இந்தியாவில் டொயோட்டாவின் நிலைமை இப்படி மாறும்னு எதிர்பார்க்கல! இன்னோவா தான் எல்லாருடைய டார்க்கெட்டே!!

டொயோட்டா (Toyota) ஜப்பான் (Japan)-ஐ சேர்ந்த உலகளவில் பிரபலமான முன்னணி கார் நிறுவனம். சுஸுகி (Suzuki) உடன் கூட்டணியில் இருக்கும் டொயோட்டா, இந்தியாவில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) உடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. பிரபலமான மாருதி கார்களை பின்பற்றி தனது கார்களை உருவாக்கிவரும் டொயோட்டா, அதன் மூலமாக ஒவ்வொரு மாதமும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்கிறது. அந்த வகையில் கடந்த நவம்பர் (November) மாதத்திலும் 25 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை டொயோட்டா விற்பனை செய்துள்ளது.

இந்தியாவில் டொயோட்டா கார்களுக்கு என்றே பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. குறிப்பாக, இன்னோவா மற்றும் ஃபார்ச்சூனர் (Fortuner) காரை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்பது நம்மில் நிறைய பேரது ஆசையாக உள்ளது. இதன் மூலமாக, டொயோட்டா நிறுவனத்தின் கார்கள் விற்பனை சமீப மாதங்களாக சிறப்பாக இருந்து வருகிறது. நடந்த முடிந்த 2024 நவம்பர் மாதத்திலும் கூட தான்.

toyota car november sales report

டொயோட்டா கடந்த 2024 நவம்பர் மாதத்தில் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 183 ஆகும். இந்த எண்ணிக்கையின் மூலமாக, இந்தியாவில் கடந்த நவம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த நிறுவனமாக டொயோட்டா 5வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வெறும் 16 ஆயிரத்து 924 கார்களை மட்டுமே டொயோட்டா விற்பனை செய்திருந்தது.

இந்த வகையில் பார்த்தால், டொயோட்டா கார்கள் விற்பனை ஆனது 49% அதிகரித்துள்ளது. ஆனால், கடந்த 2024 அக்டோபர் (October) மாதத்தில் 28 ஆயிரத்து 183 கார்களை டொயோட்டா விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், அக்டோபரை காட்டிலும் நவம்பரில் 3 ஆயிரம் கார்கள் குறைவாக விற்பனை செய்துள்ளது. தீபாவளி, தசரா உள்ளிட்ட பண்டிகை நாட்கள் இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

toyota car november sales report

கடந்த நவம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டொயோட்டா கார், இன்னோவா ஆகும். இன்னோவா கிரிஸ்ட்டா (Innova Crysta) மற்றும் இன்னோவா ஹைகிராஸ் (Innova Hycross) என 2 விதமான இன்னோவா கார்கள் விற்பனை செய்யப்படும் நிலையில், இவை மொத்தமாக கடந்த நவம்பர் மாதத்தில் 7 ஆயிரத்து 867 கார்கள் விற்பனை செய்யபட்டுள்ளன. இது 2023 நவம்பரில் விற்பனை செய்யப்பட்ட இன்னோவா கார்களின் எண்ணிக்கையை காட்டிலும் 14% அதிகமாகும்.

ஆனால், 2024 அக்டோபரை காட்டிலும் 29% குறைவு. இன்னோவா கார்களுக்கு அடுத்து, கடந்த நவம்பர் மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டொயோட்டா கார், அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Urban Cruiser Hyryder) ஆகும். டொயோட்டாவின் மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) காரான அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கடந்த மாதத்தில் 4,857 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது 2023 நவம்பரை காட்டிலும் சுமார் 62% அதிகமாகும்.

toyota car november sales report

ஆனால், அக்டோபரை காட்டிலும் நவம்பரில் ஹைரைடர் கார்கள் விற்பனை ஆனது 11% குறைந்துள்ளது. டொயோட்டாவின் விலை குறைவான ஹேட்ச்பேக் (Hatchback) காரான கிளான்ஸா (Glanza) கடந்த நவம்பர் மாதத்தில் 3 ஆயிரத்து 806 யூனிட்களும், டொயோட்டாவின் காம்பெக்ட் எஸ்யூவி (Compact SUV) காரான டைசர் (Taisor) 3 ஆயிரத்து 620 யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அக்டோபரை காட்டிலும் நவம்பரில் கிளான்ஸா கார்கள் விற்பனை ஆனது 4 சதவீதம் குறைந்துள்ளது என்றாலும், டைசர் காரின் விற்பனை 17 சதவீதம் அதிகரித்துள்ளது. ஃபார்ச்சூனர் கார்கள் கடந்த நவம்பர் மாதத்தில் 2,865 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2023 நவம்பரை காட்டிலும் ஃபார்ச்சூனர் கார்கள் விற்பனை 53% அதிகரித்துள்ளது. மாருதி சுஸுகி எர்டிகா காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட டொயோட்டா ரூமியன் (Rumion) 1,803 கார்கள் கடந்த நவம்பரில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை இல்லாமல், 149 ஹைலுக்ஸ் பிக்-அப் டிரக் வாகனங்கள், 130 காம்ரி ஹைப்ரீட் செடான் கார்கள் மற்றும் 89 வெல்ஃபையர் சொகுசு கார்களையும் கடந்த மாதத்தில் டொயோட்டா விற்பனை செய்துள்ளது. அக்டோபரை காட்டிலும் கடந்த நவம்பர் மாதத்தில் டொயோட்டா கார்கள் விற்பனை சற்று குறைந்திருப்பினும், டொயோட்டா நிறுவனம் அதற்கு பெரியதாக கவலைப்படாது என்றே நினைக்கிறோம். ஏனெனில், கடந்த ஆண்டு அக்டோபரை காட்டிலும் இந்த ஆண்டு அக்டோபரில் கிட்டத்தட்ட அனைத்து டொயோட்டா கார்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, December 15, 2024, 21:48 [IST]
English summary
Toyota car sales report of november 2024 innova hyryder glanza taisor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X