40 கி.மீ மைலேஜ் உள்ள கார் மாதிரி 6 கார்! நீங்க ஃபேமிலியாக போறதுக்காக வருது! ஒவ்வொன்னும் தரமா இருக்குதே!

இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்கும் கார்களுக்கான மவுசு அதிகமாக இருக்கும் நிலையில் அடுத்தடுத்து மாருதி, கியா, மஹிந்திரா, டாடா மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்கள் குடும்பத்துடன் பயணிக்கும் கார்களை அறிமுகப்படுத்த உள்ளனர். அதில் ரூபாய் 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனையாகும் கார்களை பற்றிய விவரங்களை இங்கே காணலாம்

இந்திய மக்கள் தற்போது கார் வாங்கும் போது தங்கள் குடும்பத்துடன் பயணிப்பதற்காகவே அதிகமாக கார்களை வாங்கி வருகின்றனர். குறைந்த விலையில் குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற கார்களின் விற்பனை அதிகமாக இருக்கிறது. இதனால் வாகனம் தயாரிப்பு நிறுவனங்களும் இப்படியான கார்களை அதிகம் தயாரிக்க துவங்கி விட்டன. நீங்கள் இப்படி குடும்பத்துடன் பயணிக்கும் கார்களை வாங்கும் ஐடியாவில் இருந்தால் அடுத்து வரவுள்ள இந்த பட்டியலின் 6 கார்களை தேர்வு செய்யலாம்.

upcoming family cars under 10 lakhs

Popular Articles: சிங்கிள் சார்ஜில் 630 கிமீ ஓடும் எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! சண்முகம் வண்டிய நேரா ஷோரூமுக்கு விடு!

புதிய தலைமுறை ஸ்விஃப்ட்: மாருதி நிறுவனம் தனது ஸ்விஃப்ட் காரை அப்டேட் செய்து அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த கார் கடந்த மாதம் ஜப்பான் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டது. வெளிப்புற வடிவமைப்பு மாற்றத்துடன் மட்டுமல்லாமல் ஹைபிரிட் இன்ஜின் ஆப்ஷனுடனும் அப்டேட் செய்யப்பட்டு விற்பனைக்கு வரவுள்ளது. இதில் 1.2லிட்டர் ஸ்டிராங் ஹைபிரிட் இன்ஜின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கார் லிட்டருக்கு 40கிமீ வரை மைலேஜ் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமுறை டிசையர்: மாருதி நிறுவனம் தனது ஸ்விஃப்ட் காரை அப்டேட் செய்வது போல தனது டிசையர் காரையும் அப்டேட் செய்கிறது. இந்த காரிலும் ஸ்விஃப்ட் காரில் செய்யப்பட்ட அதே மாற்றங்கள் எதுவும் செய்யப்பட உள்ளன. இந்த காரிலும் 1.2லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஸ்டிராங் ஹைபிரிட் சிஸ்டம் இணைக்கப்பட்ட வெர்ஷன் வர உள்ளது. இதுவும் நல்ல மைலேஜ் தரும் காராக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

upcoming family cars under 10 lakhs

கியா சோனட் பேஸ்லிஃப்ட்: இந்த 2020-ம் ஆண்டு அறிமுகமான கியா சோனட் கார் தற்போது ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை பெறப்போகிறது. வெளிப்புற மாற்றங்கள் செய்யப்பட்ட இந்த கார் தற்போது இந்தியாவில் பல்வேறு இடங்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் ஸ்பை புகைப்படங்கள் பல முறை சமூகவலைத்தளங்களில் வெளியாகியுளளது.

இதில் புதிய ஹெட்லைட் அசெம்பிளி, அலாய் வீல்கள் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பின்பக்க பகுதி மற்றும் உட்புற அப்டேட்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், மேம்படுத்தப்பட்ட டிரைவிங் எக்ஸ்பீரியன்ஸ் ஆகியவை அப்டேட் செய்யப்படுகிறது. இதன் இன்ஜின் ஆப்ஷனில் எந்தவித மாற்றமும் இல்லாமல் பல்வேறு வேரியன்ட்களுடன் இந்த கார் விற்பனைக்கு வர உள்ளது.

upcoming family cars under 10 lakhs

மஹிந்திரா எக்ஸ்யூவி 300: மஹிந்திரா எக்ஸ்யூவி 300 கார் விரைவில் பல்வேறு அப்டேட்களை பெற்று 2024-ம் ஆண்டு முதல் பகுதியிலேயே அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் ஸ்பை புகைப்படங்களை வைத்து பார்க்கும் போது புதிய எல்இடி டெயில் லைட், ஹெட்லைட் ஆகியன இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் புதிய உட்புற கட்டமைப்புடன் இந்த கார் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா பஞ்ச் இவி: டாடா நிறுவனம் தனது பஞ்ச் காரை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த கார் குறித்த பல்வேறு ஸ்பை புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. முக்கியமாக இந்த காரில் 10.25இன்ச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற உள்ளது. இந்த காரின் பேட்டரி குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இந்த கார் முழு சார்ஜில் 500கிமீ வரை பயணிக்கும் ரேஞ்ச் கொண்ட காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

upcoming family cars under 10 lakhs

டொயோட்டா டைசர்: மாருதி மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்களுக்கு இடையே உள்ள ஒப்பந்தத்தின்படி மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் காரை ரீபேட்ஜ் செய்து டொயோட்டா நிறுவனம் டைசர் என்ற பெயரில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. அதன்படி ஃபிராங்க்ஸ் காரில் சில மாற்றங்களை செய்து அதே இன்ஜின் ஆப்ஷன் உடன் இந்த டைசர் கார் 2024-ம் ஆண்டு முதல் பாதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்கும் கார்களுக்கான மவுசு அதிகமாக இருக்கிறது. கார் வாங்கும் மக்கள் பலர் தங்கள் குடும்பத்தினரை காரில் அழைத்துச் செல்லவே அதிக விருப்பப்படுகின்றனர். அதனால் அடுத்து வர உள்ள இந்த கார்களில் விற்பனை நிச்சயம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். நீங்கள் இந்த காரில் எதை வாங்குவீர்கள் என கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, November 27, 2023, 13:53 [IST]
English summary
Upcoming family cars under 10 lakhs new swift punch ev
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X