இந்த 3 கார் வந்துச்சுன்னா ரெனால்ட் ரேஞ்சே வேற! மாருதியை எல்லாம் மக்கள் மறந்துடுவாங்க!
ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் தனது கார்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த முடிவு செய்துள்ளது. அதற்காக புதிய கார்களை இந்திய மார்க்கெட்டில் களம் இறக்க தயாராகி வருகிறது. இப்படியாக இந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் போகும் மூன்று முக்கியமான புதிய கார்கள் குறித்த விபரங்களை தான் நாம் இங்கே காண போகிறோம்.
இந்தியாவில் தனது கார்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த புதிய கார்களை களம் இறக்க முடிவு செய்துள்ளது. இதற்காக ரெனால்ட் நிஸான் கூட்டணி இந்தியாவில் ரூபாய் 5300 கோடியை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஆறு புதிய கார்களை களம் இறக்க இந்நிறுவனம் முடிவு செய்தது, அதில் மூன்று கார்கள் முக்கியமான கார்களாக உள்ளன. அந்த கார்களை பற்றி இங்கே காணலாம்.

புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர்: ரெனால்ட் நிறுவனம் இரண்டாவது தலைமுறை ரெனால்ட் காரை விட்டுவிட்டு நேரடியாக மூன்றாவது தலைமுறை டஸ்டர் காரை இந்தியா மார்க்கெட்டிற்கு அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. சமீபத்தில் தான் இந்த கார் ஐரோப்பா மார்க்கத்திற்கு அறிமுகமானது. இந்த கார் இந்தியாவில் 2025-ம் ஆண்டு இரண்டாம் பாதியில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கார் சிஎம்எஃப்-பி பிளாட்பார்மில் உருவாக்கப்பட உள்ளது. இந்தியாவிற்கு இந்த கார் வரும்போது 130 பிஎச் பீ பவர் கொண்ட மைல்டு மற்றும் ஸ்ட்ராங் ஹைபிரிட் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அளவுகளை பொருத்தவரை 4.34 மீட்டர் நீளமும் 29மிமி கிரவுண்ட் கிளையரன்ஸ் கொண்ட காராக இந்த கார் விற்பனைக்கு வரலாம். முக்கியமாக இதில் 5 மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெனால்ட் க்விட் டிவி : ரெனால்ட் நிறுவனம் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. அதில் எலெக்ட்ரிக் க்விட் கார் ஒரு முக்கியமான பங்கை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் இந்தியாவிற்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் ஏற்கனவே சர்வதேச மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது
இந்த காரை டேஷிகா நிறுவனம் ஸ்பிரிங் இவி என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறது. குறைந்த விலை மார்கெட்டை குறி வைத்து ரெனால்ட் நிறுவனம் இந்த காரை களம் இறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் களமிறங்கும் போது இந்தியாவில் விற்பனை ஆகும் எம்ஜி கோமெட் ஆகிய கார்களுக்கு போட்டியாக களமிறங்கும் என எதிர்பார்க்கலாம்.

நிஸான் மேக்னைன் இ-டெக் எலெக்ட்ரிக் கிராஸ் ஓவர்: கடந்த 2021-ம் ஆண்டு சர்வதேச அளவில் நடந்த ஒரு ஆட்டோமொபைல் கண்காட்சியில் காரை நிஸான் நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்தது. இந்த கார் ஒரு எலெக்ட்ரிக் கிராஸ் ஓவர் காராக இந்தியாவில் அறிமுகப்படுத்த இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே இந்த காரை இந்நிறுவனம் முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யலாமா என ஆலோசனை செய்து வருகிறது. இந்த கார் சிஎம்எஃப்-பி பிளாட்பார்மை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட காராகும் இதே பிளாட்பார்ம் தான் இந்தியாவிலும் உருவாக்கப்படுவதால் அதை வைத்து இந்த காரை தயாரித்து விடலாம் என இந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

இந்த கார் இந்தியாவிற்கு வரும்போது ரெனால்ட் நிறுவனத்தின் மீது மக்களுக்கு மிகப்பெரிய அளவில் நம்பிக்கையை கிடைக்கும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கார் இரண்டு விதமான பேட்டரி பேக் ஆப்ஷன் உடன் விற்பனைக்கு வருகிறது. அதிக ரேஞ்ச் கொண்ட காராக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
40 கிலோ வாட் ஹவர் மற்றும் 60 கிலோ வாட் ஹவர் என இரண்டு பேட்டரி பேக்குகள் உள்ளன. இதன் மூலம் இந்த கார் அதிகபட்சமாக 470 கிலோ மீட்டர் வரை ஒரே சார்ஜில் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் விரைவில் இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் என நாம் எதிர்பார்க்கலாம்.
இந்த மூன்று கார்கள் தான் ரெனால்ட் நிறுவனம் மிக விரைவாக இந்தியாவிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ள கார்களாக இருக்கின்றன. ரெனால்ட் நிறுவனத்திலும் தற்போது கார்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதால் நிறுவனத்தால் பெரிய அளவில் விற்பனையை பெற முடியவில்லை. இந்த காரல் களமிறகும் போது நிறுவனத்தின் விற்பனை மெல்ல மெல்ல அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2030-ம் ஆண்டிற்குள் ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக மாற ஏகப்பட்ட வாய்ப்புகள் உள்ளன. இதற்கான திட்டத்தை தான் ரெனால்ட் நிறுவனம் செய்து வருகிறது. அந்நிறுவனம் முதலீடு செய்து புதிய பிளாட்பார்மை இந்தியாவிற்கு கொண்டு வந்து கார்களை தயாரித்த பின்பு இந்த வளர்ச்சியை பெரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.


Click it and Unblock the Notifications









