ஏற்கனவே இன்னோவா மேல அரசியல்வாதிங்க பைத்தியமா இருக்காங்க! இதுல புதுசா இவ்ளோ சொகுசு வசதிகளை கொடுத்திருக்காங்களா?

அரசியல்வாதிகளின் ஃபேவரிட் கார் மாடலாக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா இருக்கின்றது. இந்த காரை வெகு விரைவில் புதிய அவதாரத்தில் டொயோட்டா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. ஏற்கனவே, இந்த காருக்கான புக்கிங் பணிகள் நாட்டில் தொடங்கிவிட்டன. ரூ. 50 ஆயிரம் முன் தொகையில் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றது.

புதிய இன்னோவா க்ரிஸ்டா ஒட்டுமொத்தமாக நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்க உள்ளது. ஜி, ஜிஎக்ஸ், விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் ஆகியவையே அந்த வேரியண்டுகள் ஆகும். இதுதவிர 7 மற்றும் எட்டு இருக்கைகள் தேர்விலும் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. அதேநேரத்தில் மோட்டாரை பொருத்தவரை புதிய இன்னோவா க்ரிஸ்டா டீசல் தேர்வில் மட்டுமே விற்பனைக்கு வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னோவா

பெட்ரோல் மோட்டார் தேர்வை விரும்புகளுக்கு இன்னோவா ஹைகிராஸ் மூலம் தங்களது தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. புதிய இன்னோவா ஹைகிராஸ் வழக்கமான பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் - பெட்ரோல் என இரு விதமான தேர்வுகளில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் வாயிலாக டீசல் வாகன பிரியர்களை மட்டும் குறியாகக் கொண்டு டொயோட்டா நிறுவனம் புதிய இன்னோவா க்ரிஸ்டாவை விற்பனைக்குக் கொண்டு வருவது தெளிவாக தெரிகின்றது.

புதிய இன்னோவா க்ரிஸ்டா ரூ. 20 லட்சம் தொடங்கி ரூ. 23 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், புதிய இன்னோவா ஹைகிராஸ் ரூ. 18.30 லட்சம் தொடங்கி ரூ. 28.97 லட்சம் வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே வேரியண்ட் வாரியாக இன்னோ க்ரிஸ்டாவில் என்ன மாதிரியான சிறப்பு வசதிகள் வழங்கப்பட உள்ளன என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.

இன்னோவா

அதாவது, எந்தெந்த வேரியண்டில் என்னென்ன மாதிரியான அம்சங்கள் இடம் பெற இருக்கின்றன என்பது பற்றியி விபரங்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த விரிவான பதிவிற்குள் போகலாம், வாங்க.

இன்னோவா க்ரிஸ்டா டீசல் மாடலின் அனைத்து வேரியண்டுகளிலும் இந்த அம்சத்தை காணலாம்

  • உடல் நிறத்திலான பம்பர்கள் முன் மற்றும் பின் பக்கத்தில்
  • உடல் நிறத்திலான எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் மற்றும் ரெட்ராக்ட் வசதிக் கொண்ட பின் பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடிகள்
  • ஓஆர்விஎம்-இல் சைடு இன்டிகேட்டர்
  • சுறாவின் துடுப்பு போன்ற அன்டென்னா
  • ரியர் விண்டோவிற்கான வைப்பர்
  • முன் பக்கத்தில் தனிப்பட்ட லைட் மற்றும் கண்ணாடி தாங்கும் ஸ்டாண்ட்
  • ஷிஃப்ட் லிவரில் லெதர் கவர்
  • கூல்டு குளோவ் பாக்ஸ்
  • உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் ஹெட்ரெஸ்ட்டுகள், பின் பக்க பயணிக்கானது
  • பவர் கதவு லாக்
  • பவர் ஸ்டியரிங் வீல் டில்ட் மற்றும் டெலிஸ்கோபிக் வசதி உடன்
  • 3 எஸ்ஆர்எஸ் ஏர் பேக்குகள் (உயர்நிலை வேரியண்டில் 7 ஏர் பேக்குகள் இருக்கும்)
  • மும்முனை சீட் பெல்ட், சீட் பெல்ட் வார்னிங் சிஸ்டத்துடன்
  • கிளட்ச் ஸ்டார்ட் சிஸ்டம்
  • திருட்டை தவிர்க்கும் ஆன்டி தெஃப்ட் சிஸ்டம், என எக்கசக்க அம்சங்கள் ஸ்டாண்டர்டு வசதிகளாக அனைத்து இன்னோவா க்ரிஸ்டாவிலும் வழங்கப்பட உள்ளது.
இன்னோவா

இன்னோவா க்ரிஸ்டா ஜி டீசல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்டில் இடம் பெறும் அம்சங்களின் விபரம்

  • கருப்பு நிற ரேடியேட்டர் கிரில்
  • மல்டி ரெஃப்ளக்டர் கொண்ட ஹெட்லேம்ப் (ஹாலோஜன்)
  • மேனுவலாக ஹெட்லேம்ப் லெவல் செய்யும் வசதி
  • ஃபுல் வீல் கேப் கொண்ட ஸ்டீல் வீல்கள்
  • வெள்ளி நிற ஆபரத்துடன் கூடிய ஸ்டியரிங் வீல்
  • பன்முக தகவல்களை வழங்கக் கூடிய திரை உடன் கூடிய ஸ்பீடோமீட்டர்
  • டிரைவருக்கான தகவலை வழங்கும் எம்ஐடி திரை
  • மேனுவல் கன்ட்ரோல் கொண்ட ஏசி சிஸ்டம்
  • இரண்டாவது வரிசை இருக்கைகளுக்கு ஆர்ம் ரெஸ்ட்
  • கருப்பு நிற துணியால் ஆன இருக்கை கவர்
  • பவர் விண்டோ, உள்ளிட்ட எக்கசக்க அம்சங்களை இதில் காண முடியும்.

