இன்னோவா காரை சாதாரண மக்களால் வாங்கவே முடியாது போலையே! பெரும் புள்ளிகளுக்கு மட்டுமே என்கிற நிலைக்கு போயிருச்சு!
டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனைச் செய்துக் கொண்டிருக்கும் புகழ்பெற்ற கார் மாடல்களில் இன்னோவா கிரிஸ்டா (Toyota Innova Crysta MPV)-வும் ஒன்றாகும். இந்த காருக்கு சொகுசான மற்றும் குடும்பத்துடன் பயணத்தை மேற்கொள்ள விரும்புவோர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது.
இத்தகைய ஓர் காரின் விலையையே நிறுவனம் தற்போது உயர்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே இந்த கார் அரசியல்வாதிகள் மற்றும் செல்வந்தர்கள் மட்டுமே பயன்படுத்தும் கார் மாடலாக இருந்துக் கொண்டிருக்கின்றது. சற்று அதிக விலையில் இந்த எம்பிவி கார் விற்பனைக்குக் கிடைப்பதால் பட்ஜெட் வாகன பிரியர்களின் கனவு வாகனமாக மட்டுமே இன்னோவா க்ரிஸ்டா இருந்து வருகின்றது.

இந்த மாதிரியான சூழலிலேயே அதன் விலையை மேலும் டொயோட்டா உயர்த்தி இருக்கின்றது. ரூ. 37 ஆயிரம் இன்னோவா க்ரிஸ்டாவின் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. தேர்விற்கு ஏற்ப விலை உயர்வு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது. அதேநேரத்தில் ஆரம்ப நிலை வேரியண்டின் விலையில் டொயோட்டா எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.
ஜிஎக்ஸ் இதுவே ஆரம்ப நிலை வேரியண்ட் ஆகும். இதன் விலை ரூ. 19.99 லட்சம் ஆகும். இது எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேநேரத்தில், இதன் மிடில் வேரியண்டான விஎக்ஸ் தேர்வின் விலையில் ரூ. 35 ஆயிரம் வரையில் உயர்த்தப்பட்டு இருக்கின்றது.

இந்த தேர்வை 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் ஆப்ஷன்களில் வாங்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் தற்போதைய விலை ரூ. 24.39 லட்சம் - 24.44 லட்ச ரூபாய் ஆகும். இதைக் காட்டிலும் அதிக விலை உயர்வை இசட்எக்ஸ் எனும் வேரியண்டே பெற்றிருக்கின்றது.
இது சற்று சொகுசு வசதிகள் நிறைந்த உயர் நிலை தேர்வாக இன்னோவா கிரிஸ்டாவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ரூ. 37 ஆயிரம் வரை இதன் விலையில் உயர்வு செய்யப்பட்டு இருக்கின்றது. முன்னதாக ரூ. 25.68 லட்சத்திற்கே இந்த கார் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது.
தற்போது விலை உயர்வால் அதன் விலை ரூ. 26.05 லட்சமாக மாறி இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. பெரிய குடும்பத்தைக் கொண்டவர்களுக்கு மட்டுமல்ல வர்த்தக பயன்பாட்டிற்காக ஓட்டுபவர்கள் மத்தியிலும் இந்த காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த நிலையிலேயே இன்னோவா க்ரிஸ்டாவின் விலையில் டொயோட்டா மாற்றம் செய்திருக்கின்றது. இந்த விலை உயர்வு இன்னோவா கிரிஸ்டா பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. ஏற்கனவே பலருக்கு இந்த கார் எட்டாக் கனியாகவே இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலில் தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டு வருவது கடைசியில் இந்த வாகனத்தை கனவு வாகனமாக இருக்கச் செய்யும் பலருக்கு மாற்றும் வகையில் அமைந்திருக்கின்றது.
இன்னோவா கிரிஸ்டா 2.4 லிட்டர் டீசல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த மோட்டார் 147.51 பிஎச்பியையும், 343 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதேபோல், 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் மட்டுமே இன்னோவா கிரிஸ்டாவில் வழங்கப்படுகின்றது.
அதேவேளையில், இந்தியாவில் இருந்து விரைவில் இந்த கார் விற்பனையில் இருந்து அகற்றப்படுவதற்கான சூழல் உருவாகி இருக்கின்றது. இந்தியாவில் அமோகமான வரவேற்பை இந்த கார் பெற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்ற சூழலில் அக்காரை வெளியேற்றப்பட இருப்பதற்கான காரணம் என்ன என உங்களுக்கு கேட்கத் தோன்றலாம்.
இதற்கு அரசு விரைவில் மேற்கொள்ள இருக்கும் டீசல் கார்களுக்கு எதிரான நடவடிக்கையே ஆகும். டீசல் கார்களின் விற்பனைக்கு முழுமையான தடையை இந்திய அரசாங்கம் விதிக்க இருக்கின்றது. அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக 2027 இல் டீசல் கார்களின் விற்பனைக்கு முட்டுக் கட்டைப் போட இருப்பதாக கூறப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்னோவா கிரிஸ்டா மட்டுமல்ல இன்னும் பல கார்கள், அதாவது, டீசல் ஆப்ஷனில் மட்டும் கிடைக்கும் கார் மாடல்கள் பல சந்தையை விட்டு வெளியேறும் அபாயமே தற்போது ஏற்பட்டு இருக்கின்றது. அதேவேளையில், இந்த கார் மாடல்கள் வேறு விதமான மோட்டார்தேர்வில் விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








