29 கிமீ மைலேஜ் தரும் மாருதி காரின் விலை இவ்ளோதானா! ஷோரூம்களுக்கு சாரை சாரையா படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx). மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார், கடந்த ஏப்ரல் மாத இறுதியில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

அதாவது மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 6 மாதங்கள் மட்டுமே ஆகின்றன. அதற்குள்ளாக விற்பனையில் மிக பிரம்மாண்டமான மைல்கல் (Sales Milestone) ஒன்றை மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கடந்துள்ளது. 75 ஆயிரம் யூனிட்கள் விற்பனை என்பதுதான் அந்த புதிய மைல்கல் ஆகும்.

Maruti Suzuki Fronx

Popular Articles: இந்தியாவிற்கு வந்தது 40 கிமீ மைலேஜ் தரும் மாருதி ஸ்விஃப்ட்! பைக் வாங்கறவங்க எல்லாம் இனி கார் வாங்க போறாங்க!

வெறும் ஆறே மாதங்களில், 75 ஆயிரம் வாடிக்கையாளர்களின் வீடுகளை மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் சென்றடைந்திருப்பது உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயம் என்பதில் நமக்கு துளியும் சந்தேகம் இல்லை. இன்னும் சொல்லப்போனால், மாருதி சுஸுகி பலேனோ காரை விட மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் மிக வேகமாக இந்த விற்பனை மைல்கல்லை எட்டியுள்ளது.

அதாவது மாருதி சுஸுகி பலேனோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 8 மாதங்களுக்கு பிறகுதான், 75 ஆயிரம் யூனிட்கள் என்ற மைல்கல்லை எட்டியது. ஆனால் அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் சுமார் 2 மாதங்களுக்கு முன்னதாக, அதாவது வெறும் 6 மாதங்களிலேயே 75 ஆயிரம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை கடந்து விட்டது.

Maruti Suzuki Fronx Rear Profile

தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காருக்கு ஒவ்வொரு நாளும் சராசரியாக 550 முன்பதிவுகள் (Bookings) வருகின்றன. மறுபக்கம் மாருதி சுஸுகி பலேனோ காருக்கு ஒவ்வொரு நாளும் சராசரியாக 700 முன்பதிவுகள் வந்து கொண்டுள்ளன. ஆனால் இது முன்பு ஒரு நாளுக்கு 830 முன்பதிவுகள் என்ற அளவில் இருந்தது.

மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், மாருதி சுஸுகி பலேனோ காருக்கான வரவேற்பு குறைந்து கொண்டே வருவதை இந்த புள்ளி விபரங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. சிக்மா (Sigma), டெல்டா (Delta), டெல்டா ப்ளஸ் (Delta+), ஜெட்டா (Zeta) மற்றும் ஆல்பா (Alpha) என மொத்தம் 5 வேரியண்ட்களில் (Variants), மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் விற்பனை செய்யப்படுகிறது.

தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை (Price) 7.46 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 13.13 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

அவை 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகியவை ஆகும். இதுதவிர மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில் சிஎன்ஜி (CNG) வெர்ஷனும் கிடைக்கிறது. இதன் சிஎன்ஜி வெர்ஷன்களில் பொருத்தப்பட்டிருப்பது 1.2 லிட்டர் இன்ஜின் ஆகும். இந்த சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 28.51 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் , சாலையில் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் டிசைன் (Design) செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏராளமான அதிநவீன வசதிகளும் (Features) வழங்கப்படுகின்றன. இதன் சிஎன்ஜி இன்ஜின் மட்டுமல்லாது, 2 பெட்ரோல் இன்ஜின்களும் சிறப்பான மைலேஜை வழங்குகின்றன. இதன் காரணமாகவே இந்த கார் விற்பனையில் சக்கை போடு போடுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 8, 2023, 14:06 [IST]
English summary
Maruti suzuki fronx 75000 unit sales milestone all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+