகனமாக இது இருக்கின்றது. ஆகையால், இதுவரை லம்போர்கினி நிறுவனத்தின் எந்தவொரு கார் மாடலும் இந்த அளவு விற்பனையாகியது இல்லை என கூறும் அளவிற்கு லம்போர்கினி உருஸ் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது.

இந்த கார் இரு விதமான வெர்சன்களில் உலக சந்தையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. உருஸ் (Urus) மற்றும் உருஸ் பெர்ஃபார்மண்டே (Urus Performante) ஆகியவையே அந்த வெர்சன்கள் ஆகும். இதில், உருஸ் பெர்ஃபார்மண்டேவை லம்போர்கினி நிறுவனம் அண்மையில் பெங்களூருவிற்கு எடுத்து வந்தது.

இதன் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாக ஊடகங்களுக்கு இக்காரை ரைடு ரிவியூ செய்து பார்க்க அழைப்பு விடுக்கப்பட்டது. அந்தவகையில், நமது டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் வாயிலாக உருஸ் பெர்ஃபார்மண்டேவை இயக்கி பார்க்கும் நல்வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது (இந்த ரைடு ரிவியூ விபரங்களை அறிய இங்கே க்ளிக் செய்யவும்). இதனிடையே லம்போர்கினி இந்தியாவின் தலைவர் ஷரத் அகர்வாலுடன் உரையாடும் வாய்ப்பும் எங்களுக்கு கிடைத்தது.

இந்த உரையாடலின் வாயிலாக நிறுவனத்தின் எதிர்கால நடவடிக்கைகள் பற்றிய சில முக்கிய தகவல்கள் எங்களுக்கு கிடைத்தன. இந்தியாவின் முக்கிய இலக்கான பசுமை இயக்கத்தில் லம்போர்கினி நிறுவனம் வெகுவிரைவில் அதன் பங்களிப்பை வழங்க இருப்பது தெரிய வந்திருக்கின்றது. அதாவது, நிறுவனம் இன்னும் சில மாதங்களில் ஹைபிரிட் வசதிக் கொண்ட கார்களைக் களமிறக்க இருப்பதாக ஷரத் அகர்வால் தெரிவித்தார். இதுபோன்று இன்னும் பல சுவாரஷ்ய தகவல்களை அவர் பகிர்ந்துக் கொண்டார். அவை பின்விருமாறு:

இந்தியாவில் லம்போர்கினியின் ஒட்டுமொத்த விற்பனையில் சுமார் 60 க்கும் அதிகமான சதவீதத்தை உருஸ் எஸ்யூவி கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த காரை தொடர்ந்து ஹூராகேன் சூப்பர் காரே அதிகளவில் விற்பனையாகுவதாக அவர் கூறினார். லம்போர்கினி ஹூராகேன் சூப்பர் காரில் புகழ்பெற்ற வி12 மோட்டாரே பயன்படுத்தப்படுகின்றது.

இந்த காரை வெகு விரைவில் புதிய அவதாரத்தில் லம்போர்கினி நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. ஷரத் அகர்வால் கூறியிருப்பதன்படி, உருஸ் பெர்ஃபார்மண்டேவிற்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்திருப்பது தெரிய வந்திருக்கின்றது. ஒட்டுமொத்த உருஸ் விற்பனையில் பெரும்பகுதியை இந்த பதிப்பு பிடித்திருப்பதாக அவர் கூறினார்.

அதீத டிமாண்டின் காரணமாக இந்த காருக்கான காத்திருப்பு காலம் தற்போது இந்தியாவில் 18 மாதங்களாக உயர்ந்திருக்கின்றது. ஒரு ஆண்டுக்கும் அதிகமாக காத்திருந்து இந்த காரை வாங்கவும் இந்தியர்கள் தயாராக இருக்கின்றனர் என்பதற்கு சான்றாக இது இருக்கின்றது. இந்த தகவலையும் ஷரத் அகர்வாலே உறுதிப்படுத்தி இருக்கின்றார்.

இத்தகைய அபரீதமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்ற போதிலும் உருஸ் எஸ் மற்றும் உருஸ் பெர்ஃபார்மண்டேவை சந்தையைவிட்டு வெளியேற்ற இருப்பதாக ஷரத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதன் வெளியேற்றத்தை அடுத்து அவற்றின் காலி இடங்களை உருஸ் ஹைபிரிட் வாயிலாக நிரப்ப இருப்பதாகவும் அவர் கூறினார். ஆகையால், உருஸ் கார் முழுமையாக அகற்றப்பட்டுவிடுமோ என்கிற அச்சம் விலகியிருக்கின்றது.

உருஸ் மட்டுமின்றி இன்னும் சில கார் மாடல்களையும் ஹைபிரிட் தொழில்நுட்ப வசதி உடன் லம்போர்கினி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. சமீபத்தில் லம்போர்கினி நிறுவனம் 1,001 பிஎச்பி திறனை வெளியேற்றக் கூடிய வி12 ஹைபிரிட் மோட்டாரை வெளியீடு செய்தது.

இந்த மோட்டாரே விரைவில் அறிமுகமாக இருக்கும் லம்போர்கினியின் சூப்பர் கார்களில் பயன்படுத்தப்பட இருக்கின்றன. முதலில் அவன்டேடரில் இந்த மோட்டார் எதிர்பார்க்கப்படுகின்றது. ஹீராகேனில் தற்போது வி10 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதையும் இப்புதிய மோட்டாரே ரீபிளேஸ் செய்ய இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க மற்ற சூப்பர் கார் பிராண்டுகளிடம் இருந்து மாறுபட்டு காட்சியளிக்கும் விதமாக தங்களின் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை லம்போர்கினி வழங்கிக் கொண்டிருக்கின்றது.

அந்தவகையில், சில சிறப்பு நிகழ்ச்சிகளை அது ஏற்படுத்திக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக டர்ட் டிராக் டிரைவ் (Dirt Track Drive) போன்ற வசதிகளை உருஸ் பெர்ஃபார்மன்டே வாடிக்கையாளர்களுக்கு லம்போர்கினி ஏற்படுத்திக் கொடுக்கிறது. நிறுவனம் மேற்கொள்ளும் விற்பனைக்கு பிந்தைய மிக சிறப்பான சேவையாக இது இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 9, 2023, 17:17 [IST]
English summary
Interview with lamborghini india head sharad agarwal
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+