க்ரிஸ்டா ஜிஎக்ஸ் டீசல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்டில் இடம் பெறும் அம்சங்களின் விபரம்

  • சில்வர் மற்றும் கருப்பு நிற ரேடியேட்டர் கிரில்
  • ஹெட்லேம்ப் ஓர்னமென்ட் க்ரோம்
  • ஹெட்லேம்பை மேனுவலாக அட்ஜெஸ்ட் செய்யும் வசதி
  • பின் பக்க கதவின் அழகிற்காக குளாஸ் கருப்பு நிற பேனல்
  • ஓஆர்விஎம்மில் வரவேற்பை வழங்கும் லைட்
  • கருப்பு நிற வெளிப்பக்க ஃப்ரேம்
  • பன்முக இன்ஃபர்மேசன்களை வழங்கும் எம்ஐடி திரை
  • டாட் ரக எம்ஐடி
  • சன் விஷர், மிர்ரர், லிட் மற்றும் லேம்ப்
  • மேனுவல் கன்ட்ரோல் கொண்ட ஏசி சிஸ்டம்
  • இரண்டாம் வரிசை இருக்கையாளர்களுக்கான ஹேண்ட் ரெஸ்ட்
  • கருப்பு நிற இருக்கைகள்
  • ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே
  • 4 ஸ்பீக்கர்கள்
  • ஒயர்லெஸ் டூர் லாக் மற்றும் அன்லாக் சிஸ்டம்
  • செல்போனுக்கு வரும் அழைப்பை ஏற்றல், ஆடியோ சிஸ்டத்தை கன்ட்ரோல் செய்தல் போன்ற வசதிக் கொண்ட ஸ்டியரிங் வீல்
  • பவர் விண்டோ
  • மைக்ரோஃபோன் ஆம்பிளிஃபையர், உள்ளிட்ட அம்சங்களே இந்த தேர்வில் வழங்கப்பட்டு இருக்கும்.
இன்னோவா

இன்னோவா க்ரிஸ்டா விஎக்ஸ் டீசல் எம்டி வேரியண்ட்

  • பிரீமியம் கருப்பு மற்றும் குரோம் நிற க்ரில்
  • ஆட்டோமேட்டிக் எல்இடி புரஜெக்டர் ரக ஹெட்லேம்ப்
  • ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் லெவலிங் வசதி
  • முன் மற்றும் பின் பக்கத்தில் பனி மின் விளக்கு
  • ஓஆர்விஎம்-இல் வரவேற்பு வழங்கும் லைட்
  • டைம் அட்ஜஸ்ட் மற்றும் மிஸ்ட் வசதிக் கொண்ட முன் பக்க வைப்பர்
  • டிஃபாக்கர் வசதிக் கொண்ட பின் பக்க விண்டோ
  • ப்ளூ ஆம்பியன்ட் லைட்
  • உட் ஃபினிஷ்டு மற்றும் குரோம் அலங்காரம் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் பேனல்
  • டிஎஃப்டி மல்டி இன்ஃபர்மேஷன் திரை
  • டிஎஃப்டி எம்ஐடி
  • ஆட்டோமேட்டிக் ஏர் கன்டிஷனிங்
  • 6 ஸ்பீக்கர்கள்
  • ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே
  • வேகத்தைப் பொருத்து கதவை லாக் செய்யும் திறன்
  • க்ரூஸ் கன்ட்ரோல்
  • யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்
  • மைக்ரோஃபோன் மற்றும் ஆம்பிளிஃபையர் வசதி
  • ஐசேோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கை
  • திருட்டை தவிர்க்கும் தொழில்நுட்பம், சைரன் வசதியுடன் என எக்கசக்க அம்சங்கள் இன்னோவா க்ரிஸ்டா விஎக்ஸ் டீசல் எம்டி வேரியண்டில் வழங்கப்பட்டு இருக்கும்.

இன்னோவா க்ரிஸ்டா இசட்எக்ஸ் டீசல் எம்டி வேரியண்ட்

இந்த வேரியண்டில் அதிகளவில் சிறப்பு வசதிகளை டொயோட்டா வாரி வழங்கி இருக்கின்றது. மேலே பார்த்த அம்சங்களுடன் கூடுதல் சில சிறப்பு அம்சங்களை அது வழங்கி இருக்கின்றது. அவற்றின் பட்டியல் இதோ:

  • கேப்டைன் ரக இருக்கை (இரண்டாவது வரிசையில்)
  • இன்டைரக்ட் ப்ளூ ஆம்பியன்ட் லைட்
  • சில்வர் மற்றும் உட் ஃபினிஷ்டு ஸ்டியரிங் வீல்
  • ஸ்லைடு மற்றும் ரெக்லனை வசதிக் கொண்ட முன் பக்க இருக்கை,
  • டிரைவருடைய இருக்கை 8 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதி,
  • வெப்பத்தை தவிர்க்கும் வசதிக் கொண்ட முன் மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகள்
  • பிரீமியம் தர லெதர் போர்வைகள் கொண்ட இருக்கைகள்
  • ப்ளூடூத் இணைப்பு வசதி
  • பிரீமியம் தர ஆடி சிஸ்டம் என பல்வேறு சிறப்பு வசதிகள் இன்னோவா க்ரிஸ்டா இசட்எக்ஸ் டீசல் எம்டி வேரியண்டில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 16, 2023, 15:09 [IST]
English summary
Toyota innova crysta varient wise feature details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